கன்னடர்களே என்னை மன்னித்து விடுங்கள்.. பாடகர் சோனு நிகம்–மை பணியவைத்த கன்னட அமைப்பு!

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: பிரபல பாடகர் சோனு நிகம் கன்னடர்களையும், கன்னட மொழியையும் அவமதித்துவிட்டார். இதனால் அவரது பெங்களூர் இசை நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி வழங்க கூடாது. மீறினால் போராட்டம் நடத்தப்படும் என்று கர்நாடகா ரக்‌ஷண வேதிகே அமைப்பினர் மிரட்டினர். இந்த மிரட்டலை தொடர்ந்து பாடகர் சோனு நிகம், கர்நாடக ரக்‌ஷண வேதிகே அமைப்பின் தலைவர் நாராயணகவுடா மற்றும் கன்னட மக்களிடம் மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார்.

singer-sonu-nigam-apologises-to-kannada-people-after-2025-concert-controversy

ஹரியானாவை சேர்ந்தவர் சோனு நிகம். பிரபல பாடகரான இவர் இந்தி மற்றும் கன்னடத்தில் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார். இவருக்கு நாடு முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இவர் மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பாடல் பாடி வருகிறார்.

கடந்த 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சோனு நிகரம் பெங்களூரில் உள்ள 'ஈஸ்ட் பாயிண்ட்' இன்ஜினியரிங் கல்லூரியில் நடந்த இசை நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அங்கிருந்தவர்கள் கன்னட பாடல் பாடும்படி கோரிக்கை வைத்தனர்.

அப்போது சோனு நிகம் கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. அங்கு கன்னட பாடல்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் ஒப்பிட்டு கூறினார். இது சர்ச்சையை கிளப்பியது. சோனு நிகம் கன்னட மொழி மற்றும் கன்னட மக்களை அவமதித்து விட்டார். அவர் உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் என்று கன்னட அமைப்பினர் வலியுறுத்தினர். அவர் மன்னிப்பு கேட்கவில்லை.

சோனு நிகம்மிற்கு எதிராக கர்நாடகா ரக்‌ஷண வேதிகே (நாராயணகவுடா) அமைப்பினர் அவலஹள்ளி போலீசில் புகார் செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சோனு கவுடா வெளியிட்ட வீடியோ பதிவில், ''சிலர் கன்னட பாடல்கள் பாடும்படி என்னை மிரட்டினர். இதனால் அந்த குறிப்பிட்ட நபர்களை மட்டுமே மனதில் வைத்து கருத்து தெரிவித்தேன். மொத்த கர்நாடகா மக்கள் பற்றியும் நான் குறிப்பிடவில்லை'' என்றார். இருப்பினும் அதனை கர்நாடகா கர்நாடகா ரக்‌ஷண வேதிகே (நாராயணகவுடா) அமைப்பினர் ஏற்கவில்லை.

இந்நிலையில் தான் வரும் 24ம் தேதி பெங்களூர் பராதியா மாலில் சோனு நிகம் பங்கேற்கும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது. இதற்கு கர்நாடகா ரக்‌ஷண வேதிகே (நாராயணகவுடா) அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அமைப்பின் தலைவர் நாராயண கவுடா சார்பில் பெங்களூர் நகர போலீசுக்கு கடிதம் ஒன்று எழுதப்பட்டது. சோனு நிகம் கன்னட மொழி மற்றும் கன்னட மக்களை அவமதித்துவிட்டார். இதனால் அவரது நிகழ்ச்சிக்கு அனுமதி கொடுக்ககூடாது என்று கூறியிருந்தார்.

இது சோனு நிகம் நிகழ்ச்சிக்கு சிக்கலை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் பாடகர் சோனு நிகம் கர்நாடகா ரக்‌ஷண வேதிகே தலைவர் நாராயணகவுடாவிற்கு போன் செய்து பேசி மன்னிப்பு கோரினார். அதன்பிறகு கன்னட மக்களிடமும் அவர் மன்னிப்பு கோரி வீடியோ வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக சோனு நிகம் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறப்பட்டுள்ளதாவது:

''என் அன்பிற்குரிய கர்நாடகா குடும்பத்தினரே, கன்னட மக்களே.. அந்த மாலை வேளையில் அங்கு கூடியிருந்த அனைவருக்கும், எனக்கும், என் இறைவனுக்கும், என் பகவானுக்கும் நடந்த உண்மை என்னவென்று தெரியும். இருப்பினும் நான் நாராயண கவுடாவிடம் உரையாடினேன். அவர் ஒரு நல்ல மனிதர். எங்களுக்கு இடையேயான உரையாடல் அன்பானதாகவும், மரியாதைக்குரியதாகவும் இருந்தது. அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது.

நீங்கள் ஒருவர் மீது அன்பு வைத்திருக்கும்போதும், அவருடன் நல்ல உறவு வேண்டும் என்று நினைக்கும்போதும் அவர்களிடம் 1000 முறை மன்னிப்பு கேட்க தயங்கமாட்டீர்கள். அதனால் என்னுடைய குடும்பத்தினரே நான் சொன்ன விஷயம் ஏதேனும் உங்களின் மனதை காயப்படுத்தி இருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

நான் யாருக்கும், குறிப்பாக கர்நாடகா மக்களுக்கு எந்த பிரச்சனையையும் விளைவிக்காத நபர். கடந்த 30 ஆண்டுகளாக நீங்கள் எனக்கு அன்பையும், மரியாதையையும் தந்துள்ளீர்கள். எனவே தவறான புரிதலால் அந்த உறவில் கறை படிவதையோ அல்லது கசப்புணர்வு ஏற்படுவதையோ நான் விரும்பவில்லை. நான் உங்களை நேசிக்கிறேன். இறைவன் உங்கள் அனைவரையும் நேசிக்கட்டும்'' என்று கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+