"வீக் என்ட் லாக்டவுன்.." இரவு நேரத்திலும் ஊரடங்கு.. கட்டுப்பாடுகளை கிடுகிடுவென அதிகரித்த கர்நாடகா
பெங்களூர்: கேரளா மற்றும் மகாராஷ்டிராவின் எல்லை மாவட்டங்களில் வார இறுதி ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
வார இறுதி ஊரடங்கு என்பது, வெள்ளிக்கிழமை இரவு 9 மணி முதல் திங்கள் காலை 5 மணி வரை, 8 எல்லை மாவட்டங்களில் அமலுக்கு வருகிறது.
பீதர், கல்புர்கி, பெலகாவி, விஜயபுரா ஆகிய வட கர்நாடக எல்லைப்புற மாவட்டங்களிலும், சாம்ராஜ்நகர், மைசூரு, குடகு மற்றும் தட்சின கன்னடம் ஆகிய தெற்கு மாவட்டங்களிலும் இந்த புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும்.

பசவராஜ் பொம்மை அறிவிப்பு
கொரோனா தொடர்பான ஆலோசனைக் குழு மற்றும் பிற மூத்த அதிகாரிகளுடன் இன்று நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்த அறிவிப்பை முதல்வர் பசவராஜ் பொம்மை வெளியிட்டார். நாட்டிலேயே, மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில்தான் கொரோனா பாதிப்புகள் மோசமாக இருப்பதால், இந்த கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன. அதேநேரம், பெங்களூர் நகரம் மற்றும் பெங்களூர் கிராமப்புற மாவட்டங்களில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு அமல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இரவு நேர ஊரடங்கு வழக்கம்போல தொடரும்.

பள்ளிகள் திறப்பு
ஆகஸ்ட் 23 முதல் மாற்று நாட்களில் (ஆல்டர்னேட்டிவ் டேஸ்) பள்ளிகள் மற்றும் பியூசி கல்லூரிகளை (9 முதல் 12 வரை) மீண்டும் திறக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். நிலைமையை ஆய்வு செய்த பின்னர் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளது.

கர்நாடக நிலவரம்
கர்நாடகா கடந்த வியாழக்கிழமை 1,785 புதிய கொரோனா வைரஸ் கேஸ்கள் மற்றும் 25 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது, மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 29.13 லட்சமாகவும், இதுவரை பலியானோர் எண்ணிக்கை 36,705 ஆகவும் உள்ளது. 1,651 டிஸ்சார்ஜ்கள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை கர்நாடக மாநிலத்தில் மொத்த ரெக்கவரி எண்ணிக்கை 28,52,368 ஆக உள்ளது.

புதிய கேஸ் எண்ணிக்கை
வியாழக்கிழமை பதிவான 1,785 புதிய கேஸ்களில், 414 பெங்களூர் நகரத்தைச் சேர்ந்தவை. 5 இறப்புகள் அன்றைய தினம் பதிவாகின. மாநிலத்தில் மொத்தம் உள்ள ஆக்டிவ் கேஸ்கள் எண்ணிக்கை 24,414 ஆகும்.

நோய் பரவல்
ஒரு நாள் நேர்மறை விகிதம் 1.10 சதவிகிதம், இறப்பு விகிதம் (சிஎஃப்ஆர்) 1.40 சதவிகிதம். வியாழக்கிழமை பதிவான 25 இறப்புகளில் 5 பெங்களூர் நகர், பெலகாவி, தட்சிண கன்னடம் மற்றும் கோலார் 3, மண்டியா, மைசூர் மற்றும் உடுப்பி 2 ஆகும்.
Recommended Video

எந்த மாவட்டங்கள்
புதிய கேஸ்கள் பதிவாகியுள்ள மாவட்டங்களில், பெங்களூர் நகரத்தில் 414, தட்சிண கன்னடா 337, உடுப்பி 134, ஹாசன் 125, மைசூரு 105, குடகு 100 உள்ளன. இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையில், பெங்களூர் நகர மாவட்டம் முதலிடத்தில் உள்ளது, மொத்தம் 12,29,340 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மைசூர் 1,73,599 மற்றும் தும்கூர் 1,18,136 கேஸ்கள் பதிவாகியிருந்தன. கர்நாடகாவில் கேஸ்கள் பெரிதாக அதிகரிக்கவில்லை. ஏற்கனவே இருந்த டிரெண்ட்தான் தொடர்கிறது. ஆயினும், முன்னெச்சரிக்கையாக இதுபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகிறது.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
Real Estate: தமிழகத்தில் கட்டுமான பொருட்களின் விலை கிடுகிடு உயர்வு! வீடு கட்டுவோர் கவலை! -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
அண்ணாமலையின் ஸ்கெட்ச்.. பாஜகவுக்கு இல்லை! அதிமுகவுக்குதான்! எடப்பாடி பழனிசாமி ஷாக்! -
‘பப்ஜி' கேமால் சிதைந்த குடும்பம்.. தந்தை - அக்காளை கொன்ற இளைஞர்.. தாய் உயிருக்கு போராட்டம் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
விஜய் வந்தும் வேலைக்கு ஆகல! சர்ச்சையை கிளப்பும் சட்டம் ஒழுங்கு.. டிஜிபி அதிரடி உத்தரவு! -
பத்திரப்பதிவு செய்ய இனி சார் பதிவாளர் அலுவலகங்களுக்கு நேரில் செல்ல வேண்டாம்! தமிழக அரசு அதிரடி! -
தந்தை - மகனை காப்பாற்றிய பூனை.. வீட்டு மேற்கூரை இடிந்தபோது என்ன நடந்தது? கர்நாடகாவில் நெகிழ்ச்சி -
டிகே சிவக்குமாருக்கு அடுத்த ஷாக்.. ராமலிங்க ரெட்டியை தொடர்ந்து இன்னொரு அமைச்சர் ராஜினாமா? கர்நாடகாவில் குழப்பம்












Click it and Unblock the Notifications