வைரலாகும் புனித் ராஜ்குமார் போட்ட கடைசி ட்வீட்.. கடைசி நிகழ்ச்சியை பகிர்ந்து ரசிகர்கள் உருக்கம்
பெங்களூரு: இன்று பிற்பகல் மாரடைப்பால் காலமான கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் புனித் ராஜ்குமார், இன்று காலை தனது அண்ணன் சிவ ராஜ்குமார் நடித்த பஜரங்கி 2 வெளியானதை ஒட்டி வாழ்த்தி போட்ட ட்வீட் ஒன்று வைரலாகிறது. இதுதான் அவர் போட்ட கடைசி ட்வீட் என்பதால் அதை ரீட்வீட் செய்யும் ரசிகர்கள், அந்த ட்வீட் மீது தங்கள் சோகத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
Recommended Video
கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் ஆன மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மூன்றாவது மகன் புனித் ராஜ்குமார். இவருக்கு வயது 46. இவர் இன்று காலை பெங்களூருவில் உள்ள தனியார் ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த போது, திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், கடுமையான மாரடைப்பு ஏற்பட்டதை உறுதி செய்தனர். இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து சிகிச்சைஅளித்தனர். ஆனால்சிகிச்சை பலன் இன்றி அவர் உயிரிழந்தார். இளம் வயதில் மாரடைப்பு ஏற்பட்டு புனித் ராஜ்குமார் உயிரிழந்தது அவரது ரசிகர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

3 பேரும் நடனம்
நேற்று முன்தினம் தான், புனித் ராஜ்குமாரின் அண்ணணும், பிரபல கன்னட நடிகருமான சிவ ராஜ்குமாரின் பஜ்ரங்கி 2 படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா நடந்தது. இந்த விழாயில் யாஷ், புனித் ராஜ்குமார், சிவ ராஜ்குமார் உள்பட 3 பேரும் பங்கேற்றனர். இதில் மூன்று பேருமே மகிழ்ச்சியுன் கட்டிப்பிடித்தபடி பேசி சிரித்து ஆடி பாடி மகிழச்சியுடன் இருந்தனர். இறுதியாக தனது அண்ணணுடன் சேர்ந்து புனித் ராஜ்குமார் நிகழ்ச்சியில் நடனமும் ஆடினார்.

புனித் ராஜ்குமார்
அந்த வீடியோவில் புனித் ராஜ்குமார் குறித்து நடிகர் யாஷ் கூறும் போது, என்னுடைய கல்லூரி நாட்களில், அப்புவின் (புனித் ராஜ்குமாரின்), நடனத்தை பார்த்து, சண்டை காட்சிகளை பார்த்து, இவரை மாதிரி நடனம் ஆட வேண்டும், இவரை மாதிரி சண்டை போட வேண்டும் என்று அப்படி இன்ஸ்பெயராகி சினிமா இன்ஸ்டஸ்ரிக்கு வந்தேன் என்று தெரிவித்தார்.

வேதனை
இந்நிலையில் இன்று காலை பஜ்ரங்கி 2 படம் வெளியானதை ஒட்டி, படக்குழுவை வாழ்த்தி புனித் ராஜ்குமார் ட்வீட் போட்டார். அந்த ட்வீட்டை ரீ ட்வீட் செய்யும் ரசிகர்கள், அந்த ட்வீட் மீது தங்களது இரங்கல்களையும் வேதனையையும் வெளிப்படுத்தி வருகிறார்கள். காலையில் ட்வீட் போட்டவர் மதியம் உயிருடன் இல்லை என்பதை ரசிகர்களால் ஜீரணிக்கமுடியவில்லை. அழுது உடைந்து பலரும் ட்வீட் பதிவிட்டு வருகிறார்கள்.

கண்களில் வாழ்வார்
கன்னட ரசிகர்களால் அப்பு என்று செல்லாமாக அழைக்கப்படும் புனித் ராஜ்குமார் மரணம், கர்நாடா முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள், நடிகர்கள், திரையுலகினர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள். புனித் ராஜ்குமார் கண் தானம் செய்துள்ளார். அவரது கண்கள் இன்னும் பல்லாண்டு பூமியில் வாழும் என ரசிகர்கள் நெகிழ்ச்சியோடு ட்வீட்களை பதிவிட்டு வருகிறார்கள்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications