இந்தியாவில் நுழைந்த HMPV தொற்று.. அறிகுறிகள் என்ன! யாருக்கு எளிதாக பரவும்! தடுப்பது எப்படி! FAQ
பெங்களூர்: சீனாவில் இப்போது பரவி வரும் ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு பெங்களூரில் குழந்தைக்குக் கண்டறியப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியிருந்தாலும் கூட இதைக் கண்டு நாம் அச்சப்படத் தேவையில்லை என்றே மருத்துவர்கள் தொடர்ந்து சொல்லி வருகிறார்கள். இந்த ஹெச்எம்பிவி வைரஸ் என்றால் என்ன என்று இந்த ஹெச்எம்பிவி தொற்று குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
1. ஹெச்எம்பிவி தொற்று என்றால் என்ன?
Human Metapneumovirus என்ற வைரஸ் முதன்மையாக நமது சுவாசக் குழாயைப் பாதிக்கிறது. பாராமிக்ஸோ வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது இது முதன்முதலில் 2001ம் ஆண்டு கண்டறியப்பட்டது. இது அனைத்து தரப்பினரையும் பாதிக்கும் என்ற போதிலும், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு குறைபாடு உடையவர்களை இது எளிதாகப் பாதிக்கும்.

2. ஹெச்எம்பி எப்படிப் பரவுகிறது?
ஹெச்எம்பி தொற்று பாதிக்கப்பட்ட நபர் இருமல் அல்லது தும்மும்போது வெளியாகும் சுவாச நீர்த்துளிகள் மூலம் இது பரவுகிறது.
வைரஸ் உள்ள இடங்கள் அல்லது பொருட்களைத் தொட்டுவிட்டு, பிறகு அப்படியே வாய், மூக்கு அல்லது கண்களைத் தொடும்போது இந்த வைரஸ் நமது உடலில் நுழைகிறது.
ஏற்கனவே ஹெச்எம்பிவி வைரஸ் பாதிப்பு உள்ள நபருடன் நெருக்கமாக இருப்பதாலும் கூட இந்த வைரஸ் பாதிப்பு பரவுகிறது.
3. ஹெச்எம்பிவி தொற்றின் அறிகுறிகள் என்ன?
ஹெச்எம்பிவி நமது உடலில் புகுந்த சில நாட்களில் அதன் அறிகுறிகள் தென்படத் தொடங்கும். இதன் அறிகுறிகள் லேசானது முதல் கடுமையானது வரை இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.
காய்ச்சல்
இருமல்
மூக்கு ஒழுகுதல் அல்லது அடைத்தல்
தொண்டை வலி
மூச்சுத் திணறல்
மூச்சு விடுவதில் சிரமம்
சோர்வு
ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும். வைரஸ் பாதிப்பு மோசமாக ஏற்படும் போது மூச்சுக்குழாய் அழற்சி, நிமோனியா அல்லது ஆஸ்துமா அல்லது சிஓபிடி கூட ஏற்படும்.
4. யாருக்கெல்லாம் தீவிர HMPV தொற்று ஏற்படும் ஆபத்து உள்ளது?
யாருக்கு வேண்டுமானாலும் தீவிர பாதிப்பு ஏற்படலாம் என்ற போதும், குறிப்பிட்ட சிலர் அதிக ஆபத்தில் உள்ளனர்.
குழந்தைகள்
முதியவர்கள்
பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள்
ஏற்கனவே சுவாச அல்லது இதய பாதிப்பு கொண்ட நபர்கள்
5. HMPV தொற்றை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்?
சுவாச அறிகுறிகள் மற்றும் உடல் பரிசோதனையின் அடிப்படையில் இந்த வைரஸ் பாதிப்பு கண்டுபிடிக்கலாம்.
அப்படி இல்லை என்றால் பாலிமரேஸ் சங்கிலி எதிர்வினை அதாவது PCR சோதனை மூலம் இதைக் கண்டுபிடிக்கலாம். கொரோனாவுக்கு எடுப்பதைப் போலவே இந்த பிசிஆர் சோதனைக்கும் நமது நாசி அல்லது தொண்டையில் இருந்து மாதிரிகளை எடுத்துச் சோதிப்பார்கள்.
6. HMPV தொற்றின் சிகிச்சை முறை என்ன?
இந்த HMPV தொற்றுக்குக் குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. அறிகுறிகளைக் குறைக்க மட்டுமே சிகிச்சை தரப்படும்
ஓய்வு எடுப்பது மற்றும் நீர் பானங்களை எடுத்துக் கொண்டே இருப்பது
காய்ச்சலுக்கும் வலிக்கும் மருந்துகளை எடுக்கலாம்
மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும் போது ஆக்ஸிஜன் உதவி தேவைப்படலாம்
கடுமையான சுவாசக் கோளாறு ஏற்பட்டால் மருத்துவமனையில் அனுமதியாக வேண்டி இருக்கும்.
அதேநேரம் எந்தவொரு பாதிப்பாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள். நீங்களாகவே எந்தவொரு மருந்தையும் எடுத்துக்கொள்ளக்கூடாது.
7. HMPV தொற்றை எப்படித் தடுக்கலாம்?
வெளியே செல்லும் போது மாஸ்க் அணிந்து கொண்டு செல்லுங்கள்
கையை அடிக்கடி சோப்பு போட்டுக் கழுவுங்கள்
நோய்ப் பாதிப்பு இருப்போருடன் நெருங்கிய தொடர்பைக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்
அடிக்கடி தொடும் பொருட்களைச் சுத்தப்படுத்திக் கொண்டே இருங்கள்
உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றால் வெளியே செல்லாமல் வீட்டிலேயே இருங்கள்
இருமல் அல்லது தும்மும்போது வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை மூலம் முழுமையாக மூடவும். இது நீர்த்துளி சிதறுவதைத் தடுக்கும்
8. HMPVக்கு தடுப்பூசி உள்ளதா?
தற்போதைய சூழலில் ஹெச்எம்பிவி-க்கு தடுப்பூசி எதுவும் இல்லை.. தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சைகள் தொடர்பான ஆய்வுகள் நடந்து வருகிறது.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications