EB பில் கிடையாது.. வாடகை 50% தந்தால் போதும்.. பெங்களூரை விட்டு வெளியேறினால் கிடைக்கும் சலுகைகள்.. அரசு அறிவிப்பு
பெங்களூர்: பெங்களூரில் கடும் இடநெரிசல் ஏற்பட்டுள்ளது. பல்வேறு புதிய நிறுவனங்கள் பெங்களூரில் தொடங்கப்படுவதால் இடநெருக்கடி, போக்குவரத்து நெரிசல் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் தான் பெங்களூரை விட்டு வெளியேறி பிற நகரங்களில்‛ஸ்டார்ட்அப்' நிறுவனங்களை தொடங்கினால் 5 ஆண்டுகள் வரை மின்கட்டணம் செலுத்த தேவையில்லை. ரூ.2 கோடி வரையிலான வாடகையில் 50 சதவீதம் தள்ளுபடி, தொலைபேசி கட்டணத்தில் 25 சதவீத தள்ளுபடி உள்பட ஊக்கத்தொகையுடன் கூடிய பல்வேறு சலுகைகள் வழங்க ரூ.960 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூர்.. நம் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாக உள்ளது. நம் நாட்டின் ‛சிலிக்கான் வேலி' என அழைக்கப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அங்கு ஏராளமான ஐடி நிறுவனங்கள் இருப்பது தான். நம் நாட்டின் மொத்த ஐடிதுறை சார்ந்த ஏற்றுமதியில் 42 சதவீத பங்களிப்பை கர்நாடகா தான் வழங்கி வருகிறது.ஆண்டுக்கு ரூ.3.2 லட்சம் கோடி வரை வருவாய் ஈட்டப்படுகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் 27 சதவீதம் வரை அதிகரித்து வருகிறது.

ஐடி நிறுவனங்கள் தவிர்த்து பயோ டெக்னாலஜி, பல்வேறு துறை சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் ‛ஸ்டார்ட்அப்' நிறுவனங்களின் தாயகமாக பெங்களூர் உள்ளது. பெங்களூரில் மட்டும் சுமார் 16,000க்கும் மேற்பட்ட ‛ஸ்டார்ட்அப்' நிறுவனங்கள் உள்ளன. நாட்டில் உள்ள மொத்த ‛ஸ்டார்ட்அப்' நிறுவனங்களில் இது 47 சதவீதமாகும்.
இதனால் பெங்களூர் நகரில் ஆண்டுதோறும் மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. பிற மாநிலங்களில் இருந்து வேலை தேடி பல ஆயிரம் பேர் மாதம் மாதம் பெங்களூருவுக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் அங்குள்ள மக்கள்தொகையை ஒரு கோடியை கடந்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்கிறது. இது ஒருபுறம் இருக்க வாகனங்களின் எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் பெங்களூரில் திரும்பும் திசையெங்கும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இது அங்குள்ள நிறுவனங்களுக்கு பெரும் சிக்கலாக மாறி உள்ளது.
அதுமட்டுமின்றி வீட்டு வாடகை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. மேலும் குடிநீர் பிரச்சனையும் அவ்வப்போதுஏற்பட்டு வருகிறது. இதனால் பல நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பிரச்சனையை போக்க வேண்டும் என்பதற்காக கர்நாடகா அரசு தொடர்ந்து பெங்களூர் நகரை விரிவுப்படுத்தி வருகிறது. பெங்களூர் புறநகர் பகுதிகளை அவ்வப்போது பெங்களூருவுடன் சேர்த்து கொண்டே வருகிறது.
இதனால் தற்போது பெங்களூர் புறநகர் பகுதிகளிலும் பல்வேறு நிறுவனங்கள் முளைத்துவிட்டன. அங்குள் பொதுமக்கள் அதிகளவில் குடியேறி வருகின்றன. இது கர்நாடகா அரசுக்கு பெரிய சிக்கலாக மாறி உள்ளது. இதனால் பெங்களூர் நகர் அருகே புதிய தொழில்நுட்ப நகரை உருவாக்கும் திட்டத்தையும் கர்நாடகா அரசு வைத்துள்ளது. பெங்களூர் இப்படி நாள்தோறும் வளர்ந்து கொண்டே சென்றாலும் கூட பிற மாவட்டங்களில் வளர்ச்சி என்பது இல்லை. இதனால் பிற மாவட்டங்களை வளர்ச்சிப்படுத்த வேண்டும் என்ற நிலையில் கர்நாடகா அரசு புதிய சலுகைகளை அறிவித்துள்ளது.
அதன்படி பெங்களூருவுக்கு வெளியே உள்ள நகரங்களில் புதிதாக ‛ஸ்டார்ட்அப்' நிறுவனங்களை தொடங்குபவர்களை மையப்படுத்தி இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக கர்நாடக அரசு, தனது தகவல் தொழில்நுட்பக் கொள்கை 2025 - 2030 (Karnataka IT Policy 2025-2030) யை வெளியிட்டுள்ளது. அதன்படி கர்நாடகாவில் பெங்களூரை விட்டு டயர் 2 என அழைக்கப்படும் நகரங்களில் புதிதாக ஸ்டார்ட்அப் தொடங்கினால் இந்த சலுகைகளை பெறலாம்.
இதற்காக ரூ.960 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஆதரவு அளிக்கவும், ஊக்கத்தொகை வழங்கவும் பயன்படுத்தப்பட உள்ளது. இதற்கான விதிமுறைகள் விரைவில் வகுக்கப்பட உள்ளது. விதிமுறைகள் வகுத்த பிறகு ஸ்டார்ப்அப் தொடங்குவதற்கான இதற்கான விண்ணப்பங்கள் டிசம்பர் மாதம் மத்தியில் வழங்கப்படும்.
ஒவ்வொரு ஊக்கத்தொகைக்கும் முதல் 100 பயனாளிகளுக்கு மட்டுமே பொருந்தும். இதனால் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது முக்கியமானதாக கருதப்படுகிறது. அதன்படி கர்நாடகாவில் உள்ள மைசூர், மங்களூரு, உப்பள்ளி - தார்வார், பெலகாவி, கலபுரகி, சிவமொக்கா, தாவணகெரே மற்றும் தும்கூர் உள்ளிட்ட நகரங்களில் ஸ்டார்ட்அப் தொடங்கினால் இந்த சலுகைகளை பெற முடியும்.
இந்த புதிய தொழில்நுட்ப கொள்கையின்படி கிடைக்கும் சலுகைகள் என்று பார்த்தால் நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) செலவுகளில் சுமார் ரூ.50 கோடி வரையில் 40 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும். அதேபோன்று ஏஐ(AI), பிளாக்செயின் (blockchain) மற்றும் குவாண்டம் கம்ப்யூட்டிங் போன்ற துறைகளில் பணிபுரிபவர்களுக்கு தொலைபேசி மற்றும் இணைய பில்களில் 25 சதவிகிதத்தையும் திரும்பப் பெறலாம்.
அதேபோல் ரூ.2 கோடி வரையிலான வாடகையில் சுமார் ரூ.50 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். சொத்து வரியில் 3 ஆண்டுகளுக்கு 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படும். 5 ஆண்டுகளுக்கு மின்சார கட்டணத்தில் 100 சதவீதம் தள்ளுபடி பெறலாம். இந்த அறிவிப்பு பலரையும் கவர்ந்துள்ளது.
-
அமைச்சர் பதவிக்கு குட்பை? பெங்களூர் வளர்ச்சி துறையின் பல்லை பிடுங்கிய டிகே சிவக்குமார்.. கிருஷ்ணபைரே கவுடா அதிருப்தி -
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
மேகதாது அணை.. கட்டியே ஆக வேண்டும்.. டெல்லிக்கு சென்ற டி.கே. சிவகுமார்.. தமிழ்நாடு என்ன செய்யப்போகிறது? -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்?












Click it and Unblock the Notifications