மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு.. காங்கிரஸ் அலுவலகத்தில் அமலாக்கத் துறை ரெய்டு - 'பரபர' பின்னணி
பெங்களூர்: மங்களூர் குக்கர் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் அலுவலகம் அமைந்திருக்கும் கட்டிடத்தில் அமலாக்கத் துறையினர் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
கர்நாடகாவில் 5 இடங்களில் நடந்த இந்த சோதனையில் இந்த வழக்கு தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான ஷாரிக், தீவிரவாத தாக்குதல்களை அரங்கேற்ற யார் - யாரிடம் பணத்தை கைமாற்றியுள்ளான் என்பதை கண்டறிய சோதனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

நாட்டை உலுக்கிய குண்டுவெடிப்பு
கர்நாடகா மாநிலம் மங்களூருவில் கடந்த நவம்பர் மாதம் 19-ம் தேதி ஆட்டோ ஒன்றில் குக்கர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த குண்டுவெடிப்புக்கு காரணமான முகமது ஷாரிக் (27) தற்போது என்ஐஏ காவலில் உள்ளார். இதனிடையே, அவரது செல்போனை என்ஐஏ அதிகாரிகள் ஆராய்ந்த போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. முகமது ஷாரிக் தனது உண்மையான பெயரை மறைத்து வேறு பெயருடன் கோவை, மதுரை, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட இடங்களை சுற்றி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் அந்த இடங்களில் நாசவேலையில் ஈடுபட சதி செய்ததை என்ஐஏ போலீஸார் கண்டுபிடித்தனர்.

ஷாரிக் உருவாக்கிய 'ல்லீப்பர் செல்கள்'
மேலும், செல்போனில் ஆபாசப் படங்களை அனுப்பி சில இளைஞர்களை இழுத்து பின்னர் அவர்களை ஸ்லீப்பர் செல்களாக முகமது ஷாரிக் மாற்றியிருப்பதும் தெரியவந்தது. மங்களூர் கடலோரப் பகுதிகளில் இதுபோல 40 ஸ்லீப்பர்கள் செல்கள் இருப்பதும் என்ஐஏ போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். அவர்களுக்கு ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு வழங்கப்படுவதை போல வெடிகுண்டு பயிற்சிகளையும் ஷாரிக் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அந்த ஸ்லீப்பர் செல்களை கண்டுபிடிக்கும் பணியில் என்ஐஏ அதிகாரிகளும், கர்நாடகா போலீஸாரும் ஈடுபட்டுள்ளனர். இதில் பலர் ரகசியமாக கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடி ரெய்டு
இந்த சூழலில், மூளைச்சலவை செய்யப்பட்ட இந்த ஸ்லீப்பர் செல்களுக்கு லட்சக்கணக்கில் சட்டவிரோதமாக ஷாரிக் பணம் அனுப்பியதாகவும், தீவிரவாத நாசவேலைகளில் ஈடுபடுவதற்காக அந்தப் பணம் அனுப்பபட்டதாகவும் என்ஐஏ அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததது. இதனை அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு என்ஐஏ தெரிவித்தது. இதன்பேரில், என்ஐஏவால் அடையாளம் காணப்பட்ட கர்நாடகாவில் உள்ள 5 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.

காங். அலுவலக கட்டிடத்தில் ரெய்டு
அதன் ஒருபகுதியாக, மங்களூரில் உள்ள கட்டிடத்திலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அந்தக் கட்டிடத்தில் தான் காங்கிரஸ் கட்சி அலுவலகமும் இயங்கி வருகிறது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் காணப்பட்டது. சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக அங்கு சோதனை நடத்தப்பட்டது. எனினும், அந்தக் கட்டிடத்தில் உள்ள வேறு அலுலகங்களில்தான் இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும், எந்தக் கட்சி அலுவலகத்திலும் சோதனை நடைபெறவில்லை எனவும் அமலாக்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications