“தி கோஸ்ட்”.. கர்நாடகா காங்கிரஸ் வெற்றிக்கு பின் தமிழ் “மாஸ்டர் மைண்ட்” - வெற்றிக்கு உதவிய “பிளான்”
பெங்களூர்: கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் பிரம்மாண்ட வெற்றிபெற்றதன் பின்னணியில் தமிழ்நாட்டை சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலின் பெரும் பங்கு இருக்கிறது. இந்த சூழலில் காங்கிரஸை வெற்றிபெற செய்ய அவர் வகுத்த திட்டங்கள் என்ன? விரிவாக பார்ப்போம்.
கர்நாடகாவில் ஆளும் பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசின் பதவிக்காலம் மே 24 ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் கடன்ர்ஹ மே 10 ஆம் தேதி கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவை நடத்தியது. நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு இருக்கின்றன.

இதில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைப்பதற்கு மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, டிகே சிவக்குமார், சித்தராமையா போன்ற பலரை காரணமாக சொல்லலாம். ஆனால், அதற்கு முதல் முக்கிய காரணமாக இருப்பவர் ஒரு தமிழர். அவர்தான் சசிகாந்த் செந்தில். பாஜகவுக்கு அண்ணாமலை நியமிக்கப்பட்டதைபோல காங்கிரஸில் சத்தமே இல்லாமல் சாதித்து உள்ளார் சசிகாந்த் செந்தில்.
தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் அண்ணாமலைக்கு பாஜக பொறுப்பு வழங்கியது . ஆனால், காங்கிரஸ் கடந்த 2022 ஆண்டு ஜூலை மாதமே கர்நாடகா தேர்தலுக்காக வார் ரூம் ஒன்றையும் தொடங்கி, அதன் தலைவராக கர்நாடக மாநிலத்தில் பணிபுரிந்து விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்திலை நிறுத்தியது.
யுபிஎஸ்இ தேர்வில் தேசிய அளவில் 9 வது இடம் பிடித்த சசிகாந்த் செந்தில், கர்நாடகாவின் மங்களூருவில் துணை ஆணையராக பணிபுரிந்தவர். தக்ஷின கன்னடா, பெல்லாரி, சிவமோகா, சித்திரதுர்கா, ராய்ச்சூர் போன்ற பகுதிகளில் இவர் பல்வேறு பொறுப்புகளில் இருந்து உள்ளார். கர்நாடகா மாநிலத்தின் பிரச்சனைகளை, மக்களின் தேவைகளை நன்கு அறிந்தவர்.
மத்தியில் பாஜக அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு கொண்டு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி, என்.பி.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐஏஎஸ் பதவியை துறந்த சசிகாந்த் செந்தில், மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டார். அதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியில் இணைந்த அவர், தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று வந்தார்.
இந்த நிலையில் அவர் அடித்து ஆடக்கூடிய களத்தை காங்கிரஸ் அமைத்துக்கொடுத்தது. கர்நாடக தேர்தலை முன்னிட்டு அம்மாநில காங்கிரஸ் கமிட்டியின் வார் ரூம் தலைவராக சசிகாந்த் செந்திலை நியமித்தது கட்சித் தலைமை. அன்று முதல் மத்திய மாநில பாஜக அரசுகளின் குறைகளை சமூக வலைதளங்களிலும், மீடியாக்களிலும், களத்திலும் மக்களுக்கு அம்பலப்படுத்துவது, காங்கிரஸின் திட்டங்கள் மற்றும் செயல்பாடுகளை மக்களுக்கு எடுத்து சொல்வது என பல்வேறு வியூகங்களை வகுத்து வெற்றிபெற்று உள்ளார் சசிகாந்த் செந்தில்.
அதற்கான விடையே தற்போது வெளியாகி இருக்கும் கர்நாடக தேர்தல் முடிவுகள். கர்நாடகாவில் பாஜக மற்றும் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை மீது மக்கள் அதிருப்தி அடைவதற்கு காரணமாக கூறப்பட்டது 40% கமிஷன் விவகாரம்தான். கர்நாடகாவில் மிகப்பெரிய அளவில் டிரெண்டான #CryPMPayCM, #PayCM போன்ற ஹேஷ்டேக்குகளை உருவாக்கியது இவரது அணிதான்.
கடைகளில் பேடிஎம் கியூ ஆர் கோடு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருப்பதைபோல் கர்நாடகாவின் பல பகுதிகளில் பே சிஎம் என்ற ஸ்டிக்கரை காங்கிரஸ் ஒட்டியது. இதன் மூலம் மக்கள் மனதில் கமிஷன் விவகாரத்தை ஆழமாக பதிய வைத்தது சசிகாந்த் செந்தில் அண்ட் கோ.
இதுபற்றி கருத்து தெரிவித்த் "கனெக்ட் செண்டர் எனப்படும் காங்கிரஸ் வார் ரூம், கட்சியின் துல்லியமான தேர்தல் மேலாண்மைக்கான தொடக்கமாக இருக்கும்." என்று குறிப்பிட்டு இருந்தார்.
-
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம்












Click it and Unblock the Notifications