பெங்களூரு அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கிளாஸ்ரூமிலேயே.. "ஏடாகூடமாக" சிக்கிய டீச்சர்.. அதை கண்ணால் பார்த்துவிட்ட ஆபீஸர்.. எல்லாம் கலிகாலம்

கிளாஸ்ரூமிலேயே மதுபோதையில் வகுப்பெடுத்துள்ளார் பள்ளி ஆசிரியை ஒருவர்

Google Oneindia Tamil News

பெங்களூரு: கிளாஸ்ரூமிலேயே ஏடாகூடம் செய்து சிக்கி உள்ளார் ஒரு டீச்சர்.. விஷயம் தெரிந்து பள்ளிக்கல்வி அதிகாரி விரைந்து வந்துவிட்டார்.. நேரிலே அவர் கண்ட காட்சி இருக்கே.. ஓ மை காட்..!

சில தினங்களுக்கு முன்பு, பீகாரில் ஒரு சம்பவம் நடந்தது.. அந்த டீச்சர் பெயர் பபிதா குமாரி.. கிளாஸ் ரூமில் பட்டப்பகலில், மாணவர்கள் உட்கார்ந்திருந்தபோதே, சேரை இழுத்து ஜன்னல் ஓரமாக போட்டுக் கொண்டு படுத்துவிட்டார்..

காலை தூக்கி எதிரே இருந்த டேபிள் மீது வைத்துகொண்டு, சேரில் சாய்ந்து தூங்கவும் ஆரம்பித்துவிட்டார்.. தூங்குவதற்கு முன்பேயே, தன் வகுப்பில் உள்ள மாணவியை கூப்பிட்டு, தனக்கு விசிறி விட சொல்லிவிட்டு படுத்துக் கொண்டார்.

டீச்சர்களை கழிவறையில் பூட்டி வைத்து.. அத்துமீறிய மாணவர்கள்.. கவுன்சிலிங் கொடுக்க உத்தரவு டீச்சர்களை கழிவறையில் பூட்டி வைத்து.. அத்துமீறிய மாணவர்கள்.. கவுன்சிலிங் கொடுக்க உத்தரவு

விசிறி

விசிறி

அந்த மாணவியும் விசிறிவிட, டீச்சரும் நன்றாக குறட்டை விட்டு தூங்க, பல மாணவிகள், தரையில் உட்கார்ந்து இதை வேடிக்கை பார்க்க.. அந்த கிளாஸ் பிள்ளைகளே சிலர், இதை வீடியோ எடுக்க.. பெரும் பரபரப்பாக இந்த விஷயம் போய்விட்டது.. உடனே நிர்வாகம் தரப்பில், பிள்ளைகளுக்கு பாடம் நடத்தாமல் இப்படி தூங்கினால் எப்படி? என்று விளக்கம் கேட்கப்பட்டது.. அதற்கு பபிதா குமாரி, "எனக்கு உடம்பு சரியில்லை.. அதனால்தான் லைட்டா தூங்கிட்டேன்" என்றார்.. இதற்கு பிறகு பபிதா குமாரி டீச்சர் சம்பவம் என்ன ஆனது என்று தெரியவில்லை.

 கொண்டை + சேர்

கொண்டை + சேர்

இந்த சம்பவம் நடந்த அடுத்த சில தினங்களிலேயே இன்னொரு சம்பவம் உத்தரபிரதேசத்தில் ஹர்தோய் மாவட்டத்தில் நடந்தது.. இந்த டீச்சர் பெயர் டீச்சரின் பெயர் ஊர்மிளா சிங்.. போகரி ஆரம்பப் பள்ளியில் பணியாற்றுகிறார். அன்றைய தினம் கிளாஸ்ரூமில் பிள்ளைகளுக்கு பாடம் நடத்தாமல், தனக்கு மசாஜ் செய்யுமாறு ஒரு மாணவனை மிரட்டியுள்ளார்... மாணவனும் டீச்சருக்கு பயந்து, கையில் மசாஜ் செய்துள்ளான்.. தலையில் கொண்டையை அள்ளி முடித்து கொண்ட டீச்சர், ஒரு சேரை இழுத்து கிளாஸ் ரூமிலேயே ஒரு ஓரமாக உட்கார்ந்து கொண்டார்..

 வாட்டர் பாட்டில்

வாட்டர் பாட்டில்

ஒரு கையில் தண்ணீர் பாட்டிலை வைத்து கொண்டும், குடித்துக் கொண்டும், காலை ஆட்டிக் கொண்டே, மசாஜ் செய்யும் சிறுவனை பார்த்து மிரட்டுகிறார்.. இந்த வீடியோவையும் அங்கிருந்த பிள்ளைகளே வீடியோ எடுத்தனர்.. இந்த சம்பவமும் என்ன ஆனது என்று தெரியாது. இந்நிலையில், இன்னொரு நிகழ்வு கர்நாடக மாநிலத்தில் நடந்துள்ளது.. இந்த டீச்சர் வேற லெவலுக்கு போய்விட்டார்.. தும்கூர் அருகே சிக்கசாரங்கி அருகே அந்த தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது..

 சிக்கிய டீச்சர்

சிக்கிய டீச்சர்

இந்த டீச்சர் பெயர் கந்தலஷ்மா என்பதாகும்.. இவர் எப்பவுமே தண்ணி அடித்துவிட்டுதான் பிள்ளைகளுக்கு பாடம் நடத்துவாராம்.. மதுபோதையில் அந்த ஸ்கூலில் மற்ற எல்லா டீச்சர்களுடனும் சண்டை போடுவாராம்.. இந்த புகார் பல நாட்களாகவே எழுந்துவந்த நிலையில், இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.. இதனால் பொறுமையிழந்த கிராம மக்கள், ஆத்திரமடைந்து டீச்சரை சுற்றி வளைத்து விட்டனர்.. போதையில் பாடம் நடத்தி கொண்டிருந்தபோது, கையும் களவுமாக பிடித்துவிட்டனர்.. அந்த பள்ளிக்கு பூட்டுப் போட்டு, போராட்டத்திலும் ஈடுபட்டனர்..

கிளாஸ்ரூமிலேயே

கிளாஸ்ரூமிலேயே

அதற்குள் இந்த விஷயம் கேள்விப்பட்டு, பள்ளிக்கல்வி அலுவலர் நேரடியாக வந்துவிட்டார்.. டீச்சரின் அந்த கிளாஸ்ரூமை ஆய்வு செய்தார்.. அங்கிருந்த டேபிள் டிராயரை திறந்து பார்த்தபோது, ஏகப்பட்ட மதுபாட்டில்களை டீச்சர் அங்கு வைத்திருந்ததை பார்த்து ஆபீசரே ஆடிப்போய்விட்டார்.. பின்னர் இதுகுறித்து உரிய நடவடிக்கை டீச்சர் மீது எடுக்கப்படும் என்று உறுதி தந்ததையடுத்து, பெற்றோர்களும், கிராம மக்களும் போராட்டத்தை கைவிட்டனர்..

 முக சுளிப்பு

முக சுளிப்பு

இந்த தொடக்கப் பள்ளியில் கடந்த 25 வருடங்களாக, இந்த டீச்சர் வேலை பார்த்து வருகிறாராம்.. இவருக்கு குடும்பத்தில் நிறைய பிரச்சனைகள் இருந்து வந்துள்ளது.. குடும்ப தகராறு காரணமாக கடந்த 5 வருடங்களாக இப்படி குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டதாகவும் சொல்கிறார்கள்.. எந்நேரேமும் போதையில் இருப்பது, சக ஆசிரியைகளிடம் முகசுளிப்பையும் ஏற்படுத்தி வந்துள்ளது.. இதுகுறித்து அறிவுரை தந்தால், சக சக ஆசிரியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவர்களை மோசமாக திட்டிவிடுவாராம்.. குடும்பத்தில் உள்ள கோபத்தை மாணவர்களிடமும் இந்த டீச்சர் காட்டி வந்துள்ளார். இதனால், பிள்ளைகள், வீட்டில் தங்கள் பெற்றோரிடம் டீச்சர் பற்றி புகார் சொல்லி உள்ளனர்.

ஸ்டிரிக்ட் ஆக்‌ஷன்

ஸ்டிரிக்ட் ஆக்‌ஷன்

அதிர்ச்சி அடைந்த பெற்றோர்களும் அடிக்கடி ஆசிரியை நேரில் சந்தித்து பேசியும், கண்டித்தும் அறிவுரை வழங்கியும் வந்திருக்கிறார்கள்.. ஆனாலும் டீச்சர் யார் பேச்சையும் கேட்கவில்லையாம்.. அதனால்தான், பள்ளிக்கு பூட்டு போட்டு ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் மற்றும் கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடும் அளவுக்கு சென்றுவிட்டதாக கூறுகிறார்கள். இப்போதைக்கு டீச்சரை, சஸ்பெண்ட் செய்துள்ளனர்.. ஆனால், துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படுமா? என்பது இனிமேல்தான் தெரியவரும். ஒழுக்கத்தை போதிக்க வேண்டிய ஆசிரியர்களே, இப்படியெல்லாம் அட்டகாசம் செய்தால், படிக்கும் பிள்ளைகளை யார்தான் வழிநடத்துவது?!

English summary
Very Worst behaviour Karnataka School Teacher come to School with drunken கிளாஸ்ரூமிலேயே மதுபோதையில் வகுப்பெடுத்துள்ளார் பள்ளி ஆசிரியை ஒருவர்
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X