• search
பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

எம்எல்ஏ, சி.எம், மத்திய அமைச்சர்.. அரசியல் வாழ்க்கையில் படிப்படியாக உயர்ந்த சதானந்த கவுடா

|

பெங்களூரு: தென்னிந்திய பாஜக தலைவர்களில் முக்கியமானவர்களில் ஒருவர் சதானந்த கவுடா ஆவார். தற்போது மோடியின் அமைச்சரவையில் இரண்டாவது முறையாக மத்திய அமைச்சர் பதவியை ஏற்றுக் கொண்டுள்ளார்.

இவர் 1953-ம் ஆண்டு மார்ச் மாதம் கர்நாடக மாநிலத்தில் தற்போதைய தட்சிண கன்னடா எனப்படும் தெற்கு கன்னடம் மாவட்டத்தில் பிறந்தார். கல்வியில் சிறந்து விளங்கிய சதானந்த கவுடா சட்டப்படிப்பை முடித்த பின்னர், 1976-ம் ஆண்டு சட்ட பயிற்சியை துவக்கினார். பின்னர், அவர் சுல்லியா மற்றும் புட்டூர் இரண்டிலும் பயிற்சி சட்டப்பயிற்சியை மேற்கொண்டார். டேட்டி என்பவரை மணந்த சதானந்த கவுடாவிற்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

From the legislator to the post of the Union Minister .. Sadananda Gowda bio data

கவுடா எப்பொழுதும் சமூக சேவையில் ஈடுபாடு கொண்டிருந்தார். ஏழை மக்களின் நலன் மீது அக்கறை கொண்டதால் அவர்களின் அபிவிருத்திக்காக அரசியலில் காலடி வைக்க முடிவு செய்தார். மேலும் அவரது கல்லூரி நாட்களிலிருந்து அவருக்கு அரசியலில் ஆர்வம் இருந்தது. கல்லூரி மாணவர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் சதானந்த கவுடா இருந்துள்ளார்

நேரடி அரசியலில் ஈடுபட விரும்பிய அவர் தனது வழக்கறிஞர் வேலையில் இருந்து விலகினார். 1970-களின் பிற்பகுதியில் ஜன சங்கம் அமைப்பில் சேர்ந்ததன் மூலம் சதானந்த கவுடா தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினார். அவர் கட்சியின் சுலியா சட்டமன்ற பிரிவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் அவர் பாஜக உறுப்பினராக ஆனார். அதன் பின்னர் தக்ஷினா கன்னட பா.ஜ.க இளைஞர் மோர்ச்சா ஜனாதிபதியாகவும், பின்னர் தக்ஷினா கன்னட பாஜக துணைத் தலைவராகவும் ஆனார். 1994ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தலில் கவுடா பெற்ற வெற்றி அவரது அரசியல் வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்தது.

பின்னர் 1999 இல் அவர் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றார், இந்த காலப்பகுதியில் அவர் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னா் கர்நாடகா மாநில சட்டமன்றத்தில் பல பதவிகளை கவுடா ஆக்கிரமித்தார். அவரின் திறமையை அங்கீகரித்த கட்சி தலைமை அவரை தேசிய செயலாளராக நியமித்தது.

தொடர்ந்து பல பொறுப்புகளை திறம்பட கையாண்ட சதானந்த கவுடாவை 2006-ம் ஆண்டில் கட்சியின் கர்நாடக மாநிலத் தலைவராக பாஜக நியமித்தது, அதிலும் அவர் சிறப்பாக செயல்பட்டார் 2011ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டு வரையில் கர்நாடக முதல்வர் பதவியையும் சதானந்த கவுடா வகித்தார்.

பின்னர் 2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பெங்களூரு வடக்கு தொகுதியில் வெற்றி பெற்று மோடியின் அமைச்சரவையிலும் இடம் பிடித்தார். 2014 ஆம் ஆண்டு மே மாதம் 26 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில் சதானந்தா கவுடா ரயில்வே அமைச்ராக பதவியேற்றார். பின்னர் ஜூலை 8, 2014 அன்று தனது முதல் பட்ஜெட்டை அவர் வழங்கினார்.

மோடி அரசின் பல்வேறு அமைச்சரவை மாற்றங்களின் போது சட்டம் மற்றும் நீதி அமைச்சராகவும், புள்ளிவிபரம் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சராகவும், இறுதியாக ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் பெங்களூரு வடக்கு மக்களவை தொகுதி தேர்தலில் சதானந்த கவுடா வெற்றி பெற்று மீண்டும் மக்களவை உறுப்பினரானார்.

நன்கு திறமையாக செயல்படுபவர், பல்வேறு தளங்களிலும் தனது திறமையை வெளிகாட்டுபவர் என்ற அடிப்படையில் மீண்டும் சதானந்த கவுடாவிற்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
English summary
One of the most important South Indian leaders is Sadhana Gowda. He was born in 1953 in Kannada, Dakshina Kannada, Karnataka in the state of Karnataka.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more