வந்தாச்சு சென்னை-பெங்களூர்-மைசூர் வந்தே பாரத் ரயில் தோராய அட்டவணை.. சதாப்தியை விட கொஞ்சம் வேகம்!
சென்னை: சென்னையில் இருந்ந்து மைசூருக்கு வருகிற 11-ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ள சென்னை - மைசூரு வந்தே பாரத் ரயில் சேவைக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சதாப்தி ரயில் கால அட்டவணையுடன் வந்தே பாரத் ரயிலை ஒப்பிட்டு பார்க்கலாம்
நாடு முழுவதும் தினமும் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் பயணிக்கின்றனர்.
தொலைதூர பயணங்களுக்கு சொகுசு மற்றும் பாதுகாப்பான சேவை அளிப்பதால் ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மட்டும் இன்றி வசதி படைத்தவர்கள் கூட ரயிலில் செல்வதையே மிகவும் விரும்புகின்றனர்.

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்
இதை கருத்தில் கொண்டு இந்திய ரயில்வேயும் பல்வேறு வசதிகளை மேம்படுத்தி வருகின்றன. அந்த வகையில், முக்கிய நகரங்களை அதிவேகத்தில் இணைக்கும் வகையில் நாடு முழுவதும் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவை தொடங்கப்பட்டு வருகிறது. இதுவரை 4 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் 5-வது ஆக சென்னை- மைசூரு இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கப்பட உள்ளது.

வந்தே பாரத் ரயில் அட்டவணை
பெங்களூரு வழியாக சென்னை-மைசூரு இடையே இயக்கப்படும் இந்த ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 11 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். சென்னை செண்டிரலில் இருந்து புறப்படும் இந்த ரயில் ஜோலார்பேட்டை வழியாக பெங்களூர் சென்று மைசூருவை அடையும். இந்த ரயில் இயங்கும் தோராயமான அதாவது, உறுதிப்படுத்தப்படாத நேர அட்டவணை வெளியாகியுள்ளது.

புதன்கிழமைக்கு பொருந்தாது
தினமும் காலை காலை 5.50 மணிக்கு சென்னை சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும் இந்த ரயில் ஜோலார்பேட்டைக்கு 8.50 மணிக்கும், கே.எஸ்.ஆர் பெங்களூரு ரயில் நிலையத்திற்கு 10.25 மணிக்கு வந்து சேரும். 5 நிமிடங்கள் நின்று 10.30 மணிக்கு புறப்பட்டு மைசூருவை 12.30 மணிக்கு சென்றடையும். மைசூருவில் இருந்து மதியம் 1.05 மணிக்கு புறப்படும் இந்த ரயில் ஜோலார் பேட்டைக்கு 4.55 மணிக்கு வந்தடைகிறது. இரவு 7.45 மணிக்கு சென்னை வந்தடைகிறது. 504 கி.மீட்டர் தொலைவை 6..40 மணி நேரத்தில் கடக்கிறது. இந்த ரயில் 75.60 கி.மீட்டர் வேகத்தில் செல்லும். இந்த அட்டவணை புதன்கிழமைக்கு பொருந்தாது.

சதாப்தி ரயில்
ஏற்கனவே இந்த வழித்தடத்தில் சதாப்தி ரயில் இயக்கப்பட்டு வருவதால் அந்த ரயின் கால அட்டவணையுடன் வந்தே பாரத் ரயிலை ஒப்பிட்டு பார்க்கலாம். சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து காலை 6 மணிக்கு கிளம்பும் சதாப்தி ரயில் ஜோலார் பேட்டைக்கு காலை 8.50 மணிக்கு வந்து சேரும். கே.எஸ்.ஆர் பெங்களூரு சிட்டி ரயில் நிலையத்திற்கு 10.45 மணிக்கு வரும். இந்த ரயில் மைசூருக்கு மதியம் 1 மணிக்கு வந்து சேரும். இந்த ரயிலின் மொத்த பயண நேரம் 7 மணி நேரம் ஆகும். ரயிலின் சராசரி வேகம் 72.04 கி.மீட்டர் ஆகும்.

மணிக்கு 69.56.கி.மீட்டர்
அதேபோல், மைசூருவில் இருந்து பிற்பகல் 2.15 மணிக்கு கிளம்பும் இந்த ரயில் கே.எஸ்.ஆர் ரயில் நிலையத்திற்கு பிற்பகல் 4.10/4.15 மணிக்கு வரும். ஜோலார்பேட்டைக்கு மாலை 6.25 மணிக்கு வரும். சென்னைக்கு இரவு 9.30 மணிக்கு வந்து சேரும். மொத்த பயண நேரம் 7.15 மணி நேரம் ஆகும். ஒட்டுமொத்த வேகம் சராசரியாக மணிக்கு 69.56.கி.மீட்டர் வேகத்தில் செல்லும். செவ்வாய்க்கிழமைக்கு இந்த அட்டவணை பொருந்தாது.
-
தவெக விற்கு தேர்தலில் ஆதரவு கிடையாது.. ‘ஜனநாயகன்’ லீக் காட்சிகளால் பின்வாங்கிய முஸ்லிம் மக்கள் கழகம் -
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
பெட்ரோல் டூவீலர்களுக்கு மொத்தமாக தடை.. அரசு திட்டவட்டம்! ஏற்கனவே பைக் வைத்திருப்போர் என்ன செய்யணும்? -
இரவிலேயே பாய் விரித்து இடம்.. நெல்லையில் எல்கேஜி அட்மிஷனுக்காக விடிய விடிய காத்திருந்த பெற்றோர்கள் -
மணி பிளான்ட் இனி தேவையில்லை.. காந்தம் போல பணத்தை ஈர்க்கும் 'அந்த' ஒரு செடி! வீட்டில் எங்கே வைக்கலாம் -
6 மாதங்களில் அண்ணாமலைக்கு தமிழக முதல்வர் பதவி! இபிஎஸ் தலையில் இடியை இறக்கிய திருமாவளவன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ்: மயில் கர்ப்பத்தை பற்றி பழனி சொன்ன விஷயம்! கோபத்தில் சரவணன்.. கதிர் செய்த நல்ல விஷயம் -
Gold: பசிபிக் கடலுக்கடியில் குவிந்து கிடக்கும் ”தங்கம்” கண்டுபிடித்த விஞ்ஞானிகள்.. எம்மாடியோவ்! -
ராகுல் காந்தியை பார்த்ததும்.. திரும்பி வந்து பேசிய பிரதமர் மோடி.. நாடாளுமன்ற வளாகத்தில் நடந்த சுவாரசியம் -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
ஈரான் கொடுத்த ஷாக்.. ஆடிப்போன அமெரிக்கா.. பூதாகரமாக வெடிக்கும் கண்ணிவெடி விவகாரம்! -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்!












Click it and Unblock the Notifications