kantara 1 review : ரிஷப் ஷெட்டியே எதிர்பார்க்காத காந்தாரா 1 விமர்சனம்.. மிரள வைத்த முன்பதிவு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த 'காந்தாரா: ஏ லெஜண்ட் - சாப்டர் 1' திரைப்படம் கர்நாடகா மட்டுமின்றி உலகம் முழுவதும் தசரா பண்டிகையை முன்னிட்டு நாளை வெளியாகிறது. ரிஷப் ஷெட்டியின் முந்தைய படமான 'காந்தாரா' பெற்ற பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகு, இந்தத் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக மிக அதிகமாக இருக்கிறது. இது ஒரு ப்ரீக்வெல் என்பதால், முதல் பாகத்தில் விவரிக்கப்படாத அல்லது கேள்விக்குள்ளாக்கப்பட்ட விஷயங்களுக்குப் பதிலளிக்கும் என தெரிகிறது. இப்படத்தின் விமர்சனங்கள் இணையதளங்களில் வெளியாகி வருகின்றன. எனவே 'காந்தாரா: ஏ லெஜண்ட் - சாப்டர் 1' படத்தின் முதல் விமர்சனம் மற்றும் முன்பதிவு நிலவரம் பற்றி பார்ப்போம்.

Kantara Chapter 1 Rishab Shetty Tamil Cinema 1

ரிஷப் ஷெட்டி நடித்த 'காந்தாரா' சத்தமே இல்லாமல் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. வெகு இயல்பான கர்நாடகாவின் கலாச்சாரங்களில் ஒன்றை எடுத்து, கடவுளின் அவதாரங்களை காட்டி, மக்களை மெய்சிலிர்க்க வைத்திருப்பார் ரிஷப்ஷெட்டி. காந்தாரா கன்னடத்தில் மட்டுமல்ல, தமிழ் உள்பட எல்லா மொழியிலுமே பின்னாளில் டப் செய்யப்பட்டு மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. எனவே ரிஷப் ஷெட்டி அதில் பார்ட்2 எடுக்க திட்டமிட்டார். அதேநேரம் இதனை இரண்டாம் பாகமாக அல்லாமல் முதல் பாகமாக, அதாவது பில்லா படத்தில் எப்படி, பில்லாவாக அஜித் எப்படி மாறினார் என்று காட்டியிருப்பார்களோ, அதுபோல் காந்தாரா ஏ லெஜண்ட் சார்டர் ஒன்று படத்தை எடுக்க ரிஷப் ஷெட்டி திட்டமிட்டார். பல கடுமையான போராட்டம் மற்றும் விபத்துக்களை கடந்து படத்தை வெற்றிகரமாக எடுத்து முடித்தார்.

இந்தத் திரைப்பட மீதான எதிர்பார்ப்பு கர்நாடகாவில் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே மிக அதிகமாக உள்ளது. பில்லா பாணியில் ப்ரீக்வெல் (Prequel) என்பதால், முதல் பாகத்தில் விவரிக்கப்படாத அல்லது கேள்விக்குள்ளாக்கப்பட்ட விஷயங்களுக்குப் பதிலளிக்கும் என்று எதிர்பார்ப்பு உள்ளது. படம் அக்டோபர் 2ம் தேதியான நாளை தான் திரையரங்குகளில் வெளியாகிறது என்றாலும், முதல் விமர்சனங்கள் இணையத்தில் வெளியாகத் தொடங்கிவிட்டன. இப்படத்துக்கான ப்ரிவியூ ஷோக்கள் திரையிடப்பட்டுள்ளன. இப்படம் எப்படி இருக்கிறது என்று பார்ப்போம்.

காந்தாரா: ஏ லெஜண்ட் - சாப்டர் 1 முதல் விமர்சனம் : முதல் பாகத்தை விட இன்னும் சிறப்பானதாக உள்ளதாம்

'காந்தாரா: ஏ லெஜண்ட் - சாப்டர் 1' படத்தின் முதல் விமர்சனம், படம் வெளியாவதற்கு முன்னரே, ஒரு தெலுங்கு இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அந்த இணையதளம் இத்திரைப்படத்தைக் 'கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று' என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் அந்த இணையதளம், இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை பல வழிகளில் பூர்த்தி செய்யும் வகையில் விறுவிறுப்பாக உள்ளதாக கூறியுள்ளது. தெலுங்கு ஃபில்மிஃபோகஸ் என்ற இணையதளம் வெளியிட்ட விமர்சனத்தை அப்படியே பார்ப்போம். 'காந்தாரா: ஏ லெஜண்ட் - சாப்டர் 1' படத்தை ப்ரிவியூ பார்த்த பலரும் இப்படத்தின் காட்சிகளைப் பாராட்டி, இது 'காந்தாரா'வை விடவும் சிறப்பாக உள்ளதாக கூறியுள்ளனர்.

"காந்தாரா: ஏ லெஜண்ட் - சாப்டர் 1 அருமையாக இருக்கிறது. முதல் பாகத்தில் எழுப்பப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் இரண்டாம் பாகத்தில் விடை கிடைத்திருக்கிறது. இது இன்னும் சிறப்பாக இருந்தது. மேலும், படத்தின் தொழில்நுட்ப அம்சங்களும் மிகவும் பாராட்டும் வகையில் இருக்கிறது. இசை, பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு ஆகியவற்றை பார்வையாளர்கள் மிகவும் சிறப்பாக இருப்பதாக புகழ்ந்துள்ளனர்.

எனினும் திரைப்பட விமர்சகர் உமைர் சந்து என்பவர் 'எக்ஸ்' சமூக ஊடக தளத்தில் வெளியிட்ட பதிவில், "காந்தாரா: ஏ லெஜண்ட் - சாப்டர் 1! மின்னுவதெல்லாம் பொன்னல்ல! அதிகப்படியாக மதிப்பிடப்பட்ட, விசித்திரமான ஒரு திரைப்படம் என்று கூறியுள்ளார். எனினும் இதுவரை அதிக விமர்சனங்கள் வெளிவரவில்லை என்பதால், ரிஷப் ஷெட்டியின் படம் எப்படி இருக்கிறது என்பதை நாளைதான் தெரிந்து கொள்ள முடியும்.

காந்தாரா சாப்டர் 1 முன்பதிவு எப்படி

"காந்தாரா சாப்டர் 1" படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளதாக புக்கிங்கும் அதிகமாக இருக்கிறது. மணி கண்ட்ரோல் இணைதளம் வெளியிட்ட தகவலின்படி, ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய முன்பதிவில், ஒரே நாளில் 1.7 இலட்சத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் விற்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம், முன்பதிவு மூலம் இப்படம் ₹5.7 கோடி வருமானம் ஈட்டி இருக்கிறது. 2022-ல் வெளியான "காந்தாரா" திரைப்படம் அதன் முதல் நாளில் வெறும் ₹2 கோடி மட்டுமே வசூலித்தது . ஆனால் இப்போது முன்பதிவிலேயே கோடிகளை சம்பாதித்துள்து. இதை பார்க்கும் போது உண்மையில், "காந்தாரா சாப்டர் 1" தற்போது ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் நடித்த "வார் 2" மற்றும் பவன் கல்யாணின் "தே கால் ஹிம் ஓஜி" போன்ற பெரிய படங்களின் முன்பதிவு வசூலை முறியடித்து என்கிறார்கள் கர்நாடகாவில்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+