பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பாரபட்சம் பார்க்காமல் ஆடும் கொரோனா.. இந்திய பெண்கள் ஹாக்கி அணியிலும் பாதிப்பு!

Google Oneindia Tamil News

பெங்களூரு: இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் கேப்டன் ராணி ராம்பால் உட்பட அணியின் ஏழு வீராங்கனைகளும், இரண்டு அணி ஊழியர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் (எஸ்.ஏ.ஐ) மையத்தில் நேற்று எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் இது தெரியவந்துள்ளது.

Indian womens hockey captain Rani, six other players test positive for COVID-19

அணியின் கேப்டன் ராணி ராம்பால், சவிதா புனியா, ஷர்மிளா தேவி, ரஜனி, நவ்ஜோத் கவுர், நவ்னீத் கவுர் மற்றும் சுஷிலா ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்ந்து வீடியோ ஆய்வாளர் அம்ருதபிரகாஷ் மற்றும் அறிவியல் ஆலோசகர் வெய்ன் லோம்பார்ட் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

விளையாட்டு வீரர்களின் சொந்த ஊர்களில் இருந்து பயிற்சிக்காக அனைவரும் பெங்களூரு எஸ்.ஏ.ஐ பயிற்சி மையத்திற்கு வந்திருந்த இடத்தில் இவர்களுக்கு கொரோனா கண்டறியப்பட்டு தற்போது தனிமைப்படுத்தப்பட்டனர். அதன் பின்னர் எடுக்கப்பட்ட பரிசோதனையில் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. மற்ற அறிகுறியற்ற வீரர்கள் மற்றும் ஊழியர்கள் எஸ்.ஏ.ஐ மையத்தில் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

 கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நன்கொடை அளித்த ஆஸி வீரர் பாட் கம்மின்ஸ்... அந்த மனசுதான் கடவுள் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக நன்கொடை அளித்த ஆஸி வீரர் பாட் கம்மின்ஸ்... அந்த மனசுதான் கடவுள்

டோக்கியோ ஒலிம்பிக்கிற்காக தங்களை தயார்படுத்திக்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட பயிற்சி முகாமில் கலந்து கொள்ள இந்திய மகளிர் ஹாக்கி அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை பெங்களூரில் உள்ள தேசிய முகாமுக்கு வந்தடைந்தது. 25 பேர் கொண்ட இந்த குழு பயிற்சி தொடங்குவதற்கு முன் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டது.

ஜனவரி மாதம், இந்திய அணி அர்ஜென்டினாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது, அங்கு ஏழு போட்டிகளில் விளையாடியது. இதையடுத்து பிப்ரவரி-மார்ச் மாதங்களில் ஜெர்மனி நாட்டு சுற்றுப்பயணத்தில், இந்திய மகளிர் அணி அங்கு நான்கு போட்டிகளில் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

English summary
Indian women's hockey captain Rani, six other players test positive for COVID-19. All the players and support staff are asymptomatic and have been placed under observation at the SAI centre.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X