Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

'ஹார்ட்டின்' வடிவ சிக்னல்கள்.. ஜொலிக்கப்போகும் பெங்களூர் மாநகரம்.. ஏன்? ஓ இதுதான் விஷயமா?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகா தலைநகர் பெங்களூரில் இனி இதயம் வடிவத்தில் போக்குவரத்து சிக்னல்கள் ஜொலிக்கப் போகின்றன.

இதயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்திடும் வகையிலும், அதனை பாதுகாக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்திலும் இந்த புதிய முயற்சியை பெங்களூர் போக்குவரத்து போலீஸார் முன்னெடுத்துள்ளனர்.

மிக சாதாரணமான விஷயமாக இது தோன்றினாலும், இத்திட்டம் மிகப்பெரிய வெற்றியை தரும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றர்.

ஐ.டி. தலைநகர் பெங்களூர்..

ஐ.டி. தலைநகர் பெங்களூர்..

இந்தியாவின் 'ஐடி ஹப்' (IT HUB) ஆக விளங்குவது பெங்களூர். நாட்டில் வேறெங்கும் இல்லாத வகையில் அதிக அளவிலான ஐடி நிறுவனங்களையும், ஊழியர்களையும் கொண்டிருக்கிறது பெங்களூர் நகரம். ஐடி வேலையை பொறுத்தவரை, வெளியே இருந்து பார்த்தால் பணம் அதிகம் சம்பாதிக்கும் துறை என்பது மட்டுமே அனைவரின் கண்ணோட்டமாக உள்ளது. அது உண்மைதான் என்றாலும், அதற்கு ஐடி ஊழியர்கள் கொடுக்கும் உழைப்பு அதிகம்.

இதய பாதிப்பு..

இதய பாதிப்பு..

கம்ப்யூட்டர் முன்புதானே உட்கார்ந்திருக்கிறார்கள்.. இதில் என்ன உழைப்பு இருக்கப்போகிறது என நீங்கள் கேட்டால் அது தவறு. ஓடி ஓடி உழைப்பதை காட்டிலும் உட்கார்ந்த இடத்திலேயே இருந்து வேலை செய்வதுதான் மிகவும் கடினம். மேலும், நாள் முழுவதும் பல மணிநேரம் கம்ப்யூட்டர் முன்னால் உட்கார்ந்து கொண்டே இருப்பதால் உடல் அளவிலும், மனதளவிலும் அவர்களுக்கு நிறைய பிரச்சினைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, ஐடி ஊழியர்கள் பலர் இதய நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

'ஹார்ட்' வடிவில் சிக்னல்கள்..

'ஹார்ட்' வடிவில் சிக்னல்கள்..

இந்நிலையில், இதயத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மணிப்பால் மருத்துவமனையும், பெங்களூர் போக்குவரத்து காவல்துறையும் இணைந்து ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளன. அதாவது, அக்டோபர் 15 முதல் 25-ம் தேதி வரையிலான 11 நாட்களுக்கு, பெங்களூரில் உள்ள அனைத்து போக்குவரத்து சிக்னல்களிலும் 'ஸ்டாப்' சமிக்ஞையானது இதயத்தின் வடிவத்தில் சிகப்பு நிறத்தில் ஒளிரும். அதுமட்டுமல்லாமல், அந்த சிக்னல்களுக்கு அருகில் மற்றும் சில பகுதிகளில் சிறு சிறு பேனர்களில் க்யூஆர் கோடும் (QR code) வைக்கப்படும். நெஞ்சு வலி போன்ற அவசர காலத்தில் ஆம்புலன்ஸுக்கு ஃபோன் செய்வதற்கு பதிலாக, இந்த க்யூஆர் கோடை செல்போனில் ஸ்கேன் செய்தால் அடுத்த சில நிமிடங்களில் அவர்கள் இருக்கும் இடத்திற்கு ஆம்புலன்ஸ் வந்துவிடும்.

இதயம் குறித்த விழிப்புணர்வு

இதயம் குறித்த விழிப்புணர்வு

இதுகுறித்து பெங்களூர் போக்குவரத்துக் காவல் இணை ஆணையர் ஆர். கவுடா கூறுகையில், "இன்றைய பரபரப்பான வாழ்க்கை முறையில் நின்று பேசுவதற்கு கூட மக்களுக்கு நேரம் இல்லை. அப்படி இருக்கும்போது, ஒருசில நிமிடங்கள் மக்கள் நின்று ஆசுவாசப்படுத்திக் கொள்ளும் இடமாக போக்குவரத்து சிக்னல்கள் இருக்கின்றன. அவ்வாறு அங்கு அவர்கள் நிற்கும் போது, இதயம் வடிவிலான விளக்கை பார்க்கையில் அவர்களுக்கு தங்களின் இதயத்தை பற்றிய எண்ணம் நிச்சயம் வரும். மேலும், தனது இதயத்தை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் அவர்களுக்கு ஏற்படும். இந்த நோக்கத்திலேயே இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளோம்" என அவர் கூறினார். ஆண்டுதோறும் செப்டம்பர் 29-ம் தேதி இதய தினம் கொண்டாடப்படுகிறது. இதன் அடிப்படையில், இந்த திட்டத்தை செயல்படுத்த மணிப்பால் மருத்துவமனை முடிவு செய்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+