ரோகினி ஐஏஎஸ்ஸின் அந்தரங்க போட்டோக்களை வெளியிட்ட ஐபிஎஸ்.. சர்ச்சையில் சிக்கிய சசிகலா புகழ் " டி ரூபா"
ரூபாவிற்கு மன நல பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாக ரோகினி பதிலடி கொடுத்துள்ளார்.
பெங்களூர்: கர்நாடகாவில் இரண்டு பெண் குடிமை பணியாளர்களுக்கு இடையில் சமூக வலைத்தளங்களில் ஏற்பட்டுள்ள மோதல் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரண்டு பேரும் மாறி மாறி போஸ்டுகளை போட்டுக்கொள்வது கடும் விமர்சனங்களை சந்தித்துள்ளது.
கர்நாடகாவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி டி ரூபாவை பலருக்கும் நினைவு இருக்கும். பரப்பன அக்ரகார சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளதாக புகார் வைத்தது டி ரூபாதான்.
தற்போது ரூபா கர்நாடக மாநில கைவினைப் பொருட்கள் மேம்பாட்டுக் கழகத்தின் நிர்வாக இயக்குராக பதவி வகித்து வருகிறார். இந்த ரூபா தற்போது ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி மீது பல்வேறு பரபரப்பு புகார்களை வைத்து இருக்கிறார்.

என்ன புகார்
ஐஏஎஸ் அதிகாரி ரோகினி சிந்தூரி கர்நாடக அறநிலையத்துறை இயக்குனராக இருக்கிறார். இந்த நிலையில் ரோகினி ஊழல் செய்வதாகவும், பல்வேறு முறைகேடுகளில் ஈடுபடுவதாகவும் ரூபா புகார் வைத்துள்ளார். இதெல்லாம் போக சக ஆண் ஐஏஎஸ் அதிகாரிகளிடம் ரோகினி வரம்பு மீறி பேசுவதாகவும் ரூபா புகார் வைத்துள்ளார். இதில் ரோகினி சில அந்தரங்க புகைப்படங்களை சக ஆண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ளதாக ரூபா தெரிவித்து உள்ளார்.

சில வருடம்
கடந்த சில வருடங்களுக்கு முன்பே ரோகினி பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ரூபா புகார் கொடுத்தது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் இவர்களுக்கு இடையில் மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த முறை ரோகினியின் சில வாட்ஸ் ஆப் புகைப்படங்களை, அந்தரங்க புகைப்படங்களை ரூபா பகிர்ந்து உள்ளார். அதை பகிர்ந்து, ரோகினி இந்த புகைப்படங்களை ஆண் ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு அனுப்பி வருகிறார். அவர்களை மயக்கும் விதமாக இப்படி அனுப்புகிறார். இது ஆட்சி பணிகள் சட்ட விதிகளுக்கு எதிரானது. அவர் இந்த விதிகளை மீறிவிட்டார் என்று ரூபா குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

வீடியோ
அதோடு வீடியோ ஒன்றையும் பகிர்ந்து ஜேடிஎஸ் எம்எல்ஏ மகேஷ் உடன் உணவகம் ஒன்றில் ரோகினி இருக்கும் காட்சிகளை ரூபா பகிர்ந்து உள்ளார். இதுவும் விதி மீறல் என்று ரூபா கூறி உள்ளார். அதாவது ரூபா தனது அந்தரங்க புகைப்படங்களை சக ஐஏஎஸ் ஆண் அதிகாரிகளுக்கு ஷேர் செய்வது தவறு, எம்எல்ஏவுடன் இருப்பது தவறு என்று ரூபா கூறி உள்ளார். ரோகினி சக ஐஏஎஸ் ஆண் அதிகாரிகளுக்கு பகிர்ந்த புகைப்படங்களை ரூபா தனது போஸ்டில் பகிரங்கமாக வெளியிட்டு உள்ளார். இந்த நிலையில்தான் இவர்கள் இருவருக்கும் மோதல் ஏற்பட்டு உள்ளது.

ரோகினி
இந்த புகைப்படங்கள் பொய்யானது. இதில் உண்மை இல்லை. இவை எல்லாமே மார்ப் செய்யப்பட்ட போட்டோக்கள். ரூபா வேண்டுமென்று என் மீது உள்ள பகையால் இப்படி செய்கிறார். ரூபாவிற்கு மன நல பாதிப்பு ஏற்பட்டுவிட்டதாக ரோகினி பதிலடி கொடுத்துள்ளார். ரோகினி தனது சக ஐஏஎஸ் ஆண் அதிகாரிகளுக்கு புகைப்படங்களை பகிர்ந்தது தவறுதான். அதை ரூபா இணையத்தில் வெளியிட்டதும் தவறுதான் என்று அந்த போஸ்டுகளுக்கு கீழ் இணையத்தில் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். இரண்டு பேருமே ஆட்சி பணி விதிகளை மீறிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த அந்தரங்க போட்டோ விவகாரம் கர்நாடகாவை உலுக்கி உள்ள நிலையில் இதில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் பொம்மை தெரிவித்துள்ளார் .
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு!












Click it and Unblock the Notifications