ஹிஜாப் விவகாரம்: ஒரே சீருடை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது- கர்நாடகா உயர்நீதிமன்றம்
பெங்களூரு : கர்நாடக அரசின் ஒரே சீருடை திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என தீர்ப்பளித்து கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணா எஸ் தீக்ஷித், வழக்கை விரிவான அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகாவில் உள்ள உடுப்பி, சிவமோகா, சிக்மக்ளூர், மங்களூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள உயர்நிலைப் பள்ளிகள், கல்லூரிகளில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வர திடீர் எதிர்ப்பு கிளம்பியது.
இந்த நிலையில் ஹிஜாப் அணிந்து கொண்டு கல்வி நிறுவனங்களுக்குள் முஸ்லீம் மாணவிகள் வந்தால் நாங்களும் காவி துண்டு அணிவோம் என கூறி இந்துத்துவா மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். தங்கள் உரிமைகளுக்காக முஸ்லீம் மாணவிகள் பள்ளி வாயிலில் அமர்ந்து போராடி வருகிறார்கள்.

ஹிஜாப் விவகாரம்
ஹிஜாப் பிரச்சனை தீவிரமடைந்து வரும் நிலையில் பதற்றத்தைத் தணிக்க பள்ளி கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உடுப்பி அரசு பல்கலைக்கழக பெண்கள் கல்லூரியில் படிக்கும் சில மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஹிஜாப் அணிவதற்கு உரிமை உண்டு என தீர்ப்பு அளிக்க கோரி மாணவிகள் ரேஷ்மா பாரூக், காஜிரா மற்றும் அவரது தாய் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணா எஸ் தீட்சித் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கு தொடர்ந்த மாணவிகள் சார்பாக வழக்கறிஞர் தேவதாத் காமத், அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பிரபுலிங் நவத்கி ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

விசாரணை ஒத்திவைப்பு
ஹிஜாப் அணிவது இஸ்லாம் மதத்தின் அடிப்படையில் இன்றியமையாத நடைமுறையாகும் என்பதை குறிப்பிட்ட வழக்கறிஞர் காமத் ஆனால் காவி உடையுடன் தான் பள்ளிக்கு செல்ல வேண்டும் என எந்த மத நூல்களிலும் குறிப்பிடப்படவில்லை என்பதை குறிப்பிட்டார். புனித குர்ஆன் பரிந்துரைத்த படி தலையில் ஹிஜாப் அணிவது அத்தியாவசியமான மத நடைமுறையில் ஒரு பகுதியாகும் எனவும் குர்ஆன் கட்டளைகளுக்கு எதிராக மாணவிகளை அரசு வழி நடத்த முடியாது என்றார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி வழக்கின் விசாரணையை இன்றைக்கு ( புதன்கிழமை) ஒத்திவைத்தார்.

உரிமை இல்லை
இந்நிலையில் இன்று நீதிபதி கிருஷ்ணா தீட்சித் முன்பு வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. தற்போது விவகாரம் பற்றி எரிந்து வரும் நிலையில் ஒரே சீருடை திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் எனவும் தேர்வுகள் நடைபெற உள்ளதால் மாணவர்கள் நலன் கருதி இந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என மாணவிகள் சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி உணர்ச்சிகளின் அடிப்படையில் தீர்ப்புகளை எழுத முடியாது, எனவும் அரசியல் சாசனத்தின்படி தான் முடிவெடுக்க தனக்கு அதிகாரம் உள்ளது எனக் கூறினார்.

இடைக்கால தடை இல்லை
இந்த நிலையில் கர்நாடக அரசின் ஒரே சீருடை திட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித் தீர்ப்பளித்துள்ளார். பள்ளிகளை மத அடையாளங்களை கொண்டு செல்வது எந்த அளவுக்கு நன்மை பயக்கும் என்பது தெரியவில்லை எனவும், அரசியல் சாசன சட்டப்படி கர்நாடக அரசின் ஒரே சீருடை திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது எனக் கூறிய நீதிபதி தீக்ஷித், ஹிஜாப் அணிவது தொடர்பான பிரச்சினையை கர்நாடக உயர் நீதிமன்றத்தின் விரிவான அமர்வு விசாரிக்கும் எனவும் உத்தரவிட்டார்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications