3 வயது சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை.. தாயின் ஆண் நண்பரே வெறிச்செயல்.. அதிர்ந்த பெங்களூர்
இளம்பெண் வேலைக்கு செல்லும் நேரங்களில் குழந்தையை இந்த இளைஞர் பார்த்துக்கொள்வதாக கூறியுள்ளார்.
பெங்களுர்: கர்நாடக மாநிலம் பெங்களூரில் மூன்றரை வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தையடுத்து சிறுமியின் தாயின் ஆண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேற்கு பெங்களுரின் காமாட்சிபாளையத்தில் இளம்பெண் ஒருவர் கணவனை இழந்த நிலையில் தனது மூன்றரை வயது மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் நட்பு ஏற்பட்டிருக்கிறது. இளைஞர் குழந்தையை கொஞ்சுவதற்காக அடிக்கடி வீட்டிற்கு வந்த நிலையில் இந்த நட்பு ஏற்பட்டிருக்கிறது. இதனையடுத்து இருவரும் காதலித்து வந்துள்ளனர். சிறுமியின் தாய் அருகில் உள்ள கார்மென்ட்ஸில் வேலை செய்து வந்துள்ளார்.

இவர் வேலைக்கு சென்றிருக்கையில், இவரது குழந்தையை இளைஞர் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று சிறுமியின் தாய்க்கு இளைஞரிடமிருந்து அழைப்பு ஒன்று வந்திருக்கிறது. அதில் குழந்தைக்கு உடல்நிலை சரியில்லை என்றும் எனவே குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருப்பதால் உடனே வரும்படி கூறியுள்ளார். தாயும் பதறியடித்துக்கொண்டு வேலையிலிருந்து பாதியிலேயே மருத்துவமனைக்கு சென்று பார்த்திருக்கிறார்.
ஆனால் அங்கு குழந்தை இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனைக்கேட்டு அதிர்ந்த தாய் என்ன நடந்தது என்று விசாரித்துள்ளார். சிறுமி தன்மீது மலம் கழித்துவிட்டதாகவும் எனவே ஆத்திரத்தில் தாக்கியதில் சிறுமி மயங்கி விழுந்துவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும் மருத்துவமனைக்கு வந்து பார்த்தபோதுதான் சிறுமி இறந்துவிட்டது எனக்கு தெரியும் எனக்கூறியுள்ளார். ஆனால் சிறுமியின்தாய் சந்தேகத்தின் அடிப்படையில் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். அதேபோல மருத்துவமனை தரப்பிலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
புகாரின் பேரில் விசாரணையை தொடங்கிய காவல்துறையினர் மருத்துவர்களின் ஆய்வறிக்கையை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதாவது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலைசெய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து இளைஞரை கைது செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர். முதலில் இளைஞர் தான் குழந்தையை தாக்கியதாகவும் எனவேதான் குழந்தை மரணமடைந்தது என்றும் கூறினார். ஆனால் மருத்துவ அறிக்கையை காட்டி விசாரணைபோது இளைஞர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
அதாவது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த பின்னர் குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்ததாகவும் எனவே ஆத்திரத்தில் தாக்கியதில் குழந்தை உயிரிழந்துவிட்டது என்றும் ஒப்புக்கொண்டுள்ளார். இதனையடுத்து இளைஞர் மீது போக்சோ, கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். சமீப காலங்களாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மீது அதிகரித்து வரும் பாலியல் தாக்குதல்களை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மகளிர் அமைப்புகள் வலியுறுத்தி வருகினறன.
-
தன்னை கேலி செய்தாலும்.. கர்நாடகா முதல்வரானதும் டிகே சிவக்குமாருக்கு வாழ்த்து கூறிய விஜய் -
டிகே.சிவகுமார் என்ட்ரி.. விஜய் கொடுத்த பலம்.. அசைக்க முடியாத CBN.. வரலாற்று சம்பவம் மக்களே! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications