எல்லாம் எங்களுக்கு தெரியும்.. கரப்பான் பூச்சி ஜனதாவுக்கு பாகிஸ்தான் நிதி! பாஜக அமைச்சர் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை பரப்புவதற்காக வெளிநாட்டு அமைப்புகளிடம் இருந்து சிலர் சட்டவிரோதமாக நிதி பெறுவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். குறிப்பாக கரப்பான் பூச்சி ஜனதா கட்சி உடன் தொடர்புடைய சில சமூக செயற்பாட்டாளர்கள், இந்தியாவுக்கு எதிரான அமைப்புகளிடம் இருந்தும் பணம் பெறுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில காலமாகவே கரப்பான் பூச்சி கட்சி சார்பில் தீவிரமான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. முதலில் நீட் வினாத்தாள் லீக், பிறகு தேர்தல் ஆணையருக்கு எதிரான போராட்டங்கள் என தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு இளைஞர்கள் மத்தியில் ஆதரவும் கூட அதிகமாகவே கிடைத்து வருகிறது.

BJP Cockroach Janata Party

வெளிநாட்டு நிதி

இதற்கிடையே பெங்களூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் சில பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். கரப்பான் பூச்சி ஜனதா தலைவர்களுக்கு வெளிநாட்டு அமைப்புகளிடம் இருந்து பணம் வருவதாக அவர் சாடியுள்ளார். குறிப்பாக ஆஷுதோஷ் ரங்கா பாகிஸ்தான் அரசியல்வாதிகளிடம் இருந்து பணம் பெற்றதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.

ஜிதேந்திர சிங் மேலும் பேசுகையில், "இந்தியாவுக்கு எதிராக மோசமான கருத்துகளை பரப்ப நமது நாட்டில் இருக்கும் சில அமைப்புகளும் வெளிநாட்டு அமைப்புகளும் முயன்று வருகின்றன. இதற்காக அவர்கள் நிதியுதவியும் செய்து வருகிறார்கள். குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான தன்னார்வ அமைப்புகள், வெளிநாட்டு நிதி பெறும் அமைப்புகள் மூலம் இத்தகைய செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுகிறது.

பாகிஸ்தான் நிதி

இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை மக்களிடம் திட்டமிட்டுப் பரப்புகிறார்கள். நாட்டின் நலன்களுக்கு எதிரான கருத்துகளை திட்டமிட்டு உருவாக்கி, அவற்றை ஒரு குறிப்பிட்ட நோக்கத்துடன் மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் முயற்சிகள் நடைபெறுகிறது" என்றார். அப்போது ஜிதேந்திர சிங் சில நபர்களின் பெயர்களையும் குறிப்பிட்டார். கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் அபிஜீத் திப்கே, அமெரிக்காவில் இருந்து நிதி பெற்றதாக அவர் குற்றம்சாட்டினார். அதேபோல் ஆஷுதோஷ் ரங்கா பாகிஸ்தான் அரசியல்வாதிகளிடம் இருந்து பணம் பெற்றதாகவும் தெரிவித்தார்.

குற்றச்சாட்டு

மத்திய அமைச்சரின் இந்த பேச்சு இப்போது விவாதமாகியுள்ளது. ஏற்கனவே கரப்பான் பூச்சி கட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருந்தன. இந்தச் சூழலில் ஜிதேந்திர சிங் கூறிய இந்த கருத்துகள், அதிலும் பாகிஸ்தான் அரசியல்வாதிகளிடம் இருந்து நிதி வருவதாக கூறியிருப்பது இந்த விவகாரத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.

இருப்பினும், ஜிதேந்திர சிங் வெறுமன குற்றச்சாட்டுகளாகவே இதை முன்வைத்தார். இது தொடர்பாக எந்தவொரு ஆவணங்கள் அல்லது ஆதாரங்களை அவர் வெளியிடவில்லை.. அபிஜீத் திப்கே, ஆஷுதோஷ் ரங்கா ஆகியோருக்கு நிதி வந்ததாக கூறிய போதிலும், அது குறித்த பரிவர்த்தனை தகவல்களையும் அவர் பகிரவில்லை.

பதிலடி

இதற்கிடையே இந்த குற்றச்சாட்டுகளுக்கு கரப்பான்பூச்சி ஜனதா கட்சி பதிலடி கொடுத்துள்ளது. மத்திய அமைச்சர் பொறுப்பில் இருக்கும் ஒருவர் ஆதாரமில்லாமல் இதுபோல வாய்க்கு வந்ததை பேசுவது சரியான போக்கு இல்லை என கரப்பான் பூச்சி ஜனதா கூறியுள்ளது. அக்கட்சி தனது ட்விட்டரில், "இதுதான் வெட்கக்கேடான உண்மை. ஒரு மத்திய அமைச்சர் எதை வேண்டுமானாலும் சொல்லிவிட்டு தப்பித்துவிட முடியும். இதனால் தான் இன்று உயர் பதவிகளில் இருப்பவர்களின் வார்த்தைகளுக்கு கூட மதிப்பு இல்லை" என்று சாடியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+