3 மேஜர் பாயிண்ட்..நடிகர் சுதீப்பை காங்கிரஸ் குறி வைப்பது ஏன்? கர்நாடகா தேர்தலில் ‛கை’ பிளான் இதுதான்
பெங்களூர்: கர்நாடகா மாநிலத்துக்கு இன்னும் 3 மாதத்துக்குள் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் காங்கிரஸ் உள்ளது. இந்நிலையில் தான் கர்நாடகாவில் முன்னணி நடிகராக உள்ள சுதீப்பை கட்சியில் இணைக்க முன்னாள் எம்பியும், நடிகையுமான ரம்யா மூலம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. நடிகர் சுதீப்பை காங்கிரஸ் கட்சியில் இணைக்க அக்கட்சி முயற்சிப்பதன் பின்னணியில் 3 மேஜர் விஷயங்கள் உள்ளதாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களில் நடிகர், நடிகைகள் அரசியலில் கால்பதித்து சாதித்து வருகின்றனர். எம்பி, எம்எல்ஏ, அமைச்சர்களாக அவர்கள் வலம் வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை முதல்வர் பதவிக்கும், திரையுலகத்துக்கும் பெரிய தொடர்பு உள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர்களான திமுகவின் கருணாநிதி, அதிமுகவின் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் திரையுலகில் சாதித்து அரசியலிலும் வெற்றி பெற்று முதல்வர் அரியனையில் அமர்ந்தவர்கள்.

கர்நாடகா அரசியலில் நடிகர்-நடிகைகள்
அந்த வரிசையில் அண்டை மாநிலமான கர்நாடகாவிலும் ஏராளமான திரைபிரபலங்கள் அரசியலில் சாதித்து வருகின்றன. மறைந்த நடிகர் அம்பரீஷ் எம்பி, எம்எல்ஏ, மத்திய அமைச்சராக இருந்துள்ளார். இவரது மனைவி நடிகை சுமலதா மண்டியா எம்பியாக உள்ளார். நடிகை உமாஸ்ரீ, குமார் பங்காரப்பா, தமிழில் வெளியான ‛பாட்ஷா' படத்தில் ரஜினிக்கு தம்பியா நடித்த சசிக்குமார் உள்ளிட்டவர்கள் காங்கிரஸில் செயல்பட்டு வருகின்றனர். நடிகர் ஜக்கேஷ் பாஜகவில் எம்பியாக இருந்து வருகிறார். நடிகராக இருந்த பிசி பட்டீல் கர்நாடக விவசாயத்துறை அமைச்சராக உள்ளார். நடிகர் பிரகாஷ் ராஜ் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூர் சென்ட்ரல் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு தோல்வியடைந்தார். தமிழில் குத்து, பொல்லாதவன் உள்பட பல படங்களில் நடித்த ரம்யா காங்கிரஸ் கட்சியில் உள்ளார். இவர் மண்டியா தொகுதி முன்னாள் எம்பியாவார். மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் நடிகர், நடிகைகள் பிரசாரம் செய்வது என்பது இயல்பான ஒன்றாக உள்ளது.

நடிகர் சுதீப்பை இழுக்கும் காங்கிரஸ்
கர்நாடகவை சேர்ந்த நடிகர் சுதீப்பும் நட்பின் அடிப்படையில் காங்கிரஸ், பாஜக வேட்பாளர்களுக்கு கடந்த சட்டசபை தேர்தலில் பிரசாரம் செய்துள்ளார். இந்நிலையில் தான் நடிகர் சுதீப்புக்கு காங்கிரஸ் கட்சியில் சேரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும் காங்கிரஸில் செயல்பட்டு வரும் நடிகை ரம்யா மூலம் அக்கட்சியின் தலைவர்கள் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. பேச்சுவார்த்தை நடந்தாலும் கூட சுதீப் தற்போது வரை பதில் எதுவும் சொல்லவில்லை. இந்நிலையில் தான் கர்நாடகாவில் ஏராளமான நடிகர், நடிகைகள் இருக்கும்போது நடிகர் சுதீப்பை மட்டும் காங்கிரஸ் கட்சி இழுக்க நினைப்பது ஏன்? என்பதன் பின்னணியில் 3 முக்கிய காரணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. அதன்விபரம் வருமாறு:
சாதி அரசியல்
கர்நாடகாவில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. தற்போது பாஜக ஆட்சி நடக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக அனைத்து சாதியினரின் ஓட்டுக்களையும் பெற வேண்டும் என்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது. நடிகர் சுதீப் வால்மீகி நாயக் சமுதாயத்தை சேர்ந்தவர். பழங்குடியினர் (எஸ்டி) பட்டியில் இந்த சமுதாயம் வரும். கர்நாடகாவில் வடகர்நாடகா மாவட்டங்களில் வால்மீகி நாயக் சமுதாய மக்கள் அதிகம் வசித்து வருகின்றனர். குறிப்பாக சித்ரதுர்கா, பல்லாரி உள்பட ஹைதரபாத்-கர்நாடகா மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் இந்த சமுதாய மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர்.

முதல் காரணம் என்ன?
சித்ரதுர்கா மாவட்டம் மொலக்கால்மூரு உள்பட சில தொகுதிகளில் வெற்றியை நிர்ணயம் செய்யும் சக்திகளாக வால்மீகி சமுதாய மக்கள் உள்ளனர். இந்நிலையில் தான் சுதீப் காங்கிரஸ் கட்சியில் இணையும்பட்சத்தில் அது கை சின்னத்துக்கு வலு சேர்க்கும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள் நம்புகின்றனர். இது முதல் காரணமாகும். மேலும் பாஜகவில் போக்குவரத்து துறை அமைச்சராக ஸ்ரீராமுலு உள்ளார். இவரும் வால்மீகி சமுதாயத்தை சேர்ந்தவர். அதோடு பல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர். வடகர்நாடகாவில் பலம்வாய்ந்த தலைவராக உள்ளார். இதனால் பல தொகுதிகளில் வால்மீகி சமுதாய மக்களி்ன் ஓட்டுக்களை பாஜக ஸ்ரீராமுலு மூலம் அறுவடை செய்கிறது. இது ஒருபுறம் இருக்க சுதீப்பும், ஸ்ரீராமுலுவும் நண்பர்களாக உள்ளனர். ஸ்ரீராமுலுவுக்கு ஆதரவாக சுதீப் பிரசாரம் கூட செய்துள்ளார். இந்நிலையில் தான் தற்போது சுதீப்பை காங்கிரஸ் கட்சிக்கு இழுத்தால் அது கதர் கட்சியின் ‛கை' சின்னத்துக்கு பிளஸ் பாயிண்டாக அமையும் என கூறப்படுகிறது.

2வது, 3வது காரணம் என்ன?
மேலும் சாதிக்கு அப்பாற்பட்டு நடிகர் சுதீப்புக்கு கர்நாடகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இளைஞர்கள் முதல் 40 வயது நிரம்பியவர்கள் வரை ஏராளமானவர்கள் சுதீப்பின் ரசிகர்களாக உள்ளன. சுதீப்பை காங்கிரசுக்கு கொண்டு வருவதன் மூலம் இளைஞர்கள் குறிப்பாக சுதீப்பின் ரசிகர்களின் ஓட்டுக்களை கவர வாய்ப்புள்ளது. இது 2வது காரணமாகும். அதோடு இவர் கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியை பெண்கள் அதிகமாக பார்ப்பதாக கூறப்படும் நிலையில் அதன் மூலம் பெண்களின் ஓட்டுக்களும் கிடைக்கும் என காங்கிரஸ் கட்சி நம்புகிறது. இது 3வது காரணமாகும்.

சுதீப் இணைவாரா?
இருப்பினும் கூட தற்போதைய சூழலில் சுதீப் காங்கிரஸ் கட்சியில் இணைவது பற்றி எதுவும் கூறவில்லை. ஆனாலும் கூட அவரை விடாமல் காங்கிரஸ் கட்சி கவனித்து வருகிறது. மேலும் கட்சியில் இணையவிட்டாலும் கூட பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என நடிகர் சுதீப்பிற்கு காங்கிரஸ் சார்பில் கோரிக்கை வைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications