தூக்கி வீசப்பட்ட 18 பாஜக எம்எல்ஏக்கள்.. ஹனி டிராப்பால் களேபரமான கர்நாடகா சட்டசபை.. அதிரடி சஸ்பெண்ட்
பெங்களூர்: கர்நாடகாவில் 48 எம்எல்ஏக்களை குறிவைத்து ஹனி டிராப் முயற்சி நடந்துள்ளதாக அமைச்சர் ராஜண்ணா கூறினார். இதுபற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று பாஜக எம்எல்ஏக்கள் இன்று சட்டசபையில் சபாநாயகர் யுடி காதரின் இருக்கை அமைந்துள்ள போடியம் மீது ஏறி போராட்டம் நடத்தியதால் 18 பாஜக எம்எல்ஏக்கள் 6 மாதம் வரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டதோடு, சபை காவலர்கள் அந்த எம்எல்ஏக்களை குண்டுகட்டாக தூக்கி சபைக்கு வெளியே கொண்டு சென்றனர்.
கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். துணை முதல்வராக டிகே சிவக்குமார். முதல்வர் சித்தராமையாவின் அமைச்சரவையில் கூட்டுறவுறத்துறை அமைச்சராக கேஎன் ராஜண்ணா பொறுப்பு வகித்து வருகிறார்.

இந்நிலையில் கேஎன் ராஜண்ணா கூறிய தகவல் சர்ச்சையை கிளப்பியது. அதாவது கர்நாடகாவில் ஹனி டிராப் வலையில் தன்னை சிக்க வைக்க முயற்சி நடந்தது. அதேபோல் 48 எம்எல்ஏக்களை குறிவைத்து ஹனிடிராப் மோசடிக்கு முயற்சி நடத்தப்பட்டுள்ளது என்று சட்டசபையில் கூறி அதிர வைத்தார்.

அதாவது ஹனி டிராப் என்றால் பாலியல் குற்றச்சாட்டில் ஒருவரை சிக்க வைப்பதாகும். இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால் பெண்களை பயன்படுத்தி ஒருவரை பாலியல் சர்ச்சையில் சிக்க வைப்பதாகும். அந்த பெண்கள், அரசியல் தலைவர்களுடன் நெருக்கமாக இருக்க வைத்து அதனை வீடியோ, போட்டோவாக எடுத்து மிரட்டும் செயலாகும். கர்நாடகாவில் பல அரசியல் தலைவர்கள் ஹனிடிராப்பில் சிக்கி காணாமல் போய் உள்ளனர்.
இப்படியான சூழலில் தான் கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஎன் ராஜண்ணாவின் இந்த பேச்சு சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து தான் ஹனிடிராப் தொடர்பாக நீதி விசாரணை நடத்த வேண்டும். கர்நாடகாவில் முதல்வர் பதவியை தக்க வைக்க காங்கிரஸ் தலைவர்கள் இதனை செய்து இருக்கலாம் என்று பாஜகவினர் இன்று சட்டசபையில் கோஷமிட்டனர்.
ஆனால் முதல்வர் சித்தராமையா மறுப்பு தெரிவித்தார். இதையடுத்து பாஜக எம்எல்ஏக்கள் சபாநாயகர் யுடி காதர் இருக்கையின் போடியம் மீது ஏறி கோஷமிட்டனர். அவர் மீது காகிதத்தை வீசி எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சபை நடவடிக்கைக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக கூறி 18 பாஜக எம்எல்ஏக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
#WATCH | Bengaluru: 18 Karnataka BJP MLAs being carried out of the Assembly after their suspension.
— ANI (@ANI) March 21, 2025
The House passed the Bill for their suspension for six months for disrupting the proceedings of Assembly. The Bill was tabled by Karnataka Law and Parliamentary Affairs Minister… pic.twitter.com/KKss0M9LVZ
அதன்படி பாஜக எம்எல்ஏக்களான அஸ்வத் நாராயணன், முனிரத்னா, எஸ்ஆர் விஸ்வநாத், தொட்டனகவுடா பட்டீல், பரத் செட்டி, சரணு சலகார், பி சுரேஷ் கவுடா, சன்னபசப்பா , உமாநாத் கோட்டியான் பிசி ஹரீஷ், தீரஜ் முனிராஜு, சைலேந்திரா, பசவராஜ் மத்திமுடா, யஷ்பால் வி சுவர்ணா, எம்ஆர் பட்டீல், ராமமூர்த்தி, சந்துரு லமானி, பிஏ பசவராஜு, என 18 பாஜக எம்எல்ஏக்கள் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அடுத்த 6 மாதம் கர்நாடகா சட்டசபை கூட்டத்தில் பங்கேற்க முடியாது. இதற்கான அறிவிப்பை சபாநாயகர் யுடி காதர் வெளியிட்டார். சஸ்பெண்ட் செய்யப்பட்டதை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் ஆர் அசோக், பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து சபை காவலர்களை வைத்து அவர்களை வெளியேற்றும்படி சபாநாயகர் யுடி காதர் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து சபை காவலர்கள் பாஜக எம்எல்ஏக்களை வெளியேற்ற முயன்றனர். ஆனால் பாஜக எம்எல்ஏக்கள் ஒத்துழைக்கவில்லை. இதையடுத்து வேறு வழியின்றி சபை காவலர்கள் 18 பாஜக எம்எல்ஏக்களையும் குண்டு கட்டாக தூக்கி சென்று சட்டசபையில் இருந்து வெளியேற்றினர். இதுதொடர்பான வீடியோ என்பது தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது.
-
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
தேர்தலில் போட்டியில்லை.. டெல்லிக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை.. பாஜகவில் டிவிஸ்ட் -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அதிவேகத்தில் அதிமுக.. ஏரியா பிரித்த எடப்பாடி! அதிமுக கூட்டணியில் யார்? எங்கே போட்டி? உத்தேச லிஸ்ட்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications