Own Goal போடும் காங்கிரஸ்.. கர்நாடகாவில் சித்தராமையா வைக்கும் செக்! டிகே சிவக்குமாருக்கு நெருக்கடி

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: தேசியளவில் காங்கிரஸ் கட்சி சாதிவாரி கணக்கெடுப்பு, மேலும் அதை மையமாக வைத்து நலத்திட்டங்களை கோரி வருகிறது. இப்போது கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியில் இருக்கும் நிலையில், அங்கு இந்த கோரிக்கையே காங்கிரஸுக்கு சிக்கலாக மாறியிருக்கிறது. சித்தராமையா சொன்ன ஒரு விஷயம் டிகே சிவக்குமார் அரசுக்கு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது.

2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பில் சாதிவாரி விவரங்களை சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து, பாஜக தலைமையிலான மத்திய அரசுக்கு காங்கிரஸ் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வருகிறது. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு சமூகத்தின் மக்கள் தொகை எவ்வளவு என்பது துல்லியமாக தெரியாமல் இடஒதுக்கீடு, பிரதிநிதித்துவம் பகிர்வது தொடர்பான முடிவுகளை எடுக்க முடியாது என்பதே காங்கிரஸின் வாதமாக உள்ளது.

Karnataka Caste Census

கர்நாடகா அரசு

ஆனால் இந்த விவகாரம் தற்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் கர்நாடகாவிலேயே அக்கட்சிக்கு புதிய அரசியல் சிக்கலை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு, அதன் புதிய அறிக்கையும் தயாராக வருகிறது. இதற்கிடையே அதை ஏன் நடைமுறைப்படுத்தவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த கேள்வியை முன்னாள் முதல்வர் சித்தராமையாவே தனது கட்சி அரசுக்கு முன்வைத்திருப்பது கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது.

பெங்களூரில் செப்டம்பர் 6ஆம் தேதி நடைபெற்ற கர்நாடக மாநில பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் பேசிய சித்தராமையா, சாதிவாரி கணக்கெடுப்பு முடிவுகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். அவர் மேலும், "தலித்துகள், பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் மற்றும் சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டை 75 சதவீதமாக உயர்த்த வேண்டும்.

75 சதவீத இடஒதுக்கீடு

அனைவருக்கும் சமூக நீதி கிடைக்க வேண்டும் என்றால் குறைந்தபட்சம் 75 சதவீத இடஒதுக்கீடு இருக்க வேண்டும்.. ஒவ்வொரு சமூகத்தின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். அரசு பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் மட்டுமின்றி, மக்களவை மற்றும் சட்டசபைகளிலும் மக்கள் தொகை மற்றும் சமூக பிரதிநிதித்துவத்தை பிரதிபலிக்கும் வகையில் அரசியல் பிரதிநிதித்துவம் இருக்க வேண்டும்" என்றார்.

சாதிவாரி கணக்கெடுப்பு தொடர்பாக தேசிய அளவில் காங்கிரஸ் முன்வைக்கும் கோரிக்கையுடன் சித்தராமையாவின் கோரிக்கையும் ஒத்துப்போகிறது. சாதி விவரங்கள் இல்லாமல் சமூக நீதி மற்றும் பிரதிநிதித்துவம் குறித்து முடிவெடுப்பது சரியானதல்ல என காங்கிரஸ் தொடர்ந்து கூறி வருகிறது. அதையே தான் இங்கு சித்தராமையாவும் வலியுறுத்துகிறார்.

கர்நாடகாவில் என்ன நடந்தது

2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினரைத் தாண்டி பிற சாதிகளின் விவரங்களும் நாடு முழுவதும் பதிவு செய்யப்பட உள்ளன. இதனை காங்கிரஸ் முக்கிய அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக பிற்படுத்தப்பட்டோர் தொடர்பான தகவல்கள் சரியாக பதிவு செய்யப்படாமல் இருப்பது குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசை காங்கிரஸ் விமர்சித்து வருகிறது. ஆனால் கர்நாடகாவில் நிலைமை வேறாக இருக்கிறது. அங்கு புதிய சாதிவாரி கணக்கெடுப்பு ஏற்கனவே நடத்தப்பட்டுள்ளதுடன், அதன் அறிக்கை 2025 நவம்பரிலேயே தயாராக இருப்பதாக கூறப்படுகிறது.

கர்நாடகாவில் சாதிவாரி கணக்கெடுப்பு புதிதல்ல. சித்தராமையா முதல்வராக இருந்த முந்தைய ஆட்சி காலத்தில் 2015ஆம் ஆண்டு எச்.காந்தராஜ் தலைமையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2017ஆம் ஆண்டுக்குள் அது முடிக்கப்பட்டபோதிலும், சில காரணங்களால் அதனை செயல்படுத்த முடியவில்லை. மாநிலத்தின் முக்கிய சமூகங்களான லிங்காயத்துகள் மற்றும் வொக்கலிகாக்களிடையே எதிர்ப்புகள் எழுந்ததால் அறிக்கை சட்டசபையில் கூட தாக்கல் செய்யப்படவில்லை. வாக்கு அரசியல் காரணமாக அடுத்தடுத்த ஆட்சிகளும் இந்த விவகாரத்தை கையில் எடுக்க யோசித்தன.

புதிய சர்வே

2023ல் சித்தராமையா மீண்டும் முதல்வரான போது இந்த விவகாரம் பேசுபொருளானது. பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையை ஏற்க தேவையான நடவடிக்கையை முன்னெடுத்தனர். இருப்பினும், பழைய சர்வே எடுத்து பல ஆண்டுகள் ஆனதால் அதன் டேட்டா குறித்து பல கேள்விகள் எழுந்தன. இதையடுத்து புதிய சாதிவாரி கணக்கெடுப்புக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத் தொடர்ந்தே புதிய சர்வே எடுக்கப்பட்டது.

தற்போது முதல்வர் பதவியில் இல்லாத சித்தராமையா, தேர்தல் அரசியலில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இருப்பினும், சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இட ஒதுக்கீடு விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்ததன் மூலம் டி.கே. சிவகுமார் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு அவர் அழுத்தம் கொடுத்துள்ளார்.

அடுத்து என்ன

சாதி விவரங்கள் சமூக நீதிக்கு அவசியம் என தேசிய அளவில் வலியுறுத்தும் காங்கிரஸ், கர்நாடகாவில் அதே நிலைப்பாட்டை எடுத்து நடவடிக்கை எடுக்குமா என்பதே இப்போது முக்கிய கேள்வியாக இருக்கிறது. 75% இட ஒதுக்கீடு என்ற கோரிக்கை அரசியல் ரீதியாக வலுவானதாக இருந்தாலும், அதனை நடைமுறைப்படுத்துவதில் சட்டரீதியான சிக்கல்களும் எழலாம்.

மேலும், கர்நாடகாவின் பல்வேறு செல்வாக்குமிக்க சாதியினர் இட ஒதுக்கீடு, பிரதிநிதித்துவம் வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறார்கள். எனவே இது இரு பக்கமும் கூர்மையான கத்தியை போன்றது தான். காங்கிரஸ் இதை சரியாக கையாண்டால் பாஜகவை மீண்டும் வீழ்த்தலாம். ஆனால், தப்பாக கையாண்டால் காங்கிரஸுக்கு மரண அடி விழும்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+