இலவச அரிசி திட்டத்தை காலி செய்யும் மத்திய பாஜக அரசு-உடனே வீதியில் இறங்கியது கர்நாடகா காங்கிரஸ் அரசு!
பெங்களூர்: கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் இலவச அரிசி திட்டத்துக்கு மத்தியில் ஆளும் பாஜக அரசு முட்டுக்கட்டை போடுவதைக் கண்டித்து வரும் 20-ந் தேதி மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என துணை முதல்வர் டிகே சிவகுமார் அறிவித்துள்ளார்.
கர்நாடகாவில் நியாய விலை கடைகளில் ஏற்கனவே 5 கிலோ இலவச அரிசி வழங்கப்படுகிறது. கர்நாடகா தேர்தலின் போது காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் மேலும் 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டது.

கர்நாடகா தேர்தலில் வென்ற காங்கிரஸ் கட்சி ரேஷனில் இலவசமாக 10 கிலோ அரிசி வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனை ஏற்ற மத்திய அரசு கர்நாடகாவுக்கு கூடுதலாக அரிசி வழங்கப்படும் என உறுதி அளித்திருந்தது. ஆனால் திடீரென மாநிலங்களுக்கு அரிசி, கோதுமை விற்பனையை நிறுத்துவதாக மத்திய பாஜக அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவால் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழே இல்லாத, பொதுமக்களுக்கு இலவச அரிசி வழங்கக் கூடிய தமிழ்நாடு, கர்நாடகா,மேற்கு வங்கம், தெலுங்கானா மாநிலங்கள் பாதிப்பை எதிர்கொள்ளக் கூடும் என்கிற அச்சம் உள்ளது. இதனால் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் இலவச அரிசி திட்டம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. மத்திய அரசின் இம்முடிவுக்கு அரசியல் கட்சிகள், மாநில அரசுகள் கடும் எதிர்ப்பை தெரிவித்தும் வருகின்றன.
மத்திய பாஜக அரசின் இம்முடிவால் கர்நாடகா காங்கிரஸ் அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. மேலும் தமிழ்நாடு, தெலுங்கானா மாநில அரசுகளுடன் பேசி கூடுதல் அரிசி பெறுவதற்கான முயற்சிகளையும் கர்நாடகா முதல்வர் சித்தராமையா மேற்கொண்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினிடம் சித்தராமையா இன்று தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்துவார் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மத்திய பாஜக அரசின் இந்த மாற்றாந்தாய் கொள்கையைக் கண்டித்து கர்நாடகா மாநிலம் முழுவதும் வரும் 20-ந் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என துணை முதல்வர் டிகே சிவகுமார் அறிவித்துள்ளார்.
-
காங்கிரசுக்கு ராஜ்யசபா எம்பி சீட் காலி? மீனாட்சி நடராஜனின் மனு.. உச்ச நீதிமன்றம் நிராகரித்தது ஏன்? -
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்?












Click it and Unblock the Notifications