சீனாவை அலறவிடும் HMPV தொற்று பெங்களுரில் உறுதி! இது எப்படி பரவும்? கட்டுப்படுத்துவது எப்படி?
பெங்களூர்: சீனாவில் இப்போது திடீரென பரவ தொடங்கியுள்ள ஹெச்எம்பிவி வைரஸ் தொற்று இப்போது கர்நாடக தலைநகர் பெங்களூரில் ஒரு குழந்தைக்குக் கண்டறியப்பட்டுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த ஹெச்.எம்.பி.வி வைரஸ் என்றால் என்ன.. இதன் அறிகுறிகள் என்ன.. சிகிச்சை முறை குறித்து நாம் விரிவாகப் பார்க்கலாம்.
5 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா மிகப் பெரிய ஒரு பெருந்தொற்றை ஏற்படுத்தி உலக நாடுகளைப் புரட்டிப்போட்டது அனைவருக்கும் நினைவில் இருக்கும். அதன் பாதிப்பில் இருந்து மீண்டு வரவே நமக்கு ஆண்டுக்கணக்கில் ஆனது.

குழந்தைக்குப் பாதிப்பு:
இந்தச் சூழலில் இப்போது சீனாவில் மீண்டும் ஹெச்.எம்.பி.வி வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. கொரோனாவை போலவே இதுவும் புத்தாண்டு சமயத்தில் பரவ தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில் தான் இப்போது பெங்களூரில் எட்டு மாத குழந்தைக்கு HMPV வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டது. அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிறுமிக்கு உறுதியாகியுள்ளது.
பொதுவாக எல்லா வைரஸ்களும் தன்னை தானே பல முறை மாற்றிக் கொள்ளும். கொரோனா வைரசில் கூட நாம் இதைக் கவனித்து இருப்போம். அப்படி சீனாவில் இப்போது ஒரு குறிப்பிட்ட வகை திரிபு தான் வேகமாகப் பரவுகிறது. இப்போது பெங்களூரில் அதே திரிபு தான் கண்டறியப்பட்டுள்ளதா.. இல்லை இது வேறு திரிபா என்பது குறித்துத் தெரியவில்லை என மருத்துவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏனெனில் சீனாவில் இப்போது எந்த வைரஸ் திரிபு பரவுகிறது என்பதை அந்நாட்டு அரசு அறிவிக்காத நிலையில், அதை ஒப்பிட்டு பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அதென்ன ஹெச்எம்பிவி தொற்று:
சரி இந்த ஹெச்எம்பிவி அதாவது ஹூமன் மெட்டாப்நிமோவைரஸ் வைரஸ் என்றால் என்ன.. இதன் அறிகுறிகள் என்ன.. இது எப்படிப் பரவுகிறது என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இது நியூமோவிரிடே வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்த நெகடிவ் சென்ஸ் ஆர்என்ஏ வகை வைரஸாகும். ஏவியன் மெட்டாப்நியூமோவைரஸ் துணைக்குழு சி உடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள இது புதிய வைரஸ் இல்லை.. கடந்த 2001ம் ஆண்டிலேயே இது கண்டுபிடிக்கப்பட்டது. அப்போது நெதர்லாந்தில் சுவாச தொற்று இருந்த குழந்தைகளிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளில் இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது.
அறிகுறி என்ன:
கொரோனாவை போலவே இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை தான் இதன் முக்கிய அறிகுறிகளாக இருக்கிறது. குழந்தைகள், முதியவர்கள் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்குத் தான் இது வேகமாகப் பரவுகிறது. மூச்சுக் குழாய் அழற்சி அல்லது நிமோனியா பாதிப்பும் கூட சிலருக்கு ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது.
எப்படி பரவுகிறது
கொரோனா வைரஸ் காற்றில் பரவும் என்பது அனைவருக்கும் தெரியும். கொரோனா உலகையே உலுக்கிப் போடும் அளவுக்கு மிகப் பெரிய பெருந்தொற்றாக மாற இதுவே முக்கிய காரணமாக இருந்தது. காற்றின் மூலம் பரவும் என்பதால் அது வேகமாகப் பரவியது. ஆனால், தற்போது கிடைத்துள்ள தகவல்களை வைத்துப் பார்த்தால் இந்த ஹெச்எம்பிவி தொற்று காற்றின் மூலம் பரவுவதாக அறிகுறிகள் இல்லை.
இருமல் அல்லது தும்மலில் இருந்து வெளிவரும் நீர்த்துளிகள் அல்லது ஏரோசோல்கள் மூலம் மட்டுமே பரவுகிறது. அதாவது நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்து இருப்போருக்கு மட்டுமே இது பரவ அதிக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
கவலைப்பட தேவையில்லை:
நாம் இங்கு மற்றொரு விஷயத்தையும் கவனத்தில் கொள்ளக் வேண்டும். அதாவது ஹெச்எம்பிவி வைரசில் பல திரிபுகள் இருக்கும் நிலையில், சீனாவில் இப்போது திடீரென பரவும் திரிபு தான் இந்த குழந்தைக்கு ஏற்பட்டுள்ளதா என்பது நமக்குத் தெரியாது. மேலும், எந்தவொரு வைரசாக இருந்தாலும் மாஸ்க் , சமூக இடைவெளி, அடிக்கடி கைகளைக் கழுவுதல் ஆகியவை வைரஸ் பரவலைத் தடுக்கும்.
மேலும், தற்போதுள்ள தகவலை வைத்துப் பார்க்கும் போது இது கொரோனா போன்ற பெருந்தொற்றை ஏற்படுத்த வாய்ப்பு குறைவு.. எனவே நாம் கவலைப்படத் தேவையில்லை.
-
இந்தியா கோட்டை விட்ட ‘தங்கமான’ வாய்ப்பு! ஈரான் போரை பயன்படுத்தி.. தட்டித் தூக்கிய சீனா! சூப்பர் பவர் -
காங்கிரஸ் கட்சியா இது? தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே அசாம் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! -
கரூர் கேஸ்.. செந்தில் பாலாஜிக்கு மட்டுமல்ல.. "அவங்களுக்கும்" சம்மன் அனுப்பும் சிபிஐ.. பயங்கர செக்! -
4 மணி நேரம் கூட இருக்காது.. தேர்தல் அறிவிப்புக்கு முன்பு மம்தாவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. பாயும் பாஜக! -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்? -
திமுக கூட்டணியில் தொடர்வது மறுபரிசீலனை செய்யப்படும்.. திடீரென டோனை மாற்றிய தவாக தலைவர் வேல்முருகன் -
Tamil Nadu Election 2026 Date: வெளியானது தமிழ்நாடு சட்டசபை தேர்தல் தேதி! எந்தெந்த தேதியில் என்னென்ன நடக்கும்? -
தோல்வியை ஒப்புக்கொண்ட அமெரிக்கா! ஈரான் முன் மண்டியிட்ட டிரம்ப்? குட்டி பாதையால் வீழ்ந்த வல்லரசு -
Rasi Palan: மகரம், கும்பம், மீனம் ராசிக்கான மார்ச் மாத பலன்.. அதிர்ஷ்டத்தை அள்ளப் போவது யார்? -
கான்ஃபிடண்டா இருங்க.. விஜய் வர்றாரு! எடப்பாடிக்கு பாஜக அனுப்பிய மெசேஜ்? இதனால் தான் கிளைமேக்ஸ் லேட்? -
ஏப்ரல் 23ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல்.. மே 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும்.. தேர்தல் ஆணையம்












Click it and Unblock the Notifications