இதுதான் சுயமரியாதை.. கொதித்து போய்.. வேலைக்கு சேர்ந்த முதல் நாளே ராஜினாமா செய்த கர்நாடகா இளைஞர்
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்தில் ஊக்கத்தொகை இன்றி, அலுவலக வேலை நேரத்தையும் தாண்டி பணி செய்ய வேண்டும் என மேனேஜர் எதிர்பார்த்த காரணத்தால், பணியில் சேர்ந்த முதல் நாளே வேலையை ராஜினாமா செய்துள்ளார். ஸ்ரேயாஸ் என்ற இளைஞர் இதுபற்றி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அசோசியேட் ப்ராடக்ட் டிசைனரான அவர் சந்தித்த அனுபவத்தை விரிவாக விவரித்துள்ளார்.
இன்றைக்கு ஐடி துறை உள்பட பல்வேறு துறைகளில் தொழிலாளர்களின் நலனை பற்றி சுத்தமாக கவலைப்படுவதே இல்லை.. பல மணி நேரம் வேலை செய்ய வைப்பது. டார்கெட், டார்கெட் என்று ஓடுவது, அதற்கான மன அழுத்ததுடன் வேலை செய்வது என்பதுதான் பல தொழில்களில் வேலைமுறையாக மாறிவிட்டது. பல மணி நேரம் வேலை செய்தாலும், அதற்காக எந்த பலனும் இல்லாத நிலை இருக்கிறது. ஊதிய உயர்வு, போனஸ், ஊக்கத்தொகை என எதுவுமே இல்லாமல் கொத்தடிமை போல் வேலை செய்ய வைக்கும் நிறுவனங்கங்கள் பல உள்ளன. இந்த பிரச்சனையால் பலர் வேலையை விட்டு உடனே வெளியேறுவதும் உண்டு.

அப்படித்தான் கர்நாடகா மாநிலத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வரும் டிசைனர் ஸ்ரேயாஸ், வேலைக்கு சேர்ந்த அன்றே வேலையை விட்டு வெளியேறினார், அவரது மேனேஜர் வேலை நேரத்தை தாண்டி. ஊதியம் இல்லாமல் வேலை செய்ய வேண்டும் என்று கோரினாராம். வேலை-வாழ்க்கை சமநிலையின் கருத்தில் கொள்ள வேண்டும் என்று அவர் கூறியதை பகட்டுக்காக சொல்வது என்றும், மேற்கத்திய கலாச்சாரம் என்று கேலி செய்தாராம். மேலும் நள்ளிரவு வரை வேலை செய்ய வேண்டும் என்று வற்புறுத்தியதால் கோபம் அடைந்த டிசைனர், அன்றே வேலையை விட்டு நின்றுள்ளார்.
இதுபற்றி ஸ்ரேயாஸ், ரெட்டிட் தளத்தில் கூறும் போது, " நான் வேலைக்கு சேர்ந்த முதல் நாளான அக்டோபர் 7 ஆம் தேதி அன்று, எனது நிறுவனத்தின் மேலாளர், ஊக்கத்தொகை இன்றி, அலுவலக வேலை நேரத்தையும் தாண்டி பணி செய்ய வேண்டு கூறினார். நான் அவரிடம் 'வேலை-வாழ்க்கை சமநிலை' பற்றி பேசினேன். அதற்கு அவர் என்னை மிகவும் கேலி செய்தார், அதை 'பேன்சி டேர்ம்' என்றும், 'மேற்கத்திய கலாச்சாரம' என்றும் விமர்சித்தார் . வேலை செய்யும் போது, வாசிப்பதற்கும் உடற்பயிற்சி செய்வதற்கும் நேரம் வேண்டும் என்ற எனது விருப்பத்தையும் அவர் கேலி செய்தார். இதெல்லாம் வேலை செய்யக்கூடாது என்பதற்கான சாக்குப்போக்கு என்று நிராகரித்தார்.
எனக்கு அசோசியேட் ப்ராடக்ட் டிசைனர் பதவி ரூ.7 லடசம் சம்பளத்துடன் வேலை வழங்கியது. எனது இரண்டு வருட நிபுணத்துவத்தின் அடிப்படையில் "நியாயமான சராசரி ஊதியத்திற்குக் கீழ்" என்றே நான் கருதினேன். எனினும் வேறு வேலைக்கிடைக்காததால் ஏற்றுக்கொண்டேன்.. ஆனால் முதல் நாளே நடந்த கசப்பான அனுபவம் காரணமாக வேலையைவிட்டு அன்றே நின்றுவிட்டேன்" என்று பதிவிட்டுள்ளார். . அத்துடன் தனது ராஜினாமா மின்னஞ்சலின் ஸ்கிரீன் ஷாட்டையும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் தனது முதலாளியிடம் நடந்ததை பற்றி கூறியிருக்கிறார். ஸ்ரேயாஸுக்கு பதில் அளித்த முதலாளி, அவருடைய "எதிர்கால முயற்சிகள்" வெற்றியடைய வாழ்த்தினார். மேலும் ஒரு நாள் வேலை பார்த்ததற்கு சம்பளமும் தருவதாக உரிமையாளர் உறுதி அளித்தார். இப்படியாக அந்த ஸ்கிரீன் ஷாட் இருக்கிறது. ஸ்ரேயாஷின் முடிவை பலரும் பாராட்டி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications