பெங்களூர் ஐடி நிறுவனங்களுக்குள் நுழைந்து அடாவடி செய்த கன்னட அமைப்புகள்! டிகே சிவக்குமார் சொன்னதையும் கேட்கல

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனங்கள் மற்றும் தனியார் கம்பெனிகளுக்குள் நுழைந்த கன்னட அமைப்பினர், வேலைவாய்ப்புகளில் கர்நாடக இளைஞர்களுக்கே அதிக வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளித்தனர். சட்டத்தை தங்கள் கையில் எடுக்கக்கூடாது என்று டிகே சிவக்குமார் எச்சரிக்கை விடுத்த போதிலும் அவரது வேண்டுகோளை நிராகரித்த கன்னட அமைப்புகள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.

இந்தியாவின் சிலிகான் நகரம் என்று அழைக்கப்படும் நகரம் பெங்களூர். இங்கு ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. இங்குள்ள ஐடி நிறுவனங்களில் இந்தியா முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான டெக்கிகள் பணியாற்றி வருகிறார்கள். பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனங்களில் கன்னடர்களை புறக்கணிப்பதாகவும் தமிழ்நாடு மற்றும் இதர மாநிலங்களை சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படுவதாகவும் கர்நாடகாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு இருந்தார். இதுபெரும் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Kannada Organisations visiting Bangalore IT Companies defied DK Shivakumar warning

ஐடி நிறுவனங்களுக்குள் நுழைந்த கன்னட அமைப்புகள்

இதன் தொடர்ச்சியாக கன்னட அமைப்புகளும் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளன. கர்நாடாகாவில் உள்ள ஐடி நிறுவனங்களில் கன்னட மக்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று கூறி நவம்பர் 1 முதல் ஒரு மாத கால விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட உள்ளதாக கன்னட அமைப்புகளான கர்நாடக ரக்‌ஷன வேதிகே அமைப்பு தெரிவித்தது.

இதையடுத்து, கர்நாடகாவில் உள்ள ஐடி நிறுவனங்களுக்கு சென்ற கன்னட அமைப்பினர், அதன் நிர்வாகத்தினரிடம் கோரிக்கை மனுக்களை அளித்து வருகின்றன. கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் நியாயமான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று அந்த அமைப்பினர் வலியுறுத்தினர்.

கன்னட அமைப்புகள் ஐடி நிறுவனங்களுக்கு செல்லக்கூடாது. சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கக்கூடாது என்று கர்நாடக முதல்வர் டிகே சிவக்குமார் எச்சரிக்கை விடுத்து இருந்தார். ஆனால் டிகே சிவக்குமாரின் இந்த எச்சரிக்கையையும் மீறி கன்னட அமைப்புகள் ஐடி நிறுவனங்களுக்கு சென்று இந்த கோரிக்கையை வைத்து வருகிறார்கள்.

டிகே சிவக்குமார் வார்னிங்

முன்னதாக டிகே சிவக்குமார் கன்னட அமைப்புகளுக்கு விடுத்த வேண்டு கோளில், "கன்னடர்களும், மராட்டிய மக்களும் சட்டத்தை கையில் எடுக்கக்கூடாது. கன்னடர்களுக்கு வேலை வாய்ப்பு மறுப்பதாக எழுந்த விவகாரத்தில் கன்னட அமைப்பினர் ஐடி நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது. சட்டத்தை கையில் எடுத்து செயல்படுவது சரியான நடைமுறை இல்லை.

கலாசார காவல் என்ற பெயரில் அத்துமீறக்கூடாது. இதனை அனுமதிக்க முடியாது. புகார் இருந்தால் அதை அரசிடம்தான் தெரிவிக்க வேண்டும். காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுப்பார்கள்" என்று கூறியிருந்தார். டிகே சிவக்குமாரின் எசரிக்கையையும் மீறி கன்னட அமைப்புகள் இந்த போராட்டத்தில் இறங்கியுள்ளன.

கோரிக்கை மனு அளித்தனர்

நேற்று பெங்களூரில் உள்ள பல்வேறு ஐடி நிறுவனங்களுக்கும் கன்னட ரக்‌ஷிக வேதிகே அமைப்பின் துணைத்தலைவர் அப்பிகேரே வினோத் தலைமையிலான குழு சென்றது. பெங்களூரின் அலி அஸ்கர் சாலையில் உள்ள சபினா டவரில் செயல்பட்டு வரும் எக்ஸிகியூட்டிவ் சென்டர் இந்தியா லிமிடெட் நிறுவனத்துக்குச் சென்று நிர்வாகத்திடம் கோரிக்கை மனுவை அளித்தனர். அதேபோல கன்னட அமைப்பினர் பல்வேறு குழுக்களாக சென்று பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரிகளை சந்தித்து தங்கள் கோரிக்கை தொடர்பாக மனு அளித்தனர்.

அந்த மனுவில், நிறுவனங்களில் எத்தனை பேர் பணியாற்றுகிறார்கள். அதில் கன்னடர்களுக்கு வழங்கப்பபட்ட விகிதாச்சாரம் என்ன? என்ற விவரங்களையும் கேட்டுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் ஆள்சேர்ப்பு தரவுகள், உள்ளூர் நபர்களுக்கு வேலை வழங்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது பற்றிய விவரங்களும் கோரியுள்ளன. கர்நாடகாவின் உள்கட்டமைப்புகளில் பலன் அடையும் நிறுவனங்கள் உள்ளூர் மக்களின் வேலைவாய்ப்பு எதிர்பார்ப்புகளுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பதே தங்களது நிலைப்பாடு என்றும் கன்னட அமைப்புகள் கூறியுள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+