மஞ்சள் + சிவப்பு நிறம்.. கன்னட கொடிக்கு மீண்டும் அங்கீகாரம் கோரும் கர்நாடகா - டிகே சிவக்குமார் பிளான்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: கர்நாடகாவிற்கு மஞ்சள், சிவப்பு நிறத்திலான மாநில கொடியை அங்கீகரிக்க மத்திய அரசு மறுத்துவிட்டது. இந்நிலையில் தான் ''கன்னட கொடிக்கு அதிகாரப்பூர்வமாக மாநில கொடிக்கான அங்கீகாரம் வழங்கவும், அதனை தேசியக்கொடி போல் அரசு கட்டங்களில் ஏற்றுவதை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. '' என்று கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் கூறினார்.

karnataka-government-bring-law-for-kannda-flag-in-government-and-private-offices-says-cm-dk-shivaku

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக டிகே சிவக்குமார் உள்ளார். கர்நாடகா மொழிவாரி மாநிலமாக உருவான நவம்பர் 1ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் கன்னட ராஜ்யோத்சவா தினம் என கொண்டாடப்பட்டு வருகிறது.

அந்த வகையில் இன்று கர்நாடகா முழுவதும் கன்னட ராஜ்யோத்சவா தினம் கொண்டாடப்பட்டது. பெங்களூரில் நடந்த கொண்டாட்டத்தில் தேசியக்கொடியுடன், கன்னட கொடியை ஏற்றி வைத்த பிறகு கர்நாடகா முதல்வர் டிகே சிவக்குமார் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:

இப்போதுதான் நான் தேசிய கொடிக்கு அருகில் கன்னட கொடியை ஏற்றினேன். கன்னடக் கொடிக்கு அதிகாரப்பூர்வ மாநிலக் கொடி அந்தஸ்தை வழங்குவது குறித்து அரசு ஏற்கனவே விவாதித்துள்ளது.

இதற்கு முன்பு மாநில அமைச்சரவை இதுகுறித்து முடிவெடுத்து மத்திய அரசிடம் அங்கீகாரம் கோரி விண்ணப்பித்திருந்து இருந்தது. ஆனால் மத்திய அரசு அனுமதிக்கவில்லை.

இருப்பினும் கர்நாடகாவில் கன்னட கொடிக்கு அதிகாரப்பூர்வமாக மாநில கொடி அந்தஸ்து வழங்குவது பற்றி அரசு ஏற்கனவே ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளது. இதுபற்றி மாநில அமைச்சரவையிலும், பெலகாவில் விரைவில் நடைபெற உள்ள சட்டசபை கூட்டத்தொடரில் இதுபற்றி விவாதிக்கப்படும். இதற்கு தேவையான சட்ட வடிவமைப்பை உருவாக்கி அதிகாரப்பூர்வமாக தீர்மானம் நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது.

அனைத்து அரசு அலுவலக கட்டிடங்களிலும் தேசியக் கொடியுடன் கன்னட கொடியையும் ஏற்றுவதை உறுதி செய்ய, தேவையான சட்ட முன்வடிவை உருவாக்கவும், அதிகாரப்பூர்வமாக தீர்மனம் நிறைவேற்றவும் எனது அரசு உறுதியுடன் உள்ளது'' என்றார்.

கர்நாடகாவில் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் கன்னட கொடி உள்ளது. இதனை அங்குள்ள மக்கள் மாநில கொடியாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் இந்த கொடிக்கு தற்போது வரை மத்திய அரசு அங்கீகாரம் வழங்கவில்லை. மாநில அரசு அங்கீகாரம் கோரியபோது மாநிலத்துக்கு என்று தனி கொடி வழங்க முடியாது என்று மத்திய அரசு மறுத்துவிட்டது.

இருப்பினும் கன்னட ராஜ்யோத்சவா உள்ளிட்ட தினங்களில் இந்த கொடியை கர்நாடகாவின் பல்வேறு இடங்களில் ஏற்றப்பட்டு வருகிறது. அரசு விழாக்களிலும் தேசியக்கொடியுடன் ஏற்றப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+