இது லிஸ்ட்லயே இல்லயே.. கர்நாடகாவில் "சீறப்போகும்" விடுதலை சிறுத்தைகள்? திருமாவளவன் ஸ்கெட்ச்
பெங்களூர்: கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கும் ஐடியாவில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அது தொடர்பான முன்னெடுப்புகளை தொடங்கிவிட்டது.
கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் மூத்த தலைவர் சித்த ராமையாவுடன் தொடர்ந்து வலுவான நட்பை பேணி வரும் திருமாவளவன், அவர் மூலம் காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்று ஒரு தொகுதியிலாவது விசிக வேட்பாளரை களமிறக்க காய் நகர்த்தி வருகிறார்.
கர்நாடகா, ஆந்திரா, கேரளா, மகாராஷ்டிரா என தமிழகத்தை கடந்து பல்வேறு மாநிலங்களில் கட்சியின் அமைப்பை பலப்படுத்தி வரும் திருமாவளவன், தேசியளவில் புது கணக்கு ஒன்றை வகுத்து வருகிறார்.

கர்நாடக தேர்தல்
கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் படுஜோராக நடைபெற்று வருகின்றன. 224 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை தக்க வைப்பதற்கான வியூகங்களை பாஜக பக்காவாக வகுத்துவிட்டது. அதேவேளையில் காங்கிரஸ் தரப்பிலும் பாஜகவை எதிர்கொள்வதற்கான செயல்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக பிரச்சாரக் களத்தை உயிர்ப்புடன் வைக்க திட்டமிட்டுள்ள காங்கிரஸ், திருமாவளவன் போன்ற வலதுசாரி சிந்தனைக்கு எதிரான தலைவர்களை பரப்புரைக்கு பயன்படுத்திக் கொள்ள முனைப்புக் காட்டி வருகிறது.

சித்த ராமையா
இதனிடையே கர்நாடகாவில் ஏற்கனவே விசிகவின் கட்டமைப்பை நிறுவியுள்ள திருமாவளவன் அவ்வப்போது பெங்களூருக்கு சென்று தனது கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார். இந்நிலையில் வரும் கர்நாடக சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணியில் ஒரு தொகுதியை கேட்டு வாங்க திட்டமிட்டுள்ள திருமாவளவன், இதற்காக சித்த ராமையா மற்றும் தினேஷ் குண்டுராவ் மூலம் காய் நகர்த்தி வருகிறார். இவரது முயற்சிக்கு டி.கே.சிவக்குமார் தரப்பு கிரீன் சிக்னல் காட்டுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

கர்நாடக விசிக
இதனிடையே வரும் 8ஆம் தேதி அன்று கர்நாடக மாநில விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம் பெங்களூரில் நடைபெறும் என அறிவித்துள்ள திருமாவளவன், சட்டமன்றத் தேர்தல் குறித்து விவாதிக்கவும், கட்சியின் கட்டமைப்பை வலிமைப்படுத்தவும் 4 பிரதிநிதிகளை அனுப்பி வைக்கிறார். தகடூர் தமிழ் செல்வன், பாலசிங்கம், கோவேந்தன், நந்தன் ஆகிய நான்கு பேரையும் தனது பிரதிநிதியாக பெங்களூர் அனுப்பி வைக்கும் திருமாவளவன் விரைவில் தினேஷ் குண்டுராவை தேர்தல் சீட் தொடர்பாக சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

போட்டியிட திட்டம்
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில நிர்வாகி ஒருவரிடம் நாம் பேசிய போது, ''கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் விசிக போட்டியிடுவது தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டு இருக்கின்றன. தமிழர்கள் அதிகம் வசிக்கக் கூடிய 2 தொகுதிகளில் போட்டியிட விரும்புகிறோம். இன்னும் இது தொடர்பாக எந்த முடிவும் இறுதி செய்யப்படவில்லை. இப்போதே அனைத்து விவரங்களையும் சொல்ல முடியாது. '' எனத் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications