பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

48.48%.. 2021யை விட 2022ல் அதிகரித்த திருமணங்கள்.. இல்லறத்துக்கு இஷ்டமான டாப் 3 சிட்டிகள் இதுதாங்க!

Google Oneindia Tamil News

பெங்களூர்: கடந்த 2021ம் ஆண்டை ஒப்பிடும்போது இந்தியாவில் 2022ல் நடந்த திருமணங்கள் அதிகரித்துள்ளன. 2022ம் ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான திருமணங்கள் நடந்த இந்திய நகரங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா தலைநகர் மும்பை 3வது இடத்திலும், கர்நாடகா தலைநகர் பெங்களூரு 2ம் இடத்தில் உள்ள நிலையில் முதலிடத்தில் இந்தியாவின் முக்கிய நகரம் ஒன்று இடம்பிடித்துள்ளது. மேலும், வார இறுதி நாட்களில் இந்தியாவில் திருமணம் செய்து கொள்ளும் டிரெண்ட் அதிகரித்து வரும் நிலையில் சராசரி திருமண செலவு என்பது முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது ரூ.21 லட்சத்தில் இருந்து ரூ.28 லட்சமாக அதிகரித்துள்ள தகவல் வெளியாகி உள்ளது.

2020ல் இந்தியாவில் கொரோனா பரவ தொடங்கியது. ஒட்டுமொத்த உலகத்தையும் முடக்கிய இந்த கொரோனா வைரஸ் இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. நாடு முழுவதும் ஊரடங்கு அமலான நிலையில் 2020, 2021ல் ஆடம்பர திருமணங்கள் என்பது குறைந்தன.

கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி 100 பேர் வரை மட்டுமே பங்கேற்கும் வகையில் சிம்பிளாக திருமணங்கள் நடந்தன. இந்நிலையில் தான் கடந்த 2022ல் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதையடுத்து மீண்டும் இந்தியா முழுவதும் ஆடம்பர திருமணங்கள் நடைபெற துவங்கியது.

தொந்தரவு செய்த ஆவிகள்.. பலியான காதல் ஜோடிகளின்.. சிலைகளுக்கு திருமணம்.. வாட்? இப்படி ஒரு சம்பவமா! தொந்தரவு செய்த ஆவிகள்.. பலியான காதல் ஜோடிகளின்.. சிலைகளுக்கு திருமணம்.. வாட்? இப்படி ஒரு சம்பவமா!

48.48 சதவீதம் அதிகரிப்பு

48.48 சதவீதம் அதிகரிப்பு

இந்நிலையில் தான் திருமணம் சார்ந்த டெக்னாலஜி பிளாட்பார்மாக உள்ள வெட்டிங் வயர்(Wedding Wire) 2022ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை வெளியிட்டுள்ளது. இதில் 2021ம் ஆண்டில் நடந்த திருமணங்களின் எண்ணிக்கையும், 2022ம் ஆண்டில் நடந்த திருமணங்களும் ஒப்பீடு செய்யப்பட்டு பல்வேறு அம்சங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கடந்த 2021ம் ஆண்டை ஒப்பிடும்போது 2022ல் 48.48 சதவீதம் வரை திருமணங்கள் சார்ந்த தேடல்கள் அதிகரித்துள்ளன.

செலவும் கிடுகிடுவென உயர்வு

செலவும் கிடுகிடுவென உயர்வு

மேலும் பலரும் திருமணங்களை மறக்கமுடியாத வகையில் மிகவும் ஆடம்பரமாக நடத்தினர். இதனால் திருமணத்துக்கான செலவு என்பதும் அதிகரித்துள்ளது. கடந்த 2021ல் திருமணங்களின் சராசரி செலவு ரூ.21 லட்சமாக இருந்த நிலையில் 2022ல் 33.33 சதவீதம் அதிகரித்து ரூ.28 லட்சமாக உயர்ந்து இருந்தது. மேலும் மேக்கப் ஆர்டிஸ்ட், திருமணங்கள் சார்ந்த நிகழ்ச்சிக்கான பணியாளர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரிக்க தொடங்கி உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிசம்பரில் அதிக திருமணம்

டிசம்பரில் அதிக திருமணம்

மேலும் கடந்த 2022ல் நடந்த திருமணங்களில் அதிகமானவை டிசம்பர் மாதத்தில் பதிவாகி உள்ளது. அதாவது 2022ல் பதிவான மொத்த திருமணங்களில் 21.5 சதவீதம் டிசம்பரில் நடந்துள்ளது. அடுத்த அதிகபட்சமாக 2022 பிப்ரவரியில் மட்டும் 15.49 சதவீத திருமணங்கள் நடந்துள்ளது. ஒருநாள் என்ற அடிப்படையில் பார்த்தால் டிசம்பர் 2ம் தேதியில் மட்டும் இந்தியாவில் அதிக திருமணங்கள் நடந்தன. அதேபோல் இந்தியாவில் வார இறுதிநாட்களில் அதிக திருமணங்கள் நடப்பது டிரெண்டாகி உள்ளது. அதன்படி ஞாயிற்றுக்கிழமை அதிகமானவர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர். மொத்த திருமணங்களில் 20 சதவீதம் வரை ஞாயிற்றுகிழமைகளிலும், 19.7 சதவீத திருமணங்கள் வெள்ளிக்கிழமையிலும் நடந்துள்ளன.

முதலிடத்தில் எந்த நகரம்?

முதலிடத்தில் எந்த நகரம்?

இந்தியாவில் அதிக திருமணங்கள் நடந்த நகரங்களில் பட்டியலில் தலைநகர் டெல்லி முதலிடம் பிடித்துள்ளது. 2ம் இடத்தில் பெங்களூருவும், 3ம் இடத்திலும் மும்பையும் உள்ளது. இது இவ்வாறு இருப்பினும் இந்தியாவில் குறைந்த அளவிலான திருமணங்கள் என்பது திரிபுரா, சிக்கிம் மற்றும் இம்பாலில் பதிவாகி உள்ளது. மேலும் வெளிமாநிலம், வெளிநாடுகளில் திட்டமிட்டு திருமணம் நடத்தும் டெஸ்டினேசன் திருமணங்கள்(Destination Wedding) இந்தியாவில் அதிகரித்துள்ளது. அதன்படி டெஸ்டினேசன் திருமணங்களை பொறுத்தமட்டில் இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் முதலிடத்திலும், கோவா 2ம் இடத்திலும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் மூன்றாம் இடத்திலும் உள்ளன. வெளிநாடுகளை பொறுத்தமட்டில் சிங்கப்பூர், அபுதாபி மற்றும் அமெரிக்காவின் நியூயார்க் ஆகியவை இடங்களில் இந்தியர்கள் திருமணம் செய்து கொண்டுள்ளனர் என அந்த ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

English summary
Compared to last year 2021, there has been an increase of 48.48 percent marriages in India in 2022. In the list of Indian cities with the highest number of weddings in 2022, one of India's major cities has been ranked first with Maharashtra capital Mumbai at 3rd place and Karnataka capital Bengaluru at 2nd place. Also, with the growing trend of getting married in India on weekends, it has been reported that the average wedding cost has increased from Rs.21 lakh to Rs.28 lakh compared to the previous year.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X