தனி நாடுதான் கேக்கனும்! டிகே சிவக்குமாரின் தம்பி கருத்தால் வெடித்தது சர்ச்சை.. வரிந்து கட்டும் பாஜக

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் குறித்து கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமாரின் தம்பியும் எம்.பியுமான டிகே சுரேஷ் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பாஜகவும் விமர்சித்து கருத்து தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் உரையுடன் நேற்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் விரைவில் வெளியிட இருக்கிறது. இதனால், இன்று இடைக்கால பட்ஜெட் செய்யப்பட்டது. தேர்தல் முடிந்த பிறகு அமையும் புதிய அரசு, முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளது. பட்ஜெட் தயாரிப்பு பணிகளை கடந்த சில மாதங்களுக்கு முன்பே மத்திய நிதி அமைச்சகம் தொடங்கியது.

 DK Suresh demands separate country for South India BJP MP Tejasvi Surya accuses Congress

பட்ஜெட் தயாரிப்புக்கான பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது. பட்ஜெட் ஆவணங்கள் அச்சிடும் பணி கடந்த சில தினங்களுக்கு முன் தொடங்கியது. அன்று மத்திய நிதி அமைச்சக அலுவலகத்தில், அல்வா தயாரிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தான் இன்று காலை 11 மணிக்கு நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார்.

பட்ஜெட் தாக்கல்: பெண் தொழில் முனைவோர்களுக்கு இதுவரை 34 கோடி முத்ரா யோஜனா கணக்குகள் உருவாக்கப்பட்டு கடன்கள் வழங்கப்பட்டுள்ளன. இளைஞர்களுக்கு 22.5 லட்சம் கோடி தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்பட்டது நாட்டின் பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது. 7 ஐஐடி, 7 ஐஐஎம், 15 எய்ம்ஸ் மருத்துவமனைகள் தொடங்கப்பட்டுள்ளன பெண் தொழில்முனைவோருக்கு 30 கோடி முறை கடனுதவி பெண் தொழில் முனைவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது 43 கோடி இளைஞர்களுக்கு தொழில் தொடங்க கடனுதவி வழங்கப்பட்டது என்று பேசினார்.

தனி நாடு கேட்பதை தவிர: இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிகள் மத்திய அரசின் பட்ஜெட் பயனற்றது என தெரிவித்து இருந்தது. இந்த நிலையில், மத்திய பட்ஜெட் குறித்து கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமாரின் தம்பியும் எம்.பியுமான டிகே சுரேஷ் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. டிகே சுரேஷ் கூறுகையில், "தென் இந்தியாவிற்கு அநீதி இழைக்கப்படுகிறது. தென் இந்தியாவிற்கு வர வேண்டிய நிதி வட இந்தியாவுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. இதனால் தனி நாடு கேட்பதை தவிர வேறு வழியில்லை" என்றார்.

பாஜக பதிலடி: டிகே சுரேஷின் இந்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது தொடர்பாக பாஜகவின் தேஜஸ்வி யாதவ் கூறுகையில், "பிரித்தாளும் வரலாறுதான் காங்கிரஸ் கட்சிக்கு உள்ளது. தற்போது தெற்கையும் வடக்கையும் பிரிக்க வேண்டும் என்று அந்தக் கட்சியின் எம்பி டிகே சுரேஷ் அதே யுக்தியை மீண்டும் எடுத்துள்ளார். மோடி ஆட்சியின் கீழ்தான் கர்நாடகாவுக்கு வரி பகிர்வு அதிகரிக்கப்பட்டது.

தேசத்தை உடைப்பதாக: ஒருபக்கம் ஜோடோ யாத்திரையின் கீழ் தேசத்தை ஒருங்கிணைக்க போவதாக அவர்களின் தலைவர் ராகுல் காந்தி கூறி வருகிறார். மறுபக்கம் அந்த கட்சியின் எம்பி, தேசத்தை உடைப்பது தொடர்பாக பேசி வருகிறார். பிரித்து ஆள வேண்டும் என்ற காங்கிரஸ் கட்சியின் சிந்தனை காலனித்துவவாதிகள் பின்பற்றியதை விட மோசமானது. கர்நாடக மக்கள் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். லோக்சபா தேர்தலில் தக்க பதிலடியை இதற்கு நாங்கள் கொடுப்போம்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+