சாமி சிலையை தொட்ட சிறுவனுக்கு ரூ.60000 பைன்! "இனி அம்பேத்காரை கும்பிடுவோம்!" குடும்பம் பரபர முடிவு
கர்நாடகா: கர்நாடக மாவட்டம் கோலாரில் சாமி சிலையை தொட்டதற்காக குடும்பம் ஒன்றிற்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அந்த குடும்ப இனி கடவுளை நாங்களே வணங்கவே மாட்டோம் என்று முடிவு எடுத்துள்ளது.
இந்து மதத்தில் ஏற்றத்தாழ்வுகள், வேறுபாடுகள், மனுதர்மத்தில் இருக்கும் ஜாதி ஏற்றத்தாழ்வுகள், ஒடுக்குமுறைகள் இருப்பதாக திமுக எம்பி ஆ. ராசா சமீபத்தில் பேசி இருந்தார்.ஆ. ராசா தனது பேச்சில், இந்துவாக இருக்கும் வரை நீ சூத்திரன்தான். உச்ச நீதிமன்றம் சொல்கிறது இந்து கிறிஸ்துவனாக இல்லை என்றால், நீ இஸ்லாமியனாக இல்லை என்றால், நீ பெர்சியனாக இல்லை என்றால் நீ இதுவாகத்தான் இருக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சொல்கிறது. இப்படிப்பட்ட கொடுமை வேறு எந்த நாட்டிலாவது இருக்கிறதா? இந்துவாக இருக்கும் வரை நாம் சூத்திரன் என்று குறிப்பிட்டார்.
இவரின் பேச்சை கேட்ட சிலர்.. இந்து மதத்தில் இப்போது ஜாதி எல்லாம் இல்லை. அதெல்லாம் முடிந்துவிட்டது. ஜாதி கொடுமை எல்லாம் ஆங்கிலேயர் காலத்தில்தான் இருந்தது என்று ,மறுப்பு தெரிவித்தனர்.

என்ன நடந்தது?
ஆனால் ஜாதி கொடுமை இப்போதும் இருக்கிறது என்பதை எடுத்துக்காட்டும் விதமாக கர்நாடகாவில் சம்பவம் ஒன்று நடைபெற்று உள்ளது. கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள உள்ளேரஹள்ளி பகுதியை சேர்ந்தவர் ஷோபம்மா. இவர்கள் கடந்த சில தினங்களுக்கு முன் பூதாயம்மா என்ற கோவில் திருவிழாவிற்கு சென்றுள்ளனர். அந்த கோவிலில் தலித்துகளுக்கு அனுமதி கிடையாது. அதோடு ஊர் திருவிழாவின் போது கோவில் சிலையை தலித் தெருவுக்குள் கொண்டு செல்லவும் மாட்டார்கள்.

அபராதம்
இந்த நிலையில்தான் ஷோபம்மாவின் 15 வயது மகன் ஊர் திருவிழாவில் கலந்து கொண்டு இருக்கிறார். இவர் திருவிழாவில் கலந்து கொண்டு, சாமி சிலை ஊர்வலத்தின் போது சிலையை தொட்டு உள்ளார். இவர் கை தவறி சிலையை தொட்டதை அதன் பூசாரி பார்த்து, ஊர் பஞ்சாயத்தில் புகார் கொடுத்துள்ளார். இதையடுத்து ஊர் சார்பாக அந்த குடும்பத்திற்கு 60 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. 60 ரூபாயை உடனே அபராதமாக கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ஊரை விட்டு குடும்பம் துரத்தப்படும் என்று அந்த பெண்ணிடம் கூறப்பட்டுள்ளது.

சர்ச்சை
இந்த சம்பவம் தற்போது தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. ஜாதி இல்லை என்று சொல்கிறீர்களே.. இதுக்கு பெயர் என்ன என்று பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். இந்த நிலையில் தற்போது அந்த சிறுவனின் தாயார் ஷோபம்மா பேட்டி அளித்துள்ளார். அதில், எங்கள் கடவுளுக்கே எங்களை பிடிக்கவில்லை என்றால் நாங்கள் ஏன் அந்த கடவுளை வணங்க வேண்டும். நாங்கள் இனிமேல் எங்கள் தலைவர் அம்பேத்காரை வணங்கிக்கொள்கிறோம்.

கடவுள்
எங்களை பிடிக்காத கடவுளை நாங்கள் ஏன் வணங்க வேண்டும். நாங்கள் தொட்டால் தீட்டு ஆகிவிடும் என்றால் அந்த கடவுள் எங்களின் கடவுளே இல்லை, என்று அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஊர்க்காரர்கள் தெரிவித்துள்ள புகாரில், தலித் தொட்டதால் சிலை தீட்டாகிவிட்டது. அதனால் சிலையை புதுப்பிக்க வேண்டும். அதை தூய்மை செய்ய வேண்டும். அதற்கு பூஜை செய்து வண்ணம் அடிக்க வேண்டும். இதற்கு 60 ஆயிரம் ரூபாய் தேவை என்பதால் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது, என்று தெரிவித்துள்ளனர்..
-
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு?












Click it and Unblock the Notifications