மாநில அரசின் உரிமை என்னானது? பிரிட்டன் எழுத்தாளருக்கு பெங்களூரில் அனுமதி மறுப்பு.. காங்கிரஸ் ஆவேசம்
பெங்களூர்: கர்நாடக அரசின் அழைப்பின் பேரில், கருத்தரங்கு ஒன்றில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க வந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த பிரிட்டன் எழுத்தாளர் நிதாஷா கவுல் பெங்களூர் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டார். இந்த விவகாரத்தில் மத்திய அரசை கர்நாடக காங்கிரஸ் கடுமையாக சாடியுள்ளது.
கர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூரில் மாநில அரசு சார்பில் கருத்தரங்கு ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் பிரிட்டன் வெஸ்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியருமாக பணியாற்றி வரும் நிதாஷா கவுலுக்கு கர்நாடக அரசு அழைப்பு விடுத்து இருந்தது.

நிதாஷா கவுல் கருத்தரங்கில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகளும் எழுந்தன. இந்த நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்க கர்நாடக மாநிலம் பெங்களூர் விமான நிலையத்திற்கு வந்த நிதாஷா கவுல் விமானநிலையத்தில் வைத்தே தடுத்து நிறுத்தப்பட்டார். மேலும் அவரை அதிகாரிகள் அவரது நாட்டிற்கே திருப்பி அனுப்பினர்.
மாநில அரசின் உரிமையை நசுக்கும் விதமாக: கர்நாடக மாநில அரசின் அழைப்பின் பேரில் வந்தவருக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் அரசியல் ரீதியிலும் சர்ச்சையாக வெடித்துள்ளது. கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசுகுக்கும் பாஜகவுக்கும் இடையே வார்த்தை யுத்ததிற்கு இந்த விவகாரம் வித்திட்டுள்ளது. கர்நாடக அரசு அழைப்பு விடுத்த நபரை, மத்திய அரசு திருப்பிய அனுப்பியிருப்பது.... மாநில அரசின் உரிமையை நசுக்கும் விதமாகவும் மதிக்காமல் செயல்படுவதையும் காட்டுவதாகக மத்திய பாஜக அரசு செயல்படுவதாக விமர்சனங்கள் எழுந்து இருக்கின்றன.
ஆனால், இது குறித்து விளக்கம் அளித்துள்ள பாஜகவோ, நிதாசா கவுல் வெளிநட்டில் வசிக்கும் இந்தியர் என்றும் பயங்கரவாதிகள் மீது அனுதாபம் கொண்டவராக அறியப்படும் இவர், இந்தியாவுக்கு எதிராக விஷமத்தனமான கருத்துக்களை பரப்பிவருவதாகவும் கூறியுள்ளது. நிதாஷா கவுலை நாடு கடத்தியதற்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பாஜக பேசியுள்ளது.
கர்நாடக அரசு எதிர்ப்பு: இதற்கு கடும் எதிப்பு தெரிவித்துள்ள கர்நாடக மாநில சமூக நலத்துறை எம் சி மகாதேவப்பா கூறுகையில், மாநில அரசின் உரிமைகள் எவ்வறு எல்லாம் நசுக்கபடுகிறது என்பதற்கு இது ஒரு உதாரணம். இந்தியாவின் அரசியலைமைப்புக்கு முன் உள்ள ... பல சவால்களை நினைவுபடுத்தும் விதமாக மத்திய அரசின் செயல்பாடு அமைந்துள்ளது. தேசபக்தி மிக்க அனைத்து இந்தியர்களும் இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக ஒருங்கிணைந்து அரசியலைமைப்பை காக்க போராட வேண்டும்.
கூட்டாட்சி கொள்கையின் அடிப்படையில் நமக்கு அளிக்கப்பட்ட உரிமைகள் மீண்டும் நசுக்கப்பட்டுள்ளன. நிகழ்ச்சியை நடத்துவதும் மாநிலம், தனது வளர்ச்சி மற்றும் தேசிய நலனை எவ்வாறு மேம்படுத்துவது என்பது பற்றிய ஆலோசனைகள் அளிப்பது தொடர்பாக நிபுணர்களை அழைப்பது என்பது அரசின் உரிமையாகும். ஜனநாயகத்தின் தாய் என்று சொல்லிக்கொள்ளு நாம், நமது ஜனநாயகம் அளித்துள்ள விதிகளை முழுமையாக கடைபிடிக்க வேண்டியது அவசியம்" என்றார்.
-
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
நாங்க உங்க கூட இல்ல ப்ரோ.. செல்வப் பெருந்தகையை கழற்றி விடும் காங்? மாணிக்கத்துக்கு வந்த திடீர் மவுசு -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம்












Click it and Unblock the Notifications