பெங்களூரு, மும்பை எல்லாம் ஓரம் போ.. சம்பள உயர்வு அதிகம் கொடுப்பதில் இந்த சிட்டிதான் டாப்!
சென்னை: இந்தியாவின் ஐடி ஹப் என்று பெங்ளூரு சொல்லப்பட்டாலும், அதேபோல ஹாலிவுட் மூலம் அதிக வருமானம் ஈட்டும் நகரம் என்று மும்பை அடையாளப்படுத்தப்பட்டாலும், சம்பள உயர்வு என்று வரும்போது அதில் சென்னைதான் டாப்பில் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.
பிரபல மனிதவள நிறுவனமான 'டீம்லீஸ் சர்வீசஸ்' 2026-2027 ஆம் நிதியாண்டில் இந்தியாவின் பெருநிறுவனங்கள் வழங்கவுள்ள சம்பள உயர்வு மற்றும் வேலைவாய்ப்புச் சந்தை குறித்த முக்கிய விபரங்கள் கலெக்ட் செய்து அதை அறிக்கையாக வெளியிட்டிருந்தது. இந்த லிஸ்டில் சென்னைதான் முதல் இடத்தை பிடித்திருக்கிறது.

என்ன காரணம்?
சென்னை நகரம் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி, வாகன உற்பத்தி (Automobile) மற்றும் குறிப்பாக எலக்ட்ரிக் வாகன (EV) முதலீடுகளின் முக்கிய மையமாக உருவெடுத்து வருவதே இந்த அதிரடி சம்பள உயர்வுக்கு முக்கியக் காரணமாகும். இந்த நிதியாண்டில் சில குறிப்பிட்ட வளர்ந்து வரும் துறைகள் அதிகபட்சமாக 9.6% முதல் 10.2% வரை சம்பள உயர்வை வழங்கவுள்ளன.
- எலக்ட்ரிக் வாகனங்கள் & EV உள்கட்டமைப்பு: 10.2% (உயர்ந்தபட்சம்)
- ஃபின்டெக் (FinTech - டிஜிட்டல் நிதி): 10.0%
- ஹெல்த்கேர் மற்றும் பார்மா (மருந்து உற்பத்தி): 9.7%
- மின்சாரம் மற்றும் ஆற்றல் (Power & Energy): 9.6%
எந்தெந்த பணிகளுக்கு டிமாண்ட் அதிகம்?
பொதுவான திறன்களைக் கொண்டவர்களை விட, குறிப்பிட்ட தொழில்நுட்பத் திறன் மற்றும் களப்பணியில் சிறந்து விளங்குபவர்களுக்கு நிறுவனங்கள் வாரி வழங்குகின்றன.
- எலக்ட்ரிக்கல் இன்ஜினியர்கள் (EV துறை): 11.2%
- தரக்கட்டுப்பாட்டு ஆய்வாளர்கள்: 10.9%
- திட்டப் பொறியாளர்கள்: 10.7%
- ஐடி சப்போர்ட் எக்ஸிகியூட்டிவ்ஸ்: 10.3%
- EV சார்ஜர் பொருத்தும் தொழில்நுட்ப வல்லுநர்கள்: 10.3%
அறிக்கை என்ன சொல்கிறது?
இந்தியாவின் சம்பள உயர்வு என்பது இனி பாரம்பரிய மெட்ரோ நகரங்களான மும்பை, டெல்லி, பெங்களூருடன் மட்டும் சுருங்கிவிடவில்லை. இரண்டாம் கட்ட நகரங்களான விசாகப்பட்டினம், நாக்பூர் போன்ற உற்பத்தி மற்றும் தொழிற்துறை நகரங்களும் வேகமாக வளர்ந்து வருகின்றன. ஒட்டுமொத்த கார்ப்பரேட் இந்தியாவின் சராசரி சம்பள உயர்வு இந்த ஆண்டு 8.6% முதல் 10.2% வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications