ஸ்பாவில் ‛ஹைடெக்’ விபசாரம்.. போலீஸ் ரெய்டில் இளம்பெண்கள் மீட்பு.. அதிர்ந்த பெங்களூர்
பெங்களூர்: பெங்களூரில் ‛ஸ்பா'வில் ஹைடெக் விபசாரம் நடத்தப்பட்டுள்ளது. இதுபற்றி அறிந்த போலீசார் திடீர் ரெய்டு நடத்தி வடமாநில பெண்களை மீட்டனர்.
பெங்களூர்.. நம் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு முன்னணி ஐடி நிறுவனங்கள் உள்பட பல்வேறு துறை சார்ந்த நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதனால் தமிழகம் உள்பட வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் பெங்களூரில் தங்கி பணியாற்றி வருகின்றனர்.

மேலும் ஒவ்வொரு நாளும் பெங்களூருவுக்கு வேலை தேடி செல்லும் இளைஞர்கள், இளம்பெண்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் தான் வேலை வாங்கி தருவதாக கூறி இளம்பெண்களை விபசாரத்தில் தள்ளிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
அதாவது பெங்களூர் இந்திரா நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட டொம்லூர் 2வது ஸ்டேஜில் ‛ஸ்பா' ஒன்று இயங்கி வருகிறது. இந்த ‛ஸ்பா'வின் உரிமையாளர் பெயர் உப்பன் ராட்டி. மேனேஜர் பெயர் மணி. இந்த ‛ஸ்பா'வில் இளம்பெண்கள் பணியாற்றி வருகின்றனர். உடல் மசாஜ் உள்ளிட்ட புத்துணர்ச்சி சேவைகளை இந்த ‛ஸ்பா' வழங்கி வருகிறது. இந்நிலையில் தான் ஸ்பாவில் விபசாரம் நடப்பதாக இந்திரா நகர் போலீசாருக்கு புகார் சென்றது.
இந்த புகாரை தொடர்ந்து போலீசார் ஸ்பாவில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு இளம்பெண்களை வைத்து விபசாரம் செய்வது தெரியவந்தது. அதாவது ஸ்பாவில் 2 இளம்பெண்கள் மூலம் மசாஜ் செய்ய வரும் நபர்களுக்கு ஆசையை தூண்டி அவர்களுடன் உடலுறவு வைப்பதும், வேலை தருவதாக கூறி இளம்பெண்களை அழைத்து வந்த ஸ்பா உரிமையாளர் மற்றும் மேனேஜர் அவர்களை விபசாரத்தில் தள்ளியதும் தெரியவந்தது.
இந்த ரெய்டில் 2 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். இதில் ஒருவர் உத்தர பிரதேசத்தை சேர்ந்தவர். இன்னொருவர் நாகாலாந்தை சேர்ந்தவர். மேலும் விபசாரம் நடத்தியதாக கூறி ஸ்பாவின் மேனேஜர் மணி கைது செய்யப்பட்டார். உரிமையாளர் உப்பன் தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
முன்னதாக, 8 நாட்களுக்கு முன்பு இந்திரா நகர் 12வது மெயினில் உள்ள ஸ்பாவில் போலீசார் ரெய்டு நடத்தினர். அப்போதும் அங்கு விபசாரம் நடப்பது தெரியவந்தது. அங்கு தாய்லாந்தை சேர்ந்த இளம்பெண் உள்பட மொத்தம் 7 பெண்கள் மீட்கப்பட்டனர். ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர்களிடம் விசாரணை நடத்தியபோதும் இளம்பெண்களிடம் பெங்களூரில் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றி அழைத்து வந்து விபசாரத்தில் தள்ளியது தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications