முஸ்லிம் தலைமை ஆசிரியரை மாற்ற பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம்.. கர்நாடகாவில் சிக்கிய இந்து அமைப்பினர்
பெங்களூர்: கர்நாடகாவில் பள்ளி தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்து சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி தலைமை ஆசிரியராக பணியாற்றி வரும் சுலைமான் என்கிற இஸ்லாமியரை பணியிடம் மாற்றம் செய்வதற்காக, அங்குள்ள இந்து இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் தண்ணீர் தொட்டியில் பூச்சி மருந்து கலந்துள்ளனர். இதில் 11 மாணவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில், 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டம், ஹூள்ளிக்கட்டி பகுதியில் அரசுப்பள்ளி இயங்கி வருகிறது. அங்கு சுலைமான் கொரிநாயக் என்பவர் தலைமை ஆசிரியராக உள்ளார். கிட்டத்தட்ட 13 வருடங்களாக அவர் அங்கு பணியாற்றி வருகிறார். உள்ளூர் கிராம மக்களிடம் அவர் மிகவும் நல்ல உறவில் இருக்கிறார்.

முஸ்லிம் தலைமை ஆசிரியர்
அதேநேரத்தில் அவர் முஸ்லிம் என்பதால், இந்து மற்றும் வலதுசாரி இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் அவருக்கு எதிராக இருந்துள்ளனர். அதனால் தலைமை ஆசிரியர் சுலைமானை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று இந்து இயக்கங்கள் கூறி வந்துள்ளனர். ஆனால், அவரின் சிறப்பான சேவை காரணமாக பணியிடமாற்றம் செய்யவில்லை.
இதையடுத்து அவருக்கு எப்படியாவது அவப்பெயர் ஏற்படுத்தி, பள்ளியில் இருந்து மாற்றி நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளனர். அதன்தொடர்ச்சியாக பள்ளியின் தண்ணீர் தொட்டியில் விஷத்தை கலந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சாகர் பாட்டீல், கிருஷ்ணா மதர், மகன்கௌடா பாட்டீல் ஆகிய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பூச்சி மருந்து கலப்பு
இதுகுறித்து பெலகாவி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பீமாசங்கர் குலேத் கூறுகையில், "கடந்த ஜூலை 20 ஆம் தேதி அந்தப் பள்ளியைச் சேர்ந்த 11 மாணவர்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். விசாரணையின்போது தண்ணீர் தொட்டியில் ஒரு வித நாற்றம் வந்தது. அதற்குள்ளேயே ஒரு பூச்சி மருந்தின் பாட்டிலும் கண்டறியப்பட்டது.
பரிசோதனையில் தண்ணீர் தொட்டியில் பூச்சி மருந்து கலந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினோம். அதில் பள்ளியில் பணியாற்றும் இஸ்லாமியை தலைமை ஆசிரியரை டிரான்ஸ்பர் செய்வதற்காக இந்து இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இதை செயல்படுத்தியது தெரிந்தது.
சதி திட்டம் தீட்டியது எப்படி
சாகர் பாட்டீல் என்பவர் ஶ்ரீராம் சேனா என்கிற இந்து இயக்கத்தின் மாவட்ட தலைவராக உள்ளார். அவர் தான் இந்த சம்பவத்தின் மூளையாக செயல்பட்டுள்ளார். அவரது மிகவும் கெட்டப் பெயராகி பணியிட மாற்றம் செய்ய சாகர் இந்த திட்டத்தை தீட்டியுள்ளார். இதற்காக கிருஷ்ணாவை மற்றொரு விஷயத்தில் பிளாக் மெயில் செய்து இந்த சம்பவத்தில் ஈடுபடுத்தியுள்ளார்.
இவர்கள் கடந்த ஜூலை 18 ஆம் தேதி முனவல்லி என்கிற பகுதியில் உள்ள கடையில் பூச்சி மருந்து வாங்கியுள்ளனர். இவர்கள் நேரடியாக கலக்காமல் அங்குள்ள சிறுவனுக்கு ரூ.500 பணம் மற்றும் ஸ்நாக்ஸ் வாங்கிக் கொடுத்து அவர் மூலம் தண்ணீர் தொட்டியில் விஷம் கலந்துள்ளனர். ஆனால் சிறுவன் பூச்சி மருந்து பாட்டிலை அருகிலேயே போட்டு சென்றுவிட்டான்.
கண்டனம்
அதுதான் எங்களுக்கு கிடைத்த துருப்பு. அதை வைத்துக் கொண்டு கடைக்காரரை பிடித்து, பூச்சி மருந்து யார் வாங்கினார்கள் என்று கண்டறிந்தோம். விசாரணையில் அவர்கள் 3 பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்தனர். அதனடிப்படையில் தான் அவர்களை கைது செய்தோம்." என்றார். இந்த சம்பவத்துக்கு கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications