மகாத்மா காந்தியை கொன்ற சித்தாந்தம்! அடாத மழையிலும் விடாத ராகுல் காந்தி! மிரண்டு போன கர்நாடகா!
பெங்களூர் : தேச ஒற்றுமையை வலியுறுத்தி நடை பயணம் மேற்கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த பொதுக்கூட்டத்தில் நனைந்தபடியே பேசியதோடு பாஜக அரசின் கொள்கைகளை வன்மையாக கண்டித்தார்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்ரா' என்ற பெயரில் நடைபயணம் மேற்கொள்கிறார்.
செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து நடை பயணத்தை தொடங்கிய அவர், 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக மொத்தம் 48 நாட்கள் 3,700 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று காஷ்மீரை அடைகிறார்.

ராகுல் காந்தி
தமிழகம் கேரளாவில் நடை பயணத்தை முடித்துள்ள அவர் தற்போது கர்நாடக மாநிலத்தில் நடை பயணத்தை தொடர்ந்து வருகிறார். இந்நிலையில் இன்று மாலை காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கர்நாடக மாநிலம் மைசூரில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேச வந்தபோது திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது.

கனமழையிலும் பேச்சு
இருந்த போதும் கனமழையை கூட பொருட்படுத்தாமல் நனைந்தபடி உரையை தொடர்ந்தார் ராகுல் காந்தி. இடைவிடாத மழைக்கு மத்தியில் ராகுல்காந்தி பேச்சை நிறுத்திக் கொள்வார் அல்லது குடை பிடித்தபடி தனது உரையை என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மழையில் நனைந்தபடியே தனது பேச்சை ராகுல்காந்தி தொடர்ந்தபோது, கூட்டத்தில் இருந்த காங்கிரஸ் கட்சியினர் ஆரவாரம் செய்து அவருக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.

பாரத் ஜோடோ யாத்திரை
பேரணியில் தன்னுடன் பங்கேற்றதற்கும், பலத்த மழை பெய்தாலும் தன்னுடைய பேச்சைக் கேட்டு ஆதரவளித்ததற்கும் காங்கிரஸ் கட்சியினருக்கு ராகுல் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் எனது பாரத் ஜோடோ யாத்திரை மகாத்மா காந்தியைக் கொன்ற சித்தாந்தத்திற்கு எதிரான போராட்டம். கடந்த 8 ஆண்டுகளில் பாஜக ஆட்சியில் நாட்டு மக்களின் சுதந்திரம் பறிபோய்விட்டது.

காந்தியைக் கொன்ற சித்தாந்தம்
காந்திஜி பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை எதிர்த்துப் போராடியது போல், காந்தியைக் கொன்ற சித்தாந்தத்துடன் இன்று நாம் போராடுகிறோம். இந்த சித்தாந்தம் கடந்த எட்டு ஆண்டுகளில் சமத்துவமின்மை, பிரிவினை போன்றவற்றை ஏற்படுத்தியுள்ளதாக பாஜகவை மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை மறைமுகமாகச் சாடினார். இந்நிலையில் ராகுல் காந்தி கனமழையிலும் பேசும் வீடியோவை காங்கிரஸ் தலைவர்கள் பகிர்ந்து ராகுல் காந்தியின் பயணத்தை இயற்கையால் மட்டுமல்ல யாராலும் தடுக்க முடியாது என கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications