பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஹிஜாப்போடு வர கூடாது" புதுச்சேரியிலும் தடுக்கப்பட்ட மாணவி! பல மாநிலங்களில் தீயாய் பரவும் எதிர்ப்பு

Google Oneindia Tamil News

பெங்களூர்: கர்நாடகாவை தொடர்ந்து புதுச்சேரியிலும் இஸ்லாமிய மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து வந்ததால் தடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.

கர்நாடகாவில் பியூ கல்லூரிகளில் இந்து மாணவர்கள் சிலர் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவ பிரிவான ஏபிவிபி உள்ளிட்ட இந்து மாணவ அமைப்பை சேர்ந்த மாணவர்கள் இஸ்லாமிய மாணவிகள் எதிராக இந்த எதிர்ப்பை தெரிவித்து உள்ளனர்.

அங்கு இந்துத்துவா மாணவர்கள் பலரின் போராட்டத்தை தொடர்ந்து, மாணவ, மாணவியர் யூனிபார்ம் மட்டுமே அணிய வேண்டும் என்று மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

பெரும் எதிர்பார்ப்பு.. ஹிஜாப் என்பது அடிப்படை உரிமையா? கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை பெரும் எதிர்பார்ப்பு.. ஹிஜாப் என்பது அடிப்படை உரிமையா? கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

 ஹிஜாப்

ஹிஜாப்

இந்த ஹிஜாப் எதிர்ப்பு மற்ற பாஜக ஆளும் மாநிலங்களிலும் பரவ தொடங்கி உள்ளது. முக்கியமாக பாஜக ஆளும் மத்திய பிரதேசத்தில் ஹிஜாப் விவகாரம் பெரிதாக வெடித்து உள்ளது. இது தொடர்பாக மத்திய பிரதேச பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இந்தேர் சிங் பர்மர் அளித்த பேட்டியில், ஹிஜாப் என்பது பள்ளி யுனிபார்மில் ஒன்று கிடையாது. அதனால்தான் ஹிஜாப் அணிவது தடை செய்யப்பட வேண்டியது. மதத்தை, கலாச்சாரத்தை கடைபிடிக்க வேண்டும் என்றால் அதை வீட்டில் கடைபிடிக்க வேண்டும்.

மத்திய பிரதேசம்

மத்திய பிரதேசம்

அதை பள்ளியில் செய்ய கூடாது. பள்ளிகளில் யுனிபார்ம் விதிகளை மிக தீவிரமாக கடைபிடிக்க வேண்டும். ஹிஜாப் அணிவதை தடை செய்வது தொடர்பாக ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது. பள்ளி தேர்வுகள் முடிந்த பின் இதில் முடிவு எடுக்கப்படும். எல்லா மாணவ, மாணவியரும் சமமான உடை அணிய வேண்டும். மத ரீதியான உணர்வுகளுக்கு பள்ளிகளில் இடம் அளிக்க கூடாது என்று மத்திய பிரதேச பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் இந்தேர் சிங் பர்மர் தெரிவித்துள்ளார்.

 புதுச்சேரி

புதுச்சேரி

மத்திய பிரதேசத்தில் 1.25 லட்சம் அரசு பள்ளிகள் உள்ளன. இந்த நிலையில் இங்கு புதிய யூனிபார்ம் விதிகள் விரைவில் அமல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் புதுச்சேரியிலும் மாணவி ஒருவர் ஹிஜாப் அணிந்து வந்த நிலையில் அவர் தடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிடி ருத்ராவிற்கு புகார் சென்றுள்ளது.

புகார்

புகார்

அரியான்குப்பத்தில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவி ஹிஜாப் அணிந்து வந்த போது ஆசிரியை மூலம் வெளியே அனுப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக மாணவியின் தந்தை இஃபால் புகார் அளித்துள்ளார். ஆனால் இதை பள்ளியின் தலைமை ஆசிரியர் மறுத்துள்ளார். இது தொடர்பாக அங்கு திமுக சார்பிலும், இஸ்லாமிய அமைப்புகள் சார்பிலும் பள்ளி கல்வித்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    புதுச்சேரி: மாணவி பர்தா அணிந்து வந்ததற்கு எதிர்ப்பு: பள்ளி தலைமை ஆசிரியருக்கு கண்டனம்!
    சீருடை விதி

    சீருடை விதி

    இது தொடர்பாக விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று புதுச்சேரி பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. அதோடு மாணவிகள் ஹிஜாப் அணிய கூடாது என்று எந்த உத்தரவும் போடவில்லை. இது தொடர்பாக ரிப்போர்ட் கேட்டு இருக்கிறோம். ஆனால் இதை பயன்படுத்தி மாணவ, மாணவியர் தங்கள் சீருடை வீதியை மீற வாய்ப்பு உள்ளது. எனவே இதற்கு எதிராக யூனிபார்ம் விதிகளை கொண்டு வருவோம், என்று குறிப்பிட்டு உள்ளார்.

    English summary
    Hijab Row: A students stopped in Puducherry also after Karnataka, Madhya Pradesh plans to bring a new law on uniforms
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X