பெரிய நஷ்டம்.. கர்நாடகாவில் மட்டும் ஓபனாகாத தக் லைப் புக்கிங்.. கமல்ஹாசனின் அடுத்த திட்டம் என்ன?
பெங்களூர்: கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தல் லைஃப் படத்திற்கான முன்பதிவு கர்நாடகாவை தவிர்த்து இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தொடங்கி இருக்கிறது. தமிழில் இருந்து பிறந்ததே கன்னட மொழி என்று கமல்ஹாசன் பேசி இருந்த நிலையில், கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. தற்போது கர்நாடகாவில் தக் லைஃப் படத்திற்கு முன்பதிவு திறக்கப்படாததால், அவரின் ரசிகர்கள் சோகமடைந்துள்ளனர்.
நாயகன் படத்திற்கு பின் மீண்டும் இயக்குநர் மணி ரத்னம் - கமல்ஹாசன் கூட்டணி இணைந்துள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிலம்பரசன், த்ரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஜோஜூ ஜார்ஜ், நாசர் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ள திரைப்படம் தக் லைஃப். பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தக் லைஃப் சர்ச்சை
சென்னையில் நடந்த இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் பங்கேற்றார். அவரை வரவேற்பதற்காக கமல்ஹாசன் பேசுகையில், ராஜ் குமாருடைய குடும்பம் அந்த ஊரில் இருக்கும் என்னுடைய குடும்பம். அதனால் சிவராஜ் குமார் இங்கு வந்துள்ளார். இதன் காரணமாக தான் எனது பேச்சை தொடங்கும் போது உயிரே.. உறவே.. தமிழே என்று தொடங்கினேன்.
தமிழில் இருந்து பிறந்த கன்னடம்
தமிழில் இருந்து பிறந்தது தான் கன்னடம். அதனை நீங்களும் ஒத்துக் கொள்வீர்கள் என்று தெரிவித்தார். தமிழில் இருந்து பிறந்ததுதான் கன்னடம் என்று கமல்ஹாசன் பேசிய பேச்சிற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியது. அம்மாநில முதல்வர் சித்தராமையா, கமல்ஹாசனுக்கு கன்னட மொழி குறித்த வரலாறு, பாரம்பரியம் தெரியவில்லை என்று விமர்சித்திருந்தார்.
கமல்ஹாசன் திட்டவட்டம்
பாஜக உள்ளிட்ட கட்சிகளும், கன்னட அமைப்புகளும் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்தன. அதேபோல் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்கவில்லை என்றால், கர்நாடகாவில் தக் லைஃப் படம் திரையிடப்படாது என்றும் அறிவித்தனர். ஆனால் கமல்ஹாசன், அன்பு ஒருபோதும் மன்னிப்பு கேட்காது. எனது கருத்தில் தவறு இல்லை. அதனால் மன்னிப்பு கேட்க போவதில்லை என்று பதில் அளித்தார்.
தக் லைஃப் டிக்கெட் முன்பதிவு
இதற்கும் கர்நாடகாவில் எதிர்ப்பு கிளம்பியது. அதேபோல் தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கம் தரப்பில் கமல்ஹாசனுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தக் லைஃப் படம் ஜூன் 5ல் வெளியாகிறது. இதனால் படத்திற்கான டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கப்பட்டது. முன்பதிவு தொடங்கிய நிமிடத்தில் இருந்து ரசிகர்கள் அதிகளவில் டிக்கெட்டை புக் செய்து வருகின்றனர். அதேபோல் மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் தக் லைஃப் படத்திற்கான முன் பதிவு தொடங்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் தடை
ஆனால் கர்நாடகாவில் மட்டும் தக் லைஃப் படத்திற்கான முன்பதிவு தொடங்கவில்லை. புக் மை ஷோ செயலியில் கர்நாடகா மாநிலத்தில் தேடினால், விரைவில் வெளியாகும் பட்டியலில் கூட தக் லைஃப் படம் இடம்பெறவில்லை. இதனால் தக் லைஃப் படத்திற்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது. இதனால் கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என்று பார்க்கப்படுகிறது. இதனை கமல்ஹாசன் எப்படி கையாள்வார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
-
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்! -
சப்ஜெக்ட்டுக்கு உயிர் வந்துருச்சு.. திருச்சி கிழக்கில் கமலை இறக்குங்க! திடீரென குரல் கொடுக்கும் மநீம -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications