டெல்லியில் வாங்கிய செல்போன்.. குமாரசாமி வீட்டிற்கு போனது எப்படி? சித்தராமையா விவகாரத்தில் திருப்பம்
பெங்களூர்: கர்நாடக மாஜி முதலமைச்சர் சித்தராமையாவை குறிவைத்து நடத்தப்பட்ட ஸ்டிங் ஆபரேஷன் விவகாரத்தில், டெல்லியில் வாங்கப்பட்ட ஒரு செல்போன் முக்கிய தடயமாக மாறியுள்ளது. மத்திய அமைச்சர் எச்.டி. குமாரசாமியின் சோஷியல் மீடியா டீமை சேர்ந்த ஒருவரின் உத்தரவின் பேரிலேயே அந்த செல்போன் வாங்கப்பட்டதாக கைது செய்யப்பட்ட நபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக பெங்களூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
கர்நாடகாவில் இப்போது காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் சூழலில், அங்கு அமைச்சர்களை குறிவைத்து ஸ்டிங் ஆபரேஷன் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அம்மாநில முதல்வர் டிகே சிவக்குமார் கடும் எச்சரிக்கை விடுத்திருந்தார். அதேபோல மாஜி முதல்வர் சித்தராமையாவை குறிவைத்தும் ஸ்டிங் ஆபரேஷன் நடந்ததாக கூறப்பட்டது.

வழக்குப்பதிவு
இது தொடர்பாக முன்னாள் முதல்வர் சித்தராமையா அளித்த புகாரின் பேரில் கடந்த அக்டோபர் 6ம் தேதி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக டெல்லியை சேர்ந்த ரிதேஷ் பாண்டே என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 6 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் டெல்லியில் கைது செய்யப்பட்ட ரித்தேஷ் பாண்டே என்பவர் கரோல் பாக் பகுதியில்.. உள்ள கடையில் இருந்து வினோத் சர்மா என்பவருடன் சேர்ந்து செல்போன் வாங்கியது விசாரணையில் தெரிவித்துள்ளார்.
செல்போன்
டெல்லியில் வாங்கப்பட்ட ஒரு இந்த செல்போன் முக்கிய தடயமாக மாறியுள்ளது. மத்திய அமைச்சர் எச்.டி. குமாரசாமியின் சோஷியல் மீடியா டீமில் உள்ள பிரஜ்வல் பிரசாத் என்பவரின் உத்தரவின் பேரிலேயே அந்த செல்போன் வாங்கப்பட்டதாக ரிதேஷ் பாண்டே வாக்குமூலம் அளித்துள்ளதாக பெங்களூர் போலீசார் தெரிவித்துள்ளனர். பின்னர், ரித்தேஷ் பாண்டேவும் வினோத் சர்மாவும் டெல்லி குஷாக் சாலையில் உள்ள குமாரசாமியின் இல்லத்துக்கு சென்று, அந்த செல்போனை பிரஜ்வல் பிரசாத்திடம் ஒப்படைத்ததாகவும் வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளனர்.
இது குறித்து பெங்களூரு காவல் ஆணையர் சீமந்த் குமார் சிங் கூறுகையில், "கைது செய்யப்பட்ட ரித்தேஷ் பாண்டே அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளது. அவர் சொன்ன அனைத்தும் உண்மை தானா என்பதை கண்டறிய விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது. பிரஜ்வல் பிரசாத் மற்றும் வினோத் சர்மா ஆகிய இருவரிடமும் விசாரணை நடத்த வேண்டும். இருவருக்கும் போலீசார் விசாரணைக்கு ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியுள்ளோம். ஆனால், அவர்கள் இதுவரை ஆஜராகவில்லை. தலைமறைவாக உள்ளனர்" என்றார்.
போலீஸ் விசாரணை
ரித்தேஷ் பாண்டே அளித்த தகவல்களை உண்மை தானா என்பதை கண்டறியும் முயற்சியில் கர்நாடக போலீசார் இறங்கியுள்ளனர். இதற்காக டெல்லியில் செல்போன் வாங்கிய கடை மற்றும் சம்பந்தப்பட்ட இடங்களின் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். பிரஜ்வல் பிரசாத் மற்றும் ரித்தேஷ் பாண்டே இடையே நடந்த பண பரிவர்த்தனைகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.
இந்த வீடியோ கடந்த 2023ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது முதல் வீடியோ போலி சமூக வலைத்தள பக்கங்களில் வெளியான அக்டோபர் 2026 வரை அந்த வீடிோய எங்கெல்லாம் போனது.. யார் கைகளுக்கு எல்லாம் மாறியது என்பதை கண்டறியவும் போலீசார் முயன்று வருகிறார்கள்.
தடை விதித்த நீதிமன்றம்
முன்னதாக சமூக வலைத்தளங்களில் தன்னை பற்றி பரவும் வீடியோக்கள் தொடர்பாக சித்தராமையா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தன்னை பர்றி திட்டமிட்டு தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அந்த குறிப்பிட்ட வீடியோவை பகிர அல்லது வெளியிட தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.


Click it and Unblock the Notifications
