எச்எல்எப்டி 42 போர் விமானத்தில் அனுமன் படம்..பெங்களூர் விமான கண்காட்சியில் சர்ச்சை.. அதிரடி நீக்கம்
பெங்களூர் சர்வதேச விமான கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட எச்ஏஎல் நிறுவனத்தின் எச்எல்எப்டி 42 ரக போர் விமானத்தில் அனுமன் படம் ஒட்டப்பட்டது சர்ச்சையை கிளப்பியது.
பெங்களூர்: பெங்களூர் எலகங்காவில் உள்ள விமானப்படை தளத்தில் நேற்று சர்வதேச விமான கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கினார். இந்த விமான கண்காட்சியில் பெங்களூரில் செயல்பட்டு வரும் எச்ஏஎல் நிறுவனம் தயாரித்த எச்எல்எப்டி 42 ரக போர் விமானம் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விமானத்தின் வால் பகுதியில் அனுமன் போட்டோ ஒட்டப்பட்ட இருந்த நிலையில் சர்ச்சை வெடித்தது. தற்போது அந்த போட்டோ நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த அனுமன் படம் எதற்காக ஒட்டப்பட்டு இருந்தது என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.
பெங்களூரில் ஆண்டுதோறும் சர்வதேச விமான கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த வேளையில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள், ஹெலிகாப்டர்களை திறம்பட இயக்கி பைலட்டுகள் சாகச நிகழ்ச்சிகளை நிகழ்த்துவர்.
அதன்படி இந்த ஆண்டுக்கான சர்வதேச விமான கண்காட்சி பெங்களூரில் உள்ள எலகங்கா விமானப்படை தளத்தில் நேற்று துவங்கியது. பிரதமர் நரேந்திர மோடி இந்த கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்த கண்காட்சி வரும் 17 ம் தேதி வரை நடைபெற உள்ளது.

தொடங்கி வைத்த பிரதமர் மோடி
நேற்றைய கண்காட்சியை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த விமானங்கள், ஹெலிகாப்டர்களின் சாகச நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். மேலும் விமான கண்காட்சியும் நடந்தது. இதில் பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எச்ஏஎல் நிறுவனம் தயாரித்திருக்கும் அதிநவீன விமானங்கள், ஹெலிகாப்டர்கள் இடம் பெற்றுள்ளன.

எச்எல்எப்டி 42 ரக போர் விமானம்
இந்நிலையில் தான் எச்ஏஎல் நிறுவனம் தயாரிக்கும் சூப்பர் சோனிக் டிரெய்னர் என அழைக்கப்படும் எச்எல்எப்டி 42 என்ற போர் விமானத்தின் மாதிரி முதல் முறையாக கண்காட்சியில் இடம்பெற்றது. இது நவீன தொழில்நுட்பத்துடன் முழு பயிற்சி திறன்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விமானம் நேற்று அறிமுகம் செய்யப்பட்டபோது விமானத்தில் கடவுள் அனுமனின் போட்டோ ஸ்டீக்கராக இடம்பெற்றிருந்தது. அதனருகே விமானத்தின் வேகத்தை குறிப்பிடும் வகையில் ‛புயல் வருகிறது' என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்தது.

கிளம்பிய சர்ச்சை
இது சர்ச்சையை கிளப்பியது. இதுதொடர்பான படங்கள் இணையதளங்களில் வெளியாகி விவாதத்தை கிளப்பின. அதாவது சூப்பர் சோனிக் டிரெய்னர் என அழைக்கப்படும் எச்எல்எப்டி 42 ரக போர் விமானத்தில் அனுமன் ஸ்டீக்கர் இடம்பெற்றதற்கு ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்த நிலையில் மற்றொரு தரப்பு எதிர்ப்பு தெரிவித்தனர். சனாதன தர்மத்தின் கடவுளின் போட்டோ இடம்பெற்றிருப்பதாக சில தெரிவித்தனர்.

அனுமன் போட்டோ காரணம் என்ன?
இந்நிலையில் தான் தற்போது விமானத்தின் வால்பகுதியில் இடம்பெற்றிருந்த அனுமன் ஸ்டீக்கம் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. தற்போது எச்ஏஎல் நிறுவனம் சார்பில் தயாரிக்கப்பட்டு வரும் சூப்பர் சோனிக் டிரெய்னர் எச்எல்எப்டி 42 ரக போர் விமானம் என்பது அந்த நிறுவனம் முதல் முதல் உள்நாட்டு தயாரிப்பான ‛எச்ஏஎல் மாருத்' ரக விமானத்தின் அதிநவீன வசதிகளுடன் கூடிய மறுவடிவமாகும். ‛எச்எல்எப்டி 24 மாருத் ' ரக போர் விமானம் 1971ல் இந்தியா-பாகிஸ்தான் போரில் முக்கிய பங்காற்றியது மாருத் என்பது காற்றை குறிக்கும். காற்றின் அதிபதியாக பவன் தேவ் உள்ள நிலையில் அனுமனின் Heavenlyதந்தையாகவும் கருதப்படுகிறது. இதனால் தான் தற்போது எச்ஏஎல் மாருத்தின் அடுத்த ஜெனரேஷனான எச்எல்எப்டி 42 ரக விமானத்தில் அனுமன் படம் ஒட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
-
பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்! -
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications