பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நிலைமை கைமீறிவிட்டது.. கர்நாடகாவில் 56000 ஆக்ஸிஜன் பெட்கள், 10 ஆயிரம் ஐசியுக்கள் தேவை

Google Oneindia Tamil News

பெங்களூரு: கர்நாடகாவில் கிட்டத்தட்ட 56 ஆயிரம் நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வசதி உள்ள படுக்கைகள் தேவைப்படலாம் என்றும் 10 ஆயிரம் ICU பெட்கள் தேவைப்படலாம் என்று கூறப்படுகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தை தொட்டு வருகிறது. முதல் அலையைவிட இரண்டாவது அலை அசுரவேகத்தில் பரவி வருகிறது. ஆக்ஸிஜன் வசதியும், ஐசியு பெட்வசதிகளும் கிடைக்காமல் மக்கள் அல்லாடும் நிலை பல மாநிலங்களில் காணப்படுகிறது.

தமிழகத்தின் அண்டை மாநிலமான கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு மிக மோசமாகி வருகிறது. அங்கு நேற்று ஒரே நாளில் 35024 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் ஒரே நாளில் 270 பேர் பலியாகி உள்ளனர். தற்போதைய நிலையில் 349496 பேர் சிகிச்சையிலும் ஹோம் குவாரண்டைனிலும் இருந்து சிகிச்சை பெறுகிறார்கள்.

இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு

ஆக்ஸிஜன் பெட்கள்

ஆக்ஸிஜன் பெட்கள்

கர்நாடகாவில் 3.4 லட்சம் பேர் கொரோனா பாதிப்புடன் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கர்நாடகா மாநில அரசின் மதிப்பீட்டின் படி, கிட்டத்தட்ட 56,000 நோயாளிகளுக்கு ஆக்ஸிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தேவைப்படலாம் என்றும் 10,000 பேருக்கு ஐ.சி.யுக்கள் தேவைப்படலாம் என்றும் குறிப்பிடுகின்றன.

மூன்று மடங்கு பாதிப்பு

மூன்று மடங்கு பாதிப்பு

அவர்கள் அனைவருக்கும் ஒரே நேரத்தில் இந்த படுக்கைகள் தேவையில்லை. இருப்பினும், முதல் அலையைவிட இரண்டாவது அலைகளில் கர்நாடகாவில் சுகாதார அமைப்பு கையாளும் சுமை கொரோனாவின் முதல் அலையை விட மூன்று மடங்கு அதிகம் என்கிறார்கள்.

நோய்களே இல்லை

நோய்களே இல்லை

இதனிடையே இன்னொரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. அதாவது கர்நாடகாவில் இறந்த கொரோனா நோயாளிகளில் 30 சதவீதம் பேருக்கு எந்தவிதமான கொமொர்பிடிட்டிகளும் இல்லை: அதாவது எந்தவிதமான இணைநோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல. முற்றிலும் கொரோனாவின் தீவிரத்தால் பலியானவர்கள் ஆவர். கோவிட் -19 இன் இரண்டாவது அலையின் இந்த தரவு

பெங்களூருவில் அதிகம்

பெங்களூருவில் அதிகம்

கோவிட் காரணமாக இறந்தவர்களில் சுமார் 30% பேருக்கு கொமொர்பிடிட்டிகள் இல்லை. இதை வேறு வார்த்தைகளில் கூற வேண்டும் என்றால், ஆரோக்கியமான வாழ்க்கை முறை கொண்டவர்கள் வைரஸுக்கு ஆளாகி உயிரிழந்துள்ளனர். கடந்த ஒரு வாரமாக கர்நாடகா மாநிலத்தின் இறப்பு தரவுகளை மதிப்பாய்வு செய்ததில், பெங்களூரு மற்றும் பிற மாவட்டங்களில் ஒவ்வொரு நாளும் 50 கோவிட் -19 நேர்மறை நபர்கள் எந்தவிதமான கொமொர்பிடிட்டிகளும் இல்லாமல் இறந்துள்ளனர் என்பதைக் காட்டுகிறது.

English summary
With 3.2 lakh active cases in Karnataka, estimates by the state government indicate that nearly 56,000 patients may require oxygenated beds and 10,000 would need ICUs, going by ‘past experience’. Not all of them would need these beds at the same time. However, the burden handled by the healthcare system in Karnataka in the second wave is three times that of the first wave of Covid-19.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X