கவுரி லங்கேஷ் கொலையாளிகளைத் தொடர்ந்து எழுத்தாளர் கல்புர்கி கொலை வழக்கிலும் 2 பேருக்கு ஜாமீன்!
பெங்களூர்: கர்நாடகாவின் மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 6 ஆண்டுகளாக சிறையில் இருந்த கொலையாளிகள் 3 பேருக்கு அண்மையில் கர்நாடகா உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதேபோல நாட்டையே அதிரவைத்த எழுத்தாளர் கல்புர்கி படுகொலை வழக்கில் கொலையாளிகள் 2 பேருக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கி இருக்கிறது.
பிரதமர் மோடி மற்றும் பாஜகவின் இந்துத்துவா கொள்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்தவர் கவுரி லங்கேஷ். 2017-ம் ஆண்டு மூத்த பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ், பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. கவுரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்தன.

இந்தப் படுகொலை சம்பவத்தில் மோகன் நாயக் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டு 6 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான மோகன் நாயக்குக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கர்நாடகா உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதே அடிப்படையில் இந்த படுகொலையில் தொடர்புடைய மேலும் 3 பேருக்கு அண்மையில் கர்நாடகா உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
இந்த பின்னணியில் தற்போது நாட்டை உலுக்கிய எழுத்தாளர் கல்புர்கி படுகொலை வழக்கில் குற்றவாளிகள் 2 பேருக்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. 2015-ம் ஆண்டு கல்புர்கி படுகொலை செய்யப்பட்டார். கல்புர்கி, கவுரி லங்கேஷ் உள்ளிட்டோர் கொலைகளில் ஒரே மாதிரியான துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டன; இந்துத்துவா தீவிரவாதிகளே இந்த கொலைகளைச் செய்ததாக கூறப்படுகிறது.
ஆனால் கல்புர்கி படுகொலை வழக்கின் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கிய கர்நாடகா உயர்நீதிமன்றமோ, கொலையாளிகள் 2 பேருமே கல்புர்கியை கொலை செய்யும் நோக்கத்துடன் அவரது வீட்டுக்குச் செல்லவில்லை என்பதால் ஜாமீன் வழங்குவதாக தெரிவித்துள்ளது. மேலும் கல்புர்கி வீட்டில் கொள்ளையடிக்கவே இருவரும் சென்றதாகவும் அப்போதுதான் அவரை சுட்டுக் கொன்றதாகவும் கொலையாளிகளுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதி உமா தெரிவித்துள்ளார்.
-
வேம்புலி செய்த வேலை.. தவெக நிர்வாகிகளுக்கு எப்போது ஒழுக்கத்தை சொல்லித் தருவார் முதல்வர் விஜய்? -
சட்டம் ஒழுங்கில் பெரிய ஓட்டை.. நாமக்கல்லில் தலைதூக்கிய துப்பாக்கி கலாச்சாரம்! 20 சவரன் நகை அபேஸ்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
அரசு பேருந்து ஓட்டுநரை பட்டா கத்தியால் வெட்டிவிட்டு எஸ்கேப் ஆன தவெக நிர்வாகி கைது -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications