டீச்சரை நிர்வாணப்படுத்தி மரத்தில் கட்டி வைத்து தாக்குதல்.. காதலை ஏற்காததால் கொடுமை செய்த இளைஞர்
பெங்களூர்: கர்நாடகாவில் காதலை ஏற்காததால் அரசு பள்ளியில் பணியாற்றி வரும் 25 வயது ஆசிரியையை வழிமறித்து தாக்கி நிர்வாணப்படுத்தி மரத்தில் கட்டிவைத்து கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏறு்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் 24 வயது இளைஞரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.
கர்நாடகா மாநிலம் சிக்கமகளூர் மாவட்டம் கொப்பா தாலுகாவில் ஜெயபுரா போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் 25 வயது இளம்பெண். இவர் அரசு பள்ளியில் தற்காலிகமாக ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்த ஆசிரியை வசிக்கும் பகுதியின் அருகே உள்ள கிராமத்தின் பெயர் பாலூர். இங்கு 24 வயது நிரம்பிய பாவித் என்ற இளைஞர் உள்ளார். பாவித்துக்கு, ஆசிரியை மீது காதல் வந்துள்ளது.
பள்ளி முடிந்து ஆசிரியை செல்லும்போது பாவித் அவரை பின்தொடர்ந்து ஒரு தலையாக காதலித்துள்ளார். அதன்பிறகு சமீபத்தில் பாவித் தனது காதலை ஆசிரியையிடம் வெளிப்படுத்தி உள்ளார். அதனை ஆசிரியை ஏற்கவில்லை. தனக்கு காதலில் நம்பிக்கையில்லை. காதலிக்க விருப்பம் இல்லை என்று புறக்கணித்துள்ளார். ஆனாலும், பாவித் விடவில்லை.
பாவித் தொடர்ந்து ஆசிரியையை பின்தொடர்ந்து சென்று காதல் தொல்லை கொடுத்துள்ளார். ஆனால் ஆசிரியை அவரை கண்டுக்கொள்ளவில்லை. இதனால் கோபமடைந்த பாவித் நேற்று பள்ளி முடிந்து வீடு திரும்பிய ஆசிரியையை வழிமறித்துள்ளார். தனது காதலை மீண்டும் வெளிப்படுத்தி உள்ளார். அந்த காதலை ஆசிரியை ஏற்க மறுத்து சென்றுள்ளார்.
இதனால் கோபமடைந்த பாவித், ஆசிரியையை தாக்கி உள்ளார். மேலும் அவரது ஆடையை அவிழ்த்து மரத்தில் கட்டி வைத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ஆசிரியை கூச்சலிட்டுள்ளார். இந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்த நிலையில் பாவித் அங்கிருந்து எஸ்கேப் ஆனார். இதையடுத்து ஆசிரியையை அங்கிருந்தவர்கள் பத்திரமாக மீட்டனர்.
இருப்பினும் பாவித் நடத்திய தாக்குதலில் காயமடைந்திருந்தார். இதையடுத்து அவர் சிவமொக்காவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.தற்போது அவர் நலமாக உள்ளார். மேலும் ஆசிரியை அளித்த புகாரின் பேரில் ஜெயநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒருதலை காதலன் பாவித்தை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமாருக்கு சூனியம்? பெங்களூர் வீட்டருகே தலையின்றி கிடந்த சேவல் + எலுமிச்சையால் ஷாக் -
கல்லூரி காதலனுடன் கள்ளக்காதல் + ரூ.1000 கோடி சொத்து.. மகளையே கொன்று நாடகமாடிய பெங்களூர் பெண் -
பெங்களூர் பன்னரகட்டா ரோட்டில் மெட்ரோ ரயில் சேவை.. வெளியான குட்நியூஸ்! செம -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம் -
பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! மனைவி, ஆண் நண்பரை தட்டி தூக்கிய தனிப்படை -
பூட்டிய வீட்டில்.. பேராசிரியர் இருந்த கோலம்! 1400 கி.மீ டிராவல் செய்து வந்து சம்பவம் செய்த தம்பதி! -
மாயமான தவெக நிர்வாகி 4 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்பு.. கல் குவாரி பள்ளத்தில் உடல் கண்டெடுப்பு! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications