காவிரி காவிரினு கேக்கறாங்க! திறந்துவிட்டால் கடலில் கலக்கவிடுறாங்க! வாட்டாள் நாகராஜ் அடாவடி பேச்சு

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: மேகதாது அணை கட்ட எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழகத்தைக் கண்டித்து, கர்நாடகா- தமிழக எல்லையில் கன்னட அமைப்புகள் இன்று போராட்டம் நடத்தி வரும் நிலையில் தமிழக மக்கள் இன்று கர்நாடகாவுக்கு வரக் கூடாது என வாட்டாள் நாகராஜ் அடாவடி தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்திற்கு செல்லும் காவிரி நீர் வீணாக கடலில் கலக்கிறது என்றும் தவறான விஷயத்தை பரப்பி வருகிறார்.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகா முயற்சித்து வருகிறது. அவ்வாறு அணை கட்டினால் தமிழகத்திற்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட கிடைக்காது, அது போல் இந்த அணை கட்டுவது தமிழகம் மட்டுமில்லை கர்நாடகா விவசாயிகளுக்கும் பாதகத்தை தரும் என தமிழக அரசு எதிர்ப்பு தெரிவிக்கிறது.

vattal Nagaraj cauvery

இது தொடர்பாக அவ்வப்போது பிரச்சனை எழுவதும், இதை காவிரி மேலாண்மை ஆணையம் தலையிட்டு சமரசம் செய்து விடும். அணையை கட்டியே தீருவோம் என கர்நாடகா அநியாயமாக பேசும். அணை கட்ட விட மாட்டோம் என தமிழகம் பதிலடி கொடுக்கும்.

இப்படியே இந்த காவிரி பிரச்சனை தமிழகம், கர்நாடகா இடையே ஒரு தீர்வே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மேகதாதுவில் அணை கட்டக் கூடாது என்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடத்த விஜய், கர்நாடகா செல்வதாக இருந்தது.

ஆனால் கன்னட அமைப்புகள் விஜய்யின் புகைப்படத்தை எரித்து சேதப்படுத்தி எதிர்ப்பை காட்டினர். மேலும் காவிரி நீர் கேட்டு விஜய் கர்நாடகா வந்தால் பெங்களூர் விமான நிலையத்தை முற்றுகையிடுவோம் என தெரிவித்தனர்.

இதையடுத்து கர்நாடகாவில் நிலைமை மோசமாக இருப்பதால் தற்போதைக்கு விஜய் கர்நாடகாவுக்கு வர வேண்டாம் என மாநில முதல்வர் சிவக்குமார் தெரிவித்தார்.

மேலும் மேகதாதுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக அரசை கண்டித்து வாட்டாள் நாகராஜ் ஆகஸ்ட் 13 ஆம் தேதி பந்த் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து மெஜஸ்டிக் பஸ் நிலையத்திற்கு நேற்று சென்ற வாட்டாள் நாகராஜ், அனைவரும் முழு அடைப்பிற்கு ஒத்துழைக்குமாறு அழைப்பு விடுத்தாராம்.

அப்போது அவர் கூறியிருப்பதாவது: வரும் 13 ஆம் தேதி மாநிலம் தழுவிய முழு அடைப்புக்கு அனைத்து ஏற்பாடுகளை கன்னட அமைப்புகள் செய்திருக்கிறோம். காவிரியில் தண்ணீர் திறந்து விடும் விவகாரத்தில் காங்கிரஸ் அரசு மக்களை தவறாக வழிநடத்தி வருகிறது.

காவிரி பிரச்சனை குரித்து தமிழக சட்டசபையில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி இடையே விவாதம் செய்துகிட்டு இருக்கிறார்கள். ஆனால் கர்நாடகா சட்டசபையில் அப்படி எதுவும் நடைபெறவில்லை. நாம் திறந்துவிடும் தண்ணீர், தமிழகத்தில் வீணாக கடலில் கலக்கிறது. இது நம் மாநிலத்திற்கு நஷ்டம்.

கேஆர்எஸ், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி உள்ளிட்ட அணைகள் நமக்கு சொந்தமானவை. நமது விவசாயிகளுக்காக கட்டப்பட்ட அணைகள் அவை. மேகதாதுவும் நம் விவசாயிகளுக்காக கட்டப்பட வேண்டும். இதற்கு இடைஞ்சலாக இருக்கும் தமிழக அரசை கண்டித்து அத்திப்பள்ளியில் போராட்டம் நடத்தவுள்ளோம்.

அந்த போராட்டத்தின் போது தமிழக வாகனங்களோ, மக்களோ கர்நாடகாவுக்கு வரக் கூடாது. இவ்வாறு வாட்டாள் நாகராஜ் அடாவடியாக தெரிவித்துள்ளார். வாட்டாள் நாகராஜ் போன்ற அமைப்பினரின் போராட்டத்தால் தமிழக - கர்நாடக எல்லையில் பதற்றம் நீடித்து வருகிறது.

காவிரி நீரை ஒரு முறை கூட காவிரி நடுவர் மன்றம் தீர்ப்புக்கேற்ப கர்நாடகா திறந்துவிட்டதே இல்லை. இதில் நாம் கடலில் கலக்க விட்டுவிடுகிறோம் என வாட்டாள் நாகராஜ் பொய் பேசுகிறார். மழை நீரை கூட ஒரு தொட்டி கட்டி சேமித்து அதன் மூலம் நிலத்தடி நீரை உயர்த்தி வரும் நாம் காவிரி நீரை வீணாக கடலில் கலக்கவிடுவோமா?

காவிரி பிரச்சனையின் போது வாட்டாள் நாகராஜுக்கு எதிராக ரஜினிகாந்த் கடுமையான வார்த்தைகளை பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அது போல் ஒவ்வொரு முறையும் காவிரி பிரச்சனை எழும் போதெல்லாம் தமிழ் படங்கள் திரையிடுவதை தவிர்ப்பது, அத்துடன் தமிழக நடிகர் நடிகைகளின் போஸ்டர்களை கிழிப்பது, தமிழ் படங்கள் ஓடும் திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்துவது உள்ளிட்டவைகளை இந்த கர்நாடகா அமைப்பினர் செய்து வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+