மேகதாது அணை விவகார நிலைப்பாடு என்ன?.. கர்நாடகா புதிய முதல்வர் பசுவராஜ் பொம்மை பரபரப்பு பேட்டி!
பெங்களூரு: கடந்த சில வாரங்களாக கர்நாடக அரசியலில் பரபரப்பான சூழ்நிலை நிலவியதால் மேகதாது அணை விவகாரம் சற்று தணிந்து இருந்தது. கர்நாடகாவில் புதிய முதல்வராக பசுவராஜ் பொம்மை பதவியேற்றுள்ளார்.
Recommended Video
தமிழ்நாடு-கர்நாடகா இடையே மேகதாது அணை விவகாரம் பற்றி எரிய கர்நாடகா முன்னாள் முதல்வர் எடியூரப்பா மூல காரணமாக இருந்தார்.
''பெங்களுரு குடிநீர் பிரச்சினையை தீர்த்து வைப்பதற்காக மத்திய அரசு அனுமதி அளித்தவுடன் மேகதாது அணை திட்டத்தை தொடங்குவோம்'' என்று எடியூரப்பா சர்ச்சை பேட்டி அளித்து பிரச்சினையை தொடங்கி வைத்தார்.

விவசாயிகள் அதிர்ச்சி
ஒப்பந்த விதிகளின்படி காவிரியில் இருந்து தமிழ்நாடு தண்ணீர் பெற்று வருகிறது. இந்த காவிரி நீர்தான் டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு உயிர்நாடியாக இருக்கிறது. ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் மேகதாது அணை தொடர்பாக வழக்கு உள்ளதால், கர்நாடக அரசின் பிடிவாதத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் காவிரி நீரையே நம்பி இருக்கும் டெல்டா மாவட்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

ஓரணியில் கட்சிகள்
''மேகதாது அணை கட்டக்கூடாது. இது நல்லுறவுக்கு உகந்த சூழ்நிலை அல்ல'' என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், எடியூரப்பாவுக்கு அதிரடி பதில் கொடுத்தார். காவிரி மேலாண்மை வாரியத்திலும் தமிழ்நாடு தங்களது கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து இருந்தது. மேலும், மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாட்டில் ஆளும் கட்சி, எதிர்க்க்கட்சி என அனைத்து கட்சிகளும் ஓன்று சேர்ந்தன.

பிரதமருக்கு கடிதம்
தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளும் ஓன்று சேர்ந்து மேகதாது அணை கட்ட முடிவெடுத்து இருக்கும் கர்நாடகா அரசுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றியது. பின்னர் இந்த தீர்மான நகலை கட்சிகளின் பிரதிநிதிகள் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் மத்திய நீர்வளத்துறை அமைச்சரிடம் ஒப்படைத்தனர். மேகதாது அணை திட்டத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலினும் கடிதம் எழுதினார்.

பசுவராஜ் பொம்மை கூறுவது என்ன?
இந்த நிலையில் மேகதாதுவில் அணை கட்டும் கர்நாடகாவின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று கர்நாடகா புதிய முதல்வர் பசுவராஜ் பொம்மை கூறியுள்ளார். புதிய முதல்வராக பொறுப்பேற்ற பிறகு செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த அவர், '' பிரதமர் நரேந்திர மோடியிடம் அனுமதி பெற்று மேகதாதுவில் அணை கட்டும் பணிகள் தொடங்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை. காவிரி உபநீரை பயன்படுத்துவதில் எங்களுக்கு முழு உரிமையும் இருக்கிறது. இதனை யாரும் தடுக்க முடியாது'' என்று பசுவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications