Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காங்கிரஸால் தான் 3 தலைமுறைக்கு சொத்து சேர்த்துள்ளோம்.. கர்நாடக தலைவர் பரபர பேச்சு- சர்ச்சை

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்: காங்கிரஸ் கட்சியின் மூலம் 3 முதல் 4 தலைமுறைக்கு சொத்து சேர்த்துள்ளோம் என அக்கட்சியின் கர்நாடக மாநில மூத்த தலைவர் ரமேஷ் குமார் பேசியது சர்ச்சையாகி உள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருப்பவர் ரமேஷ் குமார். இவர் சபாநாயகர் மற்றும் அமைச்சராக செயல்பட்ட அனுபவம் கொண்டவர்.

இவர் தற்போது கோலார் மாவட்டம் சீனிவாசப்பூர் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக உள்ளார்.

பெங்களூரில் போராட்டம்

பெங்களூரில் போராட்டம்

இந்நிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கில் சேனியா காந்தியிடம் விசாரிக்க எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் பெங்களூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம், போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ரமேஷ் குமார் பங்கேற்று பேசினார். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். சோனியா காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியினர் இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இதுதொடர்பாக ரமேஷ் குமார் பேசியபோது கூறியதாவது:

உண்ணும் உணவுக்கு பலன்

உண்ணும் உணவுக்கு பலன்

இந்த நாடு உயிர்ப்புடன் இருக்க வேண்டும் என்றால் காங்கிரஸ் கட்சி நாட்டில் இருக்க வேண்டும். இதனால் கட்சி தலைவர்கள் அனைவரும் மனஸ்தாபங்களை மறந்து ஒன்றாக சேர்ந்து காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த வேண்டும். சின்னச் சின்ன பிரச்னைகளையெல்லாம் விட்டுவிடுவோம். சோனியா காந்திக்கு நிம்மதி கிடைக்க வேண்டும். அப்போதுதான் நாம் உண்ணும் உணவுக்கும் பலன் கிடைக்கும்.

 3 தலைமுறை சொத்து

3 தலைமுறை சொத்து

நேரு, இந்திரா, சோனியா என காந்தியின் பெயர் மூலம் அடுத்த 3 முதல் 4 தலைமுறைகளுக்கு போதுமான அளவுக்கு சொத்து சேர்த்துள்ளோம். தற்போது சோனியாவுக்காக நாம் தியாகம் செய்ய வேண்டும். அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். இதற்கு தயாராக இல்லாவிட்டால் நாம் சாப்பிடும் உணவு செரிமானம் ஆகாது. சுதந்திர போராட்டத்தின்போது நாட்டில் ஆர்.எஸ்.எஸ்., இந்து மகாசபா மற்றும் பாரதிய ஜனசங்கத்தினர் யாரும் சிறை சென்றது இல்லை'' என்றார்.

சர்ச்சையான பேச்சு

சர்ச்சையான பேச்சு

அதாவது காங்கிரஸ் கட்சியால் தான் நாம் அனைவரும் செல்வ செழிப்பாக வாழ்வதாகவும், இதனால் சோனியாவுக்காகவும், காங்கிரஸ் கட்சிக்காகவும் தொடர்ந்து போராட வேண்டும் என அவர் கூறினார். இந்நிலையில் தான் காங்கிரஸ் கட்சியினர் நேரு, காந்தியின் குடும்பத்தால் 3 முதல் 4 தலைமுறைக்கு சொத்து சேர்த்திருப்பதாக கூறியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

 பாஜக விமர்சனம்

பாஜக விமர்சனம்

இதனை பாஜகவினர் விமர்சனம் செய்கின்றனர். இதுபற்றி கர்நாடக மாநில பாஜக அமைச்சர் ஆர் அசோக் கூறுகையில், ‛‛பதவியில் இருந்தபோது காங்கிரஸ் கட்சியினர் அதிகளவில் சொத்து சேர்த்துள்ளனர் என்பதை ரமேஷ்குமார் வெளிப்படையாக கூறியுள்ளார். பாஜகவை விமர்சிக்க காங்கிரஸ் கட்சிக்கு தகுதியில்லை'' என்றார். இன்னொரு அமைச்சர் சுதாகர் கூறுகையில், ‛‛காங்கிரஸ் மிகப்பெரிய அளவில் ஊழல்களை செய்துள்ளது என்பதை ரமேஷ் குமார் ஒப்புக்கொண்டுள்ளார்'' என விளாசியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+