தலையில் கை வைத்து உட்கார்ந்த கோலி.. கலங்கிப்போன அந்த ஒரு நொடி.. ஆர்சிபி மேட்சில் என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: நேற்று கொல்கத்தா அணிக்கு எதிராக நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் பெங்களூர் அணி தோல்வி அடைந்து ஐபிஎல் ப்ளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறி உள்ளது.

Recommended Video

    அடுத்தடுத்து தவறான முடிவுகள்.. Umpire கிட்ட வாக்குவாதம் செய்த Virat Kohli | Oneindia Tamil

    இந்த வருடமாவது பெங்களூர் அணி கோப்பை வென்று விடுமா என்ற பலரும் எதிர்பார்த்த நிலையில், மிக முக்கியமான ஆட்டத்தில் மோசமான பேட்டிங் காரணமாக சொதப்பி பெங்களூர் அணி வெளியேறியது. நேற்று பெங்களூர் அணிக்கு டாஸ் தொடங்கி பிட்ச் வரை எல்லாமே சாதகமாக இருந்தது.

    ஆனால் பேட்டிங் சொதப்பிய காரணத்தால் பெங்களூர் அணி படுதோல்வி அடைந்துள்ளது. நேற்று டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பெங்களூர் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதில் கோலி, படிக்கல் இரண்டு பேருமே நல்ல தொடக்கத்தைதான் கொடுத்தனர்.

    நேற்று

    நேற்று

    ஆனால் பவர் ப்ளே ஆட்டம் முடிந்ததும் மொத்தமாக ஆட்டம் அப்படியே மாறியது. பெங்களூர் அணி தேவையின்றி விக்கெட்டுகளை இழக்க தொடங்கியது. வரிசையாக விக்கெட்டுகள் விழ விழ பெங்களூர் அணி தடுமாற தொடங்கியது. முக்கியமாக கொல்கத்தா அணியின் சுனில் நரேன் தான் வீசிய ஒவ்வொரு ஓவரில் 4 விக்கெட்டுகளை எடுத்து ஆட்டத்தை மாற்றினார்.

     தவறிவிட்டார்

    தவறிவிட்டார்

    நேற்று நடந்த ஆட்டத்தில் பெங்களூர் அணி பேட்ஸ்மேன்கள் செய்த ஒரே தவறு ஸ்பின் பவுலிங்கில் சொதப்பியதுதான். நரேன், வருண் ஆகியோர் ஓவரில் இறங்கி வந்து அடிக்காமல், அக்ராஸ் ஆடியது அந்த அணிக்கு எதிராக திரும்பியது. அக்ராஸ் ஆடிய காரணத்தால் பெங்களூர் வீரர்கள் வரிசையாக கேட்ச் கொடுத்தனர் அல்லது போல்ட் ஆனார்கள்.

    அவுட்

    அவுட்

    நேற்று படிக்கல் 21, கோலி 39, பரத் 9, மேக்ஸ்வெல் 15, டி வில்லியர்ஸ் 11, ஷபாஸ் அகமது 13 என்று இறங்கிய எல்லா வீரர்களும் ஏமாற்றம் அளித்தனர். களத்தில் மேக்ஸ்வெல் இருந்த வரை கோலி கொஞ்சம் நம்பிக்கையாகவே இருந்தார். ஏனென்றால் மேக்ஸ்வெல் கொஞ்சம் ஸ்பின் பவுலிங்கில் நன்றாக ஆட கூடியவர். இவர் கொஞ்சம் அதிரடியாக ஆடினால் ஆட்டம் மாறும் என்று கோலி நினைத்தார்.

    மோசம்

    மோசம்

    ஆனால் 16.4 பந்தில் பெங்களூர் 112 ரன்கள் இருந்த போதுதான் பெங்களூர் அணியின் மேக்ஸ்வெல் அவுட் ஆனார். டெத் ஓவர்களில் ஏதாவது செய்து ஸ்கோரை 150க்கு மேல் கொண்டு செல்வார் என்று மேக்ஸ்வெல் மீது கோலி நம்பிக்கை வைத்தார். ஆனால் மேக்ஸ்வெல் அவுட்டான காரணத்தால் கோலி அதிர்ச்சியில் உறைந்தார். பெவிலியனின் அமர்ந்து இருந்த கோலி அப்படியே தலையில் கை வைத்து உட்கார்ந்தார்.

    தலையில் கை வைத்து அமர்ந்தார்

    தலையில் கை வைத்து அமர்ந்தார்

    முகத்தில் வெளிப்படையாக சோகத்தை காட்டிய கோலி ஆட்டம் கைவிட்டு போனதை அந்த நொடிதான் உணர்ந்தார். அதன்பின் இறங்கிய டேன் கிறிஸ்டியன், ஷாபாஸ் அகமது போன்ற வீரர்களும் டெஸ்ட் பேட்டிங் செய்து கொண்டு இருந்தனர். கடைசி வரை சிங்கிள் அடித்து இவர்கள் டெஸ்ட் பேட்டிங் ஆடிய விதம் கோலியை கடுப்பாக்கியது.

    எத்தனை

    எத்தனை

    இதனால் மொத்தமாக 20 ஓவர் முடிவில் பெங்களூர் 138-7 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின் இறங்கிய கொல்கத்தா தொடக்கத்தில் இருந்தே அதிரடி காட்டியது. கில் 29, வெங்கடேஷ் ஐயர் 26, ஹர்டிக் சிக்ஸ் அடித்து பேட்டிங்கை தொடங்கிய சுனில் நரேன் 26 என்று இறங்கிய வீரர்கள் எல்லாம் அதிரடி காட்டினார்கள். இதனால் 19.4 ஓவரில் எளிதாக கொல்கத்தா 139 ரன்கள் எடுத்து வென்றது.

    கேப்டன்

    கேப்டன்

    கேப்டனாக கோலி ஆர்சிபி அணிக்கு ஆடியது இதுவே கடைசி போட்டி. அடுத்த வருடத்தில் இருந்து கோலி ஆர்சிபி அணியில் சாதாரண வீரராகவே ஆடுவார். இந்த சீசனில் எப்படியாவது அவர் கோப்பை வெல்ல மாட்டாரா என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது. ஆனால் நேற்று போட்டியில் அந்த எதிர்பார்ப்பு, ஆசை எல்லாம் சுக்குநூறாக நொறுங்கியது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+