முழு கொள்ளளவை எட்டியது கேஆர்எஸ் அணை- காவிரியில் 77,000 கன அடி நீரை திறந்துவிட்ட கர்நாடகா!
பெங்களூர்: காவிரியின் குறுக்கே கர்நாடகா கட்டிய கிருஷ்ணராஜ சாகர் அணை (கேஆர்எஸ்) முழு கொள்ளளவை எட்டியிருக்கிறது. இதனையடுத்து கேஆர்எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 70,850 கன அடி நீரை காவிரியில் கர்நாடகா அரசு திறந்துவிட்டுள்ளது. அதே நேரத்தில் கபினி, நுகு அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறப்பை கர்நாடகா அரசு குறைத்துள்ளது. காவிரியில் கர்நாடகா நீர் திறந்துவிட்டிருப்பதால் தமிழ்நாட்டின் ஒகேனக்கல்லில் வெள்ளம் சீறிப் பாய்ந்து கொண்டிருக்கிறது.
கேரளா, கர்நாடகாவில் இடைவிடாமல் பெய்த தென்மேற்கு பருவமழையால் காவிரியின் துணை நதியான கபிலா, காவிரி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. கபிலா ஆற்றின் குறுக்கே கர்நாடகா கட்டியுள்ள கபினி அணைதான் முதலில் நிரம்பியது. கபினி மற்றும் அதன் கீழ் அணையான நுகு அணைகளில் இருந்து வினாடிக்கு 70,000-க்கும் அதிகமான கன அடிநீரை காவிரியில் திறந்துவிட்டது கர்நாடகா.

மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்திலும் கனமழை கொட்டியது. இதனால் மண்டியா அருகே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையும் வேகமாக நிரம்பியது. இந்த அணை நேற்று முழு கொள்ளளவை எட்டியது. கிருஷ்ணராஜ சாகர் அணையின் முழு கொள்ளளவு 124.80 அடியாகும்.
கிருஷ்ணராஜ சாகர் அணையும் முழுமையாக நிரம்பியதால் இந்த அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு 77,000 கன அடிநீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. மேலும் கபினி, நுகு அணைகளுக்கான நீர் வரத்து குறையத் தொடங்கிவிட்டதால் நீர் திறப்பும் குறைந்துள்ளது.
காவிரியில் கர்நாடகா அதிக அளவு நீரை ஒரேநேரத்தில் திறந்துவிட்டிருப்பதால் தமிழ்நாட்டின் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்திருக்கிறது. ஒகேனக்கல்லில் பாறைகளை மூழ்கடிக்கும் நிலைமையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் காவிரி கரையோர கிராமங்கள் அனைத்துக்கும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக












Click it and Unblock the Notifications