நயாகரா அருவி மாதிரியே இருக்கே! வியந்து போன வெளிநாட்டினர்! தென்இந்தியாவில் எங்க இருக்கு தெரியுமா?
கர்நாடகா: இந்தியாவில் உள்ள ஒரு அருவியைக் பார்த்து மெய்சிலிர்த்த நார்வே முன்னாள் தூதர், 'இது நயாகரா நீர் வீழ்ச்சி அல்ல' என்று தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டது சமூக வலைத்தளத்தில் தீவிரமாக பரவி வருகிறது.
அருவி என்றால் நம் அனைவரது மனதிலும் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படும். மலையில் இருந்து பல அடி தூரம் பேரிரிரைச்சலோடு தண்ணீர் பாய்வதை பார்த்து சிலாகிக்காதவர்களே இருக்க முடியாது எனலாம்.
அந்த வகையில், மனிதனின் குழந்தைத் தனத்தை தூண்டும் நீர்வீழ்ச்சி என்றால், நமது அனைவரது மனதிலும் நினைவுக்கு வருவது
நயாகரா நீர்வீழ்ச்சியாகத்தான் இருக்கும்.

பிரமித்து போன நார்வே முன்னாள் தூதர்
பல இடங்களில் பிரம்மிப்புக்கு பெயர் போனதை மேற்கோள் காட்டுவதற்காக நயாகரா நீர்வீழ்ச்சியை நினைவுப்படுத்தியிருப்பார்கள். ஆனால், இந்தியாவில் உள்ள கர்நாடகா மாநிலத்தில் உள்ள அருவியை பார்த்த நார்வே நாட்டு முன்னாள் தூதர் எரிக் சோல்ஹீம் பிரம்மித்து இருக்கிறார்.
கர்நாநகாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மலைப்பகுதிகளில் ஏராளமான புதிய அருவிகள் உருவாகியுள்ளன. அங்குள்ள ஜோக் பால்ஸ் என்ற இடத்தில் நயாகரா தோற்றத்தில் இந்த புதிய அருவிகள் உருவாகியுள்ளன.

டுவிட்டரில் 18 லட்சம் பார்வையாளர்கள்
இந்த அருவியின் அழகை வர்ணித்துள்ள முன்னாள் நார்வே தூதர் எரிக் சோல்ஹெம், 'இது உலகப் புகழ்பெற்ற நயாகரா நீர் வீழ்ச்சி அல்ல. கர்நாடகாவின் ஷிமோகா மலைப்பகுதியின் ஜோக் பால்ஸ்' என்று தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ காட்சிகளை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
நார்வே முன்னாள் தூதர் வெளியிட்ட அந்த வீடியோ டுவிட்டரில் 18 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் லைக் செய்தும் உள்ளனர். இயற்கையின் பேரழகை வர்ணித்து பலரும் பிரம்மித்து பதிவிட்டு வருகின்றனர்.

மேல் நோக்கி பாயும் அருவி
சமீபத்தில் மகாராஷ்டிர மாநிலம் நானேகட் பகுதியில் ஒரு நீர்வீழ்ச்சி தலைகீழ் திசையில் பாய்ந்தது சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனது நினைவிருக்கலாம். இரண்டு மலைகளுக்கு இடையே நீர் கீழ் நோக்கி பாய்வதற்கு பதிலாக தலைகீழ் நோக்கி பாய்வது காண்போரை வியப்பில் ஆழ்த்தச் செய்வதாக உள்ளது. மழையுடன் கூடிய காற்றால் இந்த நிகழ்வு சாத்தியம் என்று சொல்லப்படுகிறது.
குறிப்பாக அந்த இடத்தில் காற்றின் அழுத்தம் காரணமாக மலையிலிருந்து விழும் நீர் வீசும் காற்றினால் மேல் நோக்கி செல்கிறது. அதற்காக மலையில் இருந்து விழும் முழு நீரும் மேல்நோக்கி செல்வதில்லை. குறிப்பிட்ட முன் பகுதியில் விழும் நீரே காற்றினால் மீண்டும் மேல் நோக்கி அடித்து செல்லப்படுகிறது. இதனால் அந்த நீர் வீழ்ச்சியை பார்க்கும் போது தண்ணீர் மேல்நோக்கி செல்வது போன்றே தெரியும் என்பது குறிப்பிடத்தக்கது.

நயாகரா நீர்வீழ்ச்சி எங்கு உள்ளது?
வட அமெரிக்காவின் வட கிழக்குப் பகுதியில் உள்ள புகழ்மிக்க ஒரு பேரருவி நயாகரா நீர் வீழ்ச்சி. கனடாவிற்கும் ஐக்கிய அமெரிக்க நாடுகளுக்குமான எல்லையில் ஓடும் சுமார் 56 கி.மீ நீளமுள்ள நயாகரா ஆற்றின் பாதி தொலைவில் அமைந்துள்ளது.
இது தனியான இரண்டு பெரிய அருவிகளைக் கொண்டது. இந்த அருவியில் நிமிடத்திற்கு 6 பில்லியன் கன அடிக்கு மேல் தண்ணீர் பாயும். உலகம் முழுவதும் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் இந்த நீர் வீழ்ச்சியை பார்த்து மெய் சிலிர்ப்பதுண்டு
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications