‛தனி மெஜாரிட்டி’ கர்நாடகாவில் அடித்து ஆடிய காங்கிரஸ்! பாஜக, ஜேடிஎஸ் சறுக்கியது இங்கே தான்! டேட்டா
பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்துள்ளது. மாறாக பாஜக ஆட்சியை இழந்ததோடு, படுதோல்வி அடைந்துள்ளது. அதேபோல் ஜேடிஎஸ் கட்சியும் பெரிய அளவில் சறுக்கலை சந்தித்துள்ளது. இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றியதற்கும், பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் படுதோல்வி அடைந்ததற்கான டேட்டா வெளியாகி உள்ளது.
கர்நாடகாவில் உள்ள 224 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி தேர்தல் நடந்தது. மொத்தம் 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இந்த ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. பாஜக படுதோல்வி அடைந்து காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை இழந்தது. இதன்மூலம் தென்மாநிலங்களில் இருந்து பாஜக மொத்தமாக வெளியேற்றப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் ஆட்சியமைக்க 113 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால் காங்கிரஸ் கட்சி மொத்தம் 135 தொகுதிகளில் வெற்றி பெற்று தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை பிடித்துள்ளது. பாஜக 66 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஜேடிஎஸ் 19 தொகுதிகளிலும் மற்றவர்கள் 4 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும் கடந்த 2018 தேர்தலை ஒப்பிடும்போது இது காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய வெற்றியாகும். கடந்த முறை காங்கிரஸ் கட்சி 80 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் இப்போது 55 இடங்கள் கூடுதலாக பெற்றுள்ளது. மாறாக பாஜக 104 இடங்களில் இருந்து 38யை இழந்து 66 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. ஜேடிஎஸ் கட்சி கடந்த முறை 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த முறை 18 தொகுதிகளை இழந்து வெறும் 19 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் தான் புதிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது மொத்தமுள்ள 224 தொகுதிகளில் கடந்த தேர்தலில் பாஜக 104 இடங்களை வென்ற நிலையில் அதில் தற்போது வெறும் 43 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 2018 தேர்தலில் வென்ற தொகுதிகளை பாஜக தக்கவைத்து கொள்வதில் 59 சதவீதம் தோல்வியடைந்துள்ளது. இதனால் தான் 61 தொகுதிகளை இழந்துள்ளது . இந்த 61 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 53 தொகுதிகளையும் மற்றவர்கள் 8 தொகுதிகளையும் பாஜகவிடம் இருந்து இந்த முறை பறித்துள்ளனர்.

அதேபோல் காங்கிரஸ் கட்சியை எடுத்து கொண்டால் கடந்த முறை வென்ற தொகுதிகளில் 58 இடங்களை இந்த முறையும் தக்கவைத்துள்ளது. இது 73 சதவீத வெற்றியாகும். அதேநேரத்தில் கடந்த முறை வென்ற 22 தொகுதிகளை காங்கிரஸ் கட்சி இழந்துள்ளது. இதில் 17 தொகுதிகளை பாஜக கைப்பற்றிய நிலையில் மற்றவர்கள் 5 தொகுதிகளில் வென்றுள்ளனர்.
ஜேடிஎஸ் கட்சியை எடுத்து கொண்டால் கடந்த முறை வென்ற 37 தொகுதிகளில் இப்போது 8 ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 29 தொகுதிகளை பறிகொடுத்துள்ளது. இதில் காங்கிரஸ் கட்சி 22 இடங்களையும், மற்றவர்கள் 7 இடங்களையும் ஜேடிஎஸ் கட்சியிடம் இருந்து பறித்துள்ளனர். ஒருவேளை பாஜக, ஜேடிஎஸ் கட்சிகள் கடந்த முறை வென்ற தொகுதிகளில் நன்கு கவனம் செலுத்தி இருந்தால் கூட காங்கிரசுக்கு ‛டப்பைட்' கொடுத்து இருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு -
திரிஷா பற்றிய மொத்த பிரச்சனைகளுக்கும் ஒரே போஸ்டில் அவரே பதில்.. இப்படி ஒரு ரியாக்ஷனை எதிர்பார்க்கலையே












Click it and Unblock the Notifications