பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஏழை பிராமண அர்ச்சகரை மணந்து கொண்டால் ரூ. 3 லட்சம்.. கர்நாடக அரசின் அதிரடி திட்டம்

கர்நாடக பிராமண பெண்ணுக்கு நிதியுதவி வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

பெங்களூரு: ஏற்கனவே பாஜக அரசு பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களைவிட பிராமண சமூகத்துக்கு மட்டும் முன்னுரிமை அளிப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், கர்நாடக மாநிலத்திலும் கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு மீது அப்படி ஒரு புகார் கிளம்பி உள்ளது.

பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்களுக்கு இட ஒதுக்கீடு என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.. அந்த வகையில், கர்நாடக மாநில பிராமணர்கள் வளர்ச்சிக் கழகத்தை கடந்த ஆண்டு உருவாக்கியது...அந்த பிராமணர்கள் கழகம் புதிதாக இரண்டு திட்டங்களைக் கொண்டுவந்துள்ளது... அதன்படி 8 லட்சம் ரூபாய் மற்றும் 5 ஏக்கர் நிலமும் பின் தங்கியவர்களுக்கான அளவுகோலாக நிர்ணயிக்கப்பட்டது.

Karnataka brings Poor brahmin brides who married priests get 3 lakhs scheme

இந்த அறிவிப்புப்படி கர்நாடக பிராமண சமூகத்துக்கு, இந்த 2 திட்டங்களையும் அம்மாநில அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.. அருந்ததி, மைத்ரே என்று இந்த திட்டங்களுக்கு பெயரும் வைத்தது.

கர்நாடக மாநில பிராமண மேம்பாட்டு வாரியத்தின் கீழ், அருந்ததி திட்டத்தின் கீழ், திருமணமாகும் பிராமண பெண்ணின் குடும்பத்திற்கு, கல்யாணத்திற்காக ரூ.25,000 வழங்கப்படும். அதேபோல் மைத்ரேய் திட்டத்தில், பிராமண சமூகத்திற்குள் பிராமண சமூக மணமகள் கல்யாணம் செய்து கொண்டால் அல்லது அர்ச்சகரை கல்யாணம் செய்து கொண்டால் ரூ.3 லட்சம் வழங்கப்படும்.

இந்த பணம் 3 தவணைகளாக அவர்களுக்கு வழங்கப்படும். 4வது, வட்டியும் அந்த பெண் முழு பணத்தையும் பெற்றுக்கொள்ளலாம். இதனால், அருந்ததி திட்டத்தின் கீழ், 550 பிராமண குடும்பங்களும், மைத்ரேய் திட்டத்தின் மூலமும் 25 பிராமண குடும்பங்களும் பயனடைவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டங்களின் கீழ் பயன் பெறுபவர்களுக்கு 5 ஏக்கருக்கு மேல் விவசாய நிலம் இருக்கக் கூடாது.

1,000 சதுர அடிக்கு அதிகமான வீடு இருக்கக் கூடாது. அவர்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின சமூகமாக இருக்கக் கூடாது. ஆண்டு வருமானம் 8 லட்ச ரூபாய்க்கு அதிகமாக இருக்கக் கூடாது என்றும் வரையறைக்கப்பட்டுள்ளது.

English summary
Karnataka brings Poor brahmin brides who married priests get 3 lakhs scheme
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X