"மரங்களின் தாய்" 114 வயது சாலுமரத திம்மக்காவின் கடைசி ஆசை நிறைவேறுமா? மரத்தையே பிள்ளையாக ஏற்ற அன்னை

Subscribe to Oneindia Tamil

பெங்களூரு: கர்நாடக மாநிலமே சாலுமரத திம்மக்காவுக்கு தன்னுடைய அஞ்சலியை செலுத்தி வருகிறது.. இயற்கையை தன் மழலைகளாக சீராட்டி தாலாட்டிய அன்னையாக போற்றப்படும் சாலுமரத திம்மக்கா யார் தெரியுமா? மரங்களின் தாய் என்று கர்நாடக மக்களால் அழைக்கப்பட்ட சாலுமாத திம்மக்கா செய்த சாதனைகள் என்னென்ன தெரியும்? அவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.

துமகூரின் குப்பியில், 1911ம் ஆண்டு ஜூன் 30ம் தேதி திம்மக்கா (Saalumarada Thimmakka) பிறந்தார்.. சிறு வயதில் சரியான கல்வி கிடைக்காமல் கல் குவாரியில் தினக்கூலியாக வேலை செய்தார் திம்மக்கா..தங்கள் வழக்கப்படி இளம் வயதிலேயே சிக்கய்யா என்பவரை திம்மக்காவுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர். ஆனால் இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.

பிள்ளையாய் வளர்த்த மரங்கள்

இதனால் திம்மக்காவை அந்த ஊரே தூற்றியது.. ஏசியது.. ஆனாலும் தன்னுடைய மனைவியை சிக்கய்யா எக்காரணம் கொண்டும் விட்டுத்தரவில்லை.. பிறகு தன்னுடைய குறை தீர வேண்டும் என்று அரச மரத்தை, ஆல மரத்தை சுற்றி சுற்றி வந்தார்..

பிள்ளை வரம் வேண்டி, மரங்களை இப்படி சுற்றி வருவதற்கு பதிலாக, அந்த மரங்களையே பிள்ளையாக வளர்த்தால் என்ன? என்ற முடிவுக்கு வந்தார். இதற்கு பிறகு, தன்னுடைய கணவருடன் சேர்ந்து மாகடியின் கூடூரில் இருந்து ஹுலிகல் வரை 4.5 கிமீ தூரத்துக்கு 385 ஆலமர கன்றுகளை நட்டு பராமரிக்க ஆரம்பித்தனர்..

அந்தவகையில் திம்மக்கா 385 பனை மரங்களை நட்டு வளர்த்து வந்தார். அந்த கன்றுகள் அனைத்துமே நன்றாக மரங்களாக வளர்ந்தன.இதைப்பார்த்து மகிழ்ந்த திம்மக்கா, மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதையே முழு நேர வேலையாக மாற்றிக் கொண்டார்..

தலையில் நீர் சுமந்து வந்த திம்மக்காஎக்காரணம் கொண்டும் தன்னுடைய பிள்ளைகள் நீரின்றி வாடிவிடக்கூடாது என்பதற்காக தம்பதி இருவரும் சேர்ந்து, மழைக்கால நீர் சேமிப்பாக சிறு குளங்களை வெட்டினார்கள்.. சிலசமயம் தண்ணீர் வற்றி போனாலும், நீண்ட தூரம் சென்று குடத்தில் நீர் சுமந்து வந்து, மரங்களுக்கு ஊற்றினார்கள்..

ஒருகட்டத்தில் துணையாக இருந்து வந்த கணவரும் இறந்துவிட, தன்னுடைய வளர்ப்பு மகன் உமேஷின் துணையுடன் மரக்கன்றுகளை விடாமல் நட்டு வந்தார்.. இதனால் சுற்றுச்சூழல் ஆர்வலராகவே மாறிப்போனார் திம்மக்கா..

8000 மரங்கள்

அந்தவகையில் 8000 மரங்களை கர்நாடகாவில் இதுவரை திம்மக்கா நட்டு வைத்துள்ளார்.. இதனால் சாலுமரத திம்மக்கா பாட்டி என்றாலே அங்கு மிகவும் பிரபலம்... தனக்கு பிள்ளைகள் இல்லாத குறையை, இப்படி மரக்கன்றுகளை நட்டு அவைகளை தன்னுடைய பிள்ளைகளை போலவே வளர்த்து வந்தார்...எந்த பிரதிபலனையும் எதிர்பாராமல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கையின் மீதான அன்பு போன்றவைகளால் தன்னுடைய 50 வருட காலத்தையும் மரங்களுக்காகவே அர்ப்பணித்தார் திம்மக்கா. இதனால் இவரது பெயர் தேசிய அளவில் கவனம் பெற்றது.

விருதுகள் குவிந்தனதன்னுடைய இயற்கை சார்ந்த பணிகளுக்காக கடந்த 2019ல் திம்மக்காவுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. ஆசிர்வாதம் கர்நாடக மத்திய பல்கலையின் கவுரவ டாக்டர் பட்டம், ராஜ்யோத்சவா, தேசிய குடிமக்கள், மகிளா ரத்னா உட்பட பல விருதுகளை பெற்றார்..

2010ஆம் ஆண்டு ஹம்பி பல்கலைக்கழகத்தின் மூலம் நடோஜா விருது, 1995ம் ஆண்டு தேசிய குடிமகன் விருது, 1997ல் இந்திர பிரியதர்ஷினி விரிக்‌ஷமித்ரா விருதுஅமெரிக்காவின் கலிபோர்னியாவின் லாஸ் ஏஞ்சல்ஸ், ஓக்லாந்தின் சுற்றுச் சூழல் அமைப்பு, சுற்றுச் சூழல் கல்வி வளங்களுக்காக, திம்மக்காவின் பெயரை சூட்டி கௌரவித்தது.

முதலமைச்சர் மரியாதை

இந்நிலையில், சாலுமரத திம்மக்கா தன்னுடைய 114 வயதில் உடல்நலக்குறைவால் பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மரணம் அடைந்தார்.மருத்துவமனையில் இருந்த திம்மக்கா உடலுக்கு, முதல்வர் சித்தராமையா அஞ்சலி செலுத்தினார். பிறகு, முதல்வர் சொல்லும்போது, ''திம்மக்காவின் ஆன்மா சாந்தியடையவும், அவரது குடும்பத்தினர், ஆதரவாளர்களுக்கு வலியை தாங்கும் சக்தியை கொடுக்கவும் கடவுளிடம் பிரார்த்திக்கிறேன். அவரது இறுதிச்சடங்கு, முழு அரசு மரியாதையுடன் நடக்கும் என்று அறிவித்தார்.

கடைசி ஆசை

திம்மக்காவின் இழப்பு அம்மாநில மக்களையே நிலைகுலைய வைத்துவிட்டது,.. எப்படியாவது பேளூரில் நினைவு அருங்காட்சியகம் ஒன்று அமைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டாராம் திம்மக்கா.. அது நிறைவேறாமலேயே போய்விட்டது. எனினும் திம்மக்காவின் ஆசையை அரசு நிறைவேற்றும் என்று கர்நாடக மக்கள் நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

திம்மக்கா அன்று பிள்ளைகளாய் வளர்த்த ஆலமரக் கன்றுகள் யாவும் இன்று நீண்ட நெடிய மரங்களாய் வளர்ந்து, மக்களுக்கு நிழலை தந்து கொண்டிருக்கின்றன.. திம்மக்காவின் ஆன்மாவும் தன் பிள்ளைகளையே சுற்றி சுற்றி வலம் வந்து கொண்டிருக்கும் என்றே நம்பலாம்..!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+